இன்டெர்வியூவில் ஜெயிக்கணுமா? இந்த 8 கேள்விக்கு பதில் தெரிஞ்சா போதும்!

Written By: Kani Selvam

வேலைக்கு நேர் முகத் தேர்வு வைப்பதற்கான நோக்கமே சிக்கலான கேள்விகளுக்கு எப்படி சமயோசிதமாக பதில் தருகிறீர்கள், என்பதை அறியவே.

சில சிம்பிலான விஷயங்களை கடைப்பிடித்தாலே நேர்முகத் தேர்வை ஜாலியா ஜமாய்கலாம்

8. ஸ்மார்ட் சர்வே

இன்டெர்வியூவை மேலோட்டமாக பார்க்காமால் நாம் செல்லவிருக்கும் கம்பெனியின் முழு விவரம் மட்டுமல்லாது, நம்மை நேர்காணல் செய்யவிருக்கும் நபர் பற்றிய விவரம். நாம் விண்ணப்பிக்கும் துறை சார்ந்த விவரங்களை முன்கூட்டியே அறிந்து வைப்பது இன்டெர்வியூ சமையத்தில் ஏற்படும் படபடப்பை தவிற்க பெரிதும் உதவும்.

7. கேள்விக்கென்ன பதில்

எப்பவுமே உங்களைப்பத்தி செல்லுங்க என்றதும் உங்க பேரிலிருந்து ஆரம்பிக்காதீர்கள், கேட்பவருக்கு உங்கள் பேர் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். இதுபோன்ற எதார்த்தமான கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பதை முன்பே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உணர்வுகளை தூண்டக்கூடிய கேள்விகளுக்கு உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடும், புன்னகையோடும் பதில் சொல்லுங்கள். இதுவே வெற்றிக்கான வழி. உங்களுடைய பதில் எதுவாகினும் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கட்டும்.

 

6. டிரெஸ் கோட்

கம்மல்ல இருந்து செப்பல் வரை டிரெஸ்ஸுக்கு மேட்சா போடணும்கிற கொள்கையில் ரொம்பவே உறுதியா இருக்கிறது தப்பில்லை. அதே சமயம் ரொம்ப அதிகமான நகைகளோ, மேக்கப்போ இல்லாம பத்துகிறது ரொம்ப முக்கியம். நல்ல ஸ்மார்ட் ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பு.

இந்த ஸ்மார்ட்டான 'டிரெஸ் கோட்' தான் உங்களை டல் ஆகாம பார்த்துகிறதோட, உங்களுக்கு தைரியத்தையும் கம்பீரத்தையும் கொடுக்கும்.

 

5. டைம் மேனேஜ்மெண்ட்

ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட ரயில் பத்து நிமிடம் தாமதமானதற்கு ஒரு உயர் அதிகாரி அரசின் சார்பாக மன்னிப்பு கோரியிருந்தார் என்ற செய்தி அண்மையில் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

எந்த காரியத்தையும் தாமதமின்றி - குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஜப்பானியர்களைப் பற்றிய மதிப்பினை உயர்த்தும் நிகழ்வு இது. அதேபோல இன்டெர்வியூக்கு டைம் மேனேஜ்மெண்ட் என்பது இன்றியமையாத ஒன்று. இன்டெர்வியூக்கு அழைக்கப்பட்டால் சரியான நேரத்துக்குச் சற்று முன்பே சென்றுவிடுவது நல்லது. பணியிடம், நிர்வாக சூழல் போன்றவைகளை அறிய ஒரு வாய்ப்பாக அமையும்.

 

4. ஈஸி அட்ராக்ட்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல புன்னகையோடு பதில் சொல்லுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும். நேர போய் இன்டெர்வியூவில் மட்டும்தான் பெர்பாமென்ஸ் பண்ணனுங்கற அவசியம் இல்லை. நாம முதன்முதலில் சந்திக்கும் ரிசப்ஷனிலிருந்து கூட ஆரம்பிக்கலாம்.

நிர்வாகம் அலுவலக ஊழியர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை எங்கிருந்து வேண்டுமானாலும் நோட்டமிடலாம் என்பதை மறவாதீர்கள்.

 

3. பாடிலாங்குவேஜ்

ஏற்கெனவே கிலி பிடித்திருக்கும் உங்களை இன்னும் பயமுறுத்தும் படி கேள்விகள் அமையலாம், தெரியுதோ, தெரியலையோ தெளிவா நிதானமா பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்டான 'டிரெஸ் கோட்' நேரான பார்வை, கம்பீரமான தோற்றம், கேள்வி கேட்பவருக்கே உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கும்.

2. 'மார்கெட்டிங்' உத்திகள்

உங்களை நீங்களே விற்க கற்றுக்கொள்ளுங்கள், கேள்விகளுக்கான பதில்களை ஷார்ட் ஆண்ட் ஸ்விட்டா சொல்ல கத்துக்கொங்க, பழைய சீரியல் மாறி சொன்னீங்கன்னா கேட்பவருக்கு கொட்டாவி வருவதோடு, வேலை கிடைக்காது என்பதும் நிச்சயம்.

உங்களோட திறமை என்னென்ன என்பதை ஒரு நிகழ்வின் மூலம் விவரிக்கலாம். இன்டெர்வியூவில் பலர் தோற்பதற்கு காரணம் அவர்கள் பலவீனமானவர்கள் என்பதாலோ, பயந்து நடுங்குபவர்கள் என்பதாலோ அல்ல. எப்படி தன் திறமைகளை விற்பது என்று தெரியாததால்தான்.

 

1. வாழ்த்து மடல்

இன்டெர்வியூ முடிச்சதும் தியேட்டரில் படம் முடிந்தாற்போல ஓடிவிடக்கூடாது. நேர்காணல் நடத்தியவர், கலந்து கொண்டவர்களுடன் கைகுலுக்குவது அவசியம். இது நமது ஆளுமையை மறைமுகமாக பிரதிபலிக்கும். அதேபோல இமெயில், குறுஞ்செய்தி வாயிலாக இன்டெர்வியூ குறித்து அல்லது அதிலிருந்து நீங்கள் கற்ற விஷயங்களை குறிப்பிட்டு உங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

English summary
8 Best Job Interview Tips for Jobseekers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia