இந்த விசயமெல்லாம் தெரிந்தால் மட்டுமே வேலையில் நீங்க ஜொலிக்க முடியும்!

உலகம் முழுவதும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இதற்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்குதான் தட்டுப்பாடு நிலவுகிறது.

By Kani

வாய்ப்புகள் உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் இதற்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்குதான் தட்டுப்பாடு நிலவுகிறது. எது எப்படியே விண்ணப்பிக்கும் பணிக்கான தனித்திறமைகள் நம்மிடம் இருந்தால் வேலையை நாம் தேட வேண்டிய அவசியமில்லை. வேலை நம்மை தேடி வரும். அந்த வகையில் வேலை பெற உதவும் சில நுணுக்கங்கள்...

இந்த விசயமெல்லாம் தெரிந்தால் மட்டுமே வேலையில் நீங்க ஜொலிக்க முடியும்!

செய்முறை நுணுக்கம்:

நாம் எந்தத் துறையில் வேலை தேடுகிறீமோ, அந்தத் துறை சார்ந்த நிகழ்கால நுணுக்கங்களைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அல்லது இதைச் சார்ந்த கோர்ஸ்களை படிப்பதின் மூலம் இதை பெற முடியும். துறை சார்ந்த நண்பர்களின் தொடர்பில் இருப்பதின் மூலமாகவும் இதை பெற முடியும்.

அப்டேட்:

"நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமாக" கம்யூட்டர் முதல் கார் தயாரிப்பு வரை ஒவ்வொரு துறையிலும் இன்று அதிவேகமான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதே போல் நாம் விண்ணப்பிக்கும் துறை சார்ந்த மாறுதல்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

சமூக வலைதள கருத்து:

தற்போது வேலை வழங்கும் நிறுவனங்கள், விண்ணப்பிக்கும் நபர்களின் சமூகவலைதளங்களைப் பரிசோதிக்க ஆரம்பித்துள்ளன.

எனவே, சமூக வலைதளங்களில் எதிர்மறையான சிந்தனை கொண்டவராக ஏதேனும் கருத்து பதிவிட்டிருந்தால் அதை நீக்குவதும், இது போன்ற கருத்துகளை பதியாமல் இருப்பதும் வேலை கிடைக்க உறுதுணை புரியும் என்பதை மறவாதீர்கள்.

ப்ராஜெக்ட்:

கல்லூரியில் நீங்கள் மேற்கொண்ட ப்ராஜெக்ட் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருப்பது அவசியம்.

அது ஏதாவது நிறுவனத்தில் வாங்கியதாக இருந்தாலும் கூட அதைப்பற்றிய தகவல்களை அறியாமல் இருப்பது நேர்முகத்தேர்வில் எதிர்பாராத கேள்வியின் போது தடுமாறச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ரெக்கமெண்டேஷன்:

ரெக்கமெண்டேஷன் சில சமயம் தூக்கிவிடுவதாகவும், சில சமயம் காலைவாரி விடுவதாகவும் அமைந்துவிட வாய்ப்புள்ளது.

எனவே "தன்கையே தனக்குதவி" என்பது போல் உங்கள் திறமையை மட்டும் நம்பி செயல்படுங்கள் இதில் வெற்றியே தோல்வியோ உங்களுக்கு ஆத்மதிருப்தியை கொடுக்கும்.

தன்னம்பிக்கை:

சரியான வாய்ப்புகள் அமையும் போது அல்லது, அமைத்துகொள்ளும் போது வெற்றியானது சுலபமாக உங்களை பற்றிக்கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கை அவசியம் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

ஆப்ஷன்:

இந்த வேலை இல்லை என்றால் அது, என்று ஒரு ஆப்ஷனை எப்போது தேர்ந்தேடுக்கிறீர்களே அப்போதே உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். எனவே ஒரு குறிக்கோளுக்காக உழையுங்கள் அது நினைத்த மாத்திரத்தில் வெற்றியை கொடுக்கும்.

அனுபவம்:

உங்களது தோல்விகளை குறிப்பெடுத்து கொண்டே வாருங்கள், இது வருங்காலத்தில் உங்களை காக்கும் கேடயமாக வாய்ப்புள்ளதாக கூறுவார்கள்.

தோல்வி என்று எதுவுமே இல்லை. உங்களின் தயாரிப்பு குறைவகவோ,அல்லது அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே வாய்ப்புள்ள சமயத்தில் நீங்கள் பின் வாங்க நேரிடும். அனுபவங்களை வெற்றிக்கான சூத்திரமாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்.

ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி உலக அழகி பட்டம் கிடைத்தது? ஐஏஎஸ் தேர்வில் ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி உலக அழகி பட்டம் கிடைத்தது? ஐஏஎஸ் தேர்வில் "நச்" பதில்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
8 interview tips that will get you the job
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X