இன்டர்வியூ இல்லாமல் வேலை வேணுமா... இதோ 8 டைம் லைன் சீக்ரெட்ஸ்!

Written By: kaniselvam.p

பல்வேறு வகையான திறமைகள் இருந்தாலும் அதை மொத்தமா எப்படி ரெஸியும்லா காட்டுவது என்பது பலருக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

ரெஸ்யூம் பல சமயங்களில் நமக்கு வில்லனாகவும் சில சமயங்களில் மட்டும் வேலை கிடைக்க உதவி செய்யும் துருப்புச் சீட்டாகவும் காட்சி அளிப்பது ஏன்? ரெஸ்யூம் என்பது நாளிதழ் அல்ல அத்தனை பக்கத்தையும் வரி விடாம வாசிக்க எனவே ரத்தினச் சுருக்கமாக எழுத பழகுங்கள். கூடவே இந்த 8 சீக்ரெட்ஸையும் மறக்காதீங்க.

8. ரெஸ்யூம் பாதி, ஆாள் மீதி

என்ன வழக்கமா ஆாள் பாதி ஆடை பாதினுதான் கேள்வி பட்டிருக்கேன். இது என்ன புதுசா அப்பிடினு கேள்வி வருதா? உண்மைதான் இப்போலாம் வேலைக்காக அனுப்பப்படும் நூற்றுக்கணக்கான ரெஸ்யூம்களில் ஐந்தோ, பத்தோதான் நேர்முகத்தேர்வுக்குத் தேர்வாகின்றன.

ஒரு சரியாக வடிவமைக்கப்பட்ட ரெஸ்யூம் உங்களை முழுமையாக எடுத்துக்காட்டி விடும் நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று. உங்களோட ரெஸ்யூம பார்த்தே இவர நம்ம கம்பெனிக்கு ஏன் செலக்ட் பண்ணக்கூடாது என்பது போல ரத்தினச் சுருக்கமாக எழுத பழகுங்கள்.

 

7. டுவிட் ரெஸ்யூம்

ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் எழுதுவது சுய சரிதை இல்லை. பக்கம்பக்கமா எழுத. உங்களை விற்பதற்கான ஒருபக்க விளம்பரம் அது ஒரே லைன்லா போடும் டுவிட் போல இருந்தால் கூடுதல் பலம்.

ஆம் ஒரு நிமிடம் மட்டும் ஓடி மறையும் விளம்பரத்தில் தான் கூற வந்ததை எப்படி தெளிவாக கூறுகிறார்களே அதே போல நாம்ம ரெஸ்யூம பாத்த உடனே பட்னு தூக்கற மாறி மேட்ரு இருக்கனும் பாஸ். அது ரொம்ப முக்கியம்.

இதுக்கு ரொம்ப எல்லாம் கஷ்டபட தேவை இல்லை. விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் பணி குறித்த எதிர்பார்ப்புகளை துல்லியமாக அறிந்துகொண்டு அதனை நிறைவு செய்யும் விதமாக உங்கள் ரெஸ்யூம் இருந்த போதும்.

 

6. ஃபான்ட்... லே அவுட்...

செங்கல் வைத்து கட்டிய அடுக்குமாடி விடு மாறி நம்மதிறமை முழுவதையும் அடுக்காம ரைட் ஃபான்ட்... லே அவுட்... ஸ்பேசிங் இருக்கற மாறி எழுத்துப்பிழை இல்லாமல் விண்ணப்பிக்கும் வேலைக்கு என்ன தேவையே அதை மட்டும் பார்த்ததும் பளிச்சுன்னு தெரியுற மாறி ரெடி பண்ணா போதும். ஏன்னா உங்க ரெஸ்யூம 6 செகண்ட் மட்டுதான் பாப்பாங்கனு ஆய்வு முடிவுகள் சொல்லுது.

5. புரஃபஷனல் லூக்

புரஃபஷனல் ரெஸ்யூம் என்பது நீங்கள் கூற வருவதை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். பிராண்ட் பாதி பேக்கேஜிங் பாதி என்பது போல் ஒரு பிராண்ட்க்கு பேக்கேஜிங் எப்படியோ அதே மாதிரிதான் வேலைக்கு ரெஸ்யூம். நம்மை வேலைக்கு எடுப்பதால் அவர்களுக்கு என்ன லாபம் என்பதை தெளிவாக நாசுக்காக சுட்டிக்காட்ட மறவாதீர்கள்.

4. ரெஸ்யூம் டெம்ப்ளேட்

ரெஸ்யூம்னு சொன்னதும் கூகுள் ஆண்டவர்ட இருந்து டக்குனு ரெண்டு லைனை எடுத்து நம்ம ரெஸ்யூம்லா பிட் பண்ணிட்டு போய்டே இருக்க கூடாது. தனித்துவமாக, நம்மை அடையாளப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

வழக்கமான சொல்லாடல்கள் இல்லாமல் உண்மை என்னவே அதை சுவரஸியமாக கொடுக்க முற்படுங்கள் இது திடீர் கேள்விகளுக்கு படீர் படீர்னு பதில் சொல்ல ஈஸியா இருக்கும். இல்லனா விக்கிபீடியா, டிக்ஷனரினு தேடும் படி ஆயிரும்பாத்துக்கோங்க.

 

3. சேல்ஸ்மேன்

ஆப்ஜெக்டிவ், கேரியர் சம்மரி என்ற 5 நொடி சமாச்சாரத்தை எவ்வளவு பிட்டா, ஷார்ப்பா, சிம்பிளா கொடுக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்க ரெஸ்யூம், உங்களை இன்டர்வியூக்கு அழைத்து செல்லுமா என்பதை முடிவு செய்யும்.

ஒரு பக்க ரெஸ்யூமில் இந்த வேலைக்கு எவ்வளவு தகுதியானவர் என்பதை நிரூபிக்கும் வகையில், உங்களை நீங்களே சிறப்பாக விற்கும் சேல்ஸ்மேனாக மாற்றிக்கொண்டால் மட்டுமே வேலை நிச்சயம்.

 

2. பெஸ்ட் ரெஸ்யூம்

பெஸ்ட் ரெஸ்யூனு எதுவுமே கிடையாது நீங்க சொல்ல வரும் விஷயத்தையும், நிர்வாகம் எதிர்பார்க்கும் விஷயத்தையும் மொத்தமா சேர்த்த கலவை மாதிரி பணி அனுபத்தில் ஆரம்பித்து பொழுது போக்கில் முடிக்கலாம். அங்கங்கோ நமது தனித்திறமைகளை நுழைக்க மறந்துறாதீங்க அது ரொம்ப முக்கியம்.

1. கிரியேட்டிவிட்டி மிக்ஸ்

இப்படியும் வேலை தேடலாம் என என்பது போல புதிதாக சிந்திக்க வேண்டும். பெங்களூருவை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி சுமுக் மேத்தா(21), லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஜி.கியு. இதழில் பணிபுரிய ஜி.கியு. இதழ் போலவே தன் ரெஸ்யூமை வடிவமைத்து வேலை பெற்றுள்ளார். ஜி.கியு. இதழ் ஆண்களுக்கான பிரத்யேக இதழாகும். புதிதாக இணையத்தை அலங்கரிங்கும் வசதிகளை பயன்படுத்துவதற்கு தங்களை தயார் செய்து கொள்ளுங்கள். இது படைப்பாற்றலை விரிவடைய செய்யும்.

வித்தியாசமான, படைப்பாற்றல் மிக்க ரெஸ்யூம் ஒன்று மட்டும் இருந்தால் போதும் வேலை வீட்டுக்கதவை தட்டும்.

 

English summary
8 Secrets That Can Revolutionize Your Job Search

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia