அப்பாயின்மெண்ட் ஆர்டர்ல சைன் பண்ணும் முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

வேலை தேடுவது ஒரு தனித்திறமைதான் என்றாலும் எப்படியோ முட்டி, மோதி ஒரு வேலையை பிடித்து விடுகிறோம் என்று வைத்துகொண்டாலும் வேலைக்கு சேர்ந்த பின் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் இதோ...

By Kani

வேலை தேடுவது ஒரு தனித்திறமைதான் என்றாலும் எப்படியோ முட்டி, மோதி ஒரு வேலையை பிடித்து விடுகிறோம் என்று வைத்து கொண்டாலும் வேலைக்கு சேர்ந்த பின் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியது வரும், என்பது யாருக்கும் தெரியாது.

நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!நண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார்! நீங்கள் என்ன செய்வீர்கள்? இன்டர்வியூ கேள்விகள்!

ஒரு 20 நிமிட நேர்காணலில் நிறுவனத்தை பற்றி முழுவதும் கணிக்க முடியாது. ஆனால் இது குறித்து அனுமானிக்க முடியும்.

அப்பாயின்மெண்ட் ஆர்டர்ல சைன் பண்ணும் முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!

நாம் பொதுவாக பல்வேறு வகையான கலச்சாரம், வேலை அமைப்பு கொண்ட நிறுவனத்தில் இருந்து வந்திருக்கலாம், புதிய நிறுவனம் நமது எண்ணங்களுக்கு ஏற்ப இருக்குமா? என்றால் கேள்வி குறிதான்.

இதை முன் கூட்டியே அறிவது எப்படி? என்கிற கேள்விகளெல்லாம் உங்கள் மனதில் எழும். அந்த கேள்விகளுக்கான பதிலை இப்போது பார்ப்போம்.

வேலை நாட்கள் என்ன?

வேலை நாட்கள் என்ன?


நீங்கள் புதிதாக தேர்ந்தேடுத்துள்ள நிறுவனத்தின் வேலை நேரம் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை பார்க்க வேண்டும் என்பதை அறிந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரில் கையெழுத்து போடுவது நலம்.

ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி உலக அழகி பட்டம் கிடைத்தது? ஐஏஎஸ் தேர்வில் ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி உலக அழகி பட்டம் கிடைத்தது? ஐஏஎஸ் தேர்வில் "நச்" பதில்!

சில நிறுவனங்களில் தம் வேலையை முடித்தால் உடனடியாக வீட்டிற்கு திரும்பும் வகையிலும், சில நிறுவனங்களில் வேலையை முடித்தாலும், முடிக்காவிட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில்தான் செல்ல வேண்டும் என்ற காட்டுப்பாடுகள் இருக்கும். இதையெல்லாம் முன்பே அறிந்து கொள்வது அவசியம்.

 

நிறுவனத்தின் கோர் வேல்யூ என்ன?

நிறுவனத்தின் கோர் வேல்யூ என்ன?


தொழிலுக்குத் தொழில் அடிப்படை குணாதிசயங்கள் மாறும் போது கம்பெனி வேல்யூ போன்ற பொதுவான குணாதிசயங்களும் மாறும்.

ஒரு நிறுவனம் பொதுவாக டீம் ஒர்க், குவாலிட்டி பர்ஸ்ட், கொலப்ரேஷன் போன்றவைகளையே முன்னிருத்தும். எந்த விதமான விஷயங்களையும் ஒரு நிறுவனம் முன்னிலைப்படுத்தாத பட்சத்தில் நீங்கள் கோர் வேல்யூ பற்றி எளிதாக புரிந்து கொள்ளலாம்.

 

நிறுவன குழுக்களுடன் தொடர்பு:
 

நிறுவன குழுக்களுடன் தொடர்பு:


நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களை சமூக ஊடகங்கள் வழியே தொடர்புகொள்ளும் போது உங்களுக்கு நிறுவனம் குறித்தும், வேலை குறித்தும் பல்வேறு யோசனைகள் கிடைக்கும்.

இதன் மூலம் ஓராளவு நிறுவனத்தை பற்றி அறிய முடியும். மேலும் நீங்கள் தொடர்பு கொண்ட நபர் சரியான நபர்தான் என்றால் அவரை உங்கள் லிங்கிடு இன் பக்கத்தில் இணைக்க மறக்காதீர்கள். இது இந்த வேலை இல்லை என்றாலும் கூட மீண்டும் வேலை தேடும் போது உதவிபுரியும்.

 

நிர்வாக குழுவை தெரிந்து கொள்ளுங்கள்:

நிர்வாக குழுவை தெரிந்து கொள்ளுங்கள்:


நிர்வாகத்தில் என்னென்ன வரைமுறையில் நபர்கள் பணியாற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முற்படுங்கள்.

கூடுமானவரை நிறுவனரை நேரில் சந்திக்க முடியுமா என்று பாருங்கள். இல்லாத பட்சத்தில் நிறுவனம் தொடர்பான வேலையில் ஆழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

 

ஒரு மினி விசிட்:

ஒரு மினி விசிட்:


அலுவலகத்தை சுற்றிப் பார்க்க மறக்காதீர்கள், கூடுமானவரை ஊழியர்களின் டெஸ்கை பார்வையிட மறக்காதீர்கள்.

பணியாற்றும் டெஸ்க் காட்டிக்கொடுத்துவிடும் இவர்கள் எவ்வளவு நாள் பணியாற்றுகிறார்கள் என்று இது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுகிறதா?

டெஸ்க் அலங்கரிக்கப்பட்டிருக்கும் விதத்தை கொண்டு எளிதாக இதை கண்டுபிடிக்க முடியும். இதைக்கொண்டு நம் எவ்வளவு நாள் இங்கு பணியாற்றலாம் என்ற முடிவுக்கும் எளிதாக வரமுடியும்.

 

உணவு இடைவேளை:

உணவு இடைவேளை:


இதை வைத்து எதை கண்டுபிடிக்க போகிறோம் என்ற கேள்வி எழுகிறதா? இதை வைத்து நமக்கு நேரத்திற்கு சாப்பிட அனுமதி உண்டா, இல்லையா என்பதை அறிய முடியும்.

எவ்வளவு பேர் மதிய உணவு எடுத்துகொள்கிறார்கள், என்று கணக்கிட்டால் வேலைக்கும், உணவுக்குமான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை எளிதாக கணக்கிடமுடியும்.

 

ரெஸ்ட் ரூம் விசிட்:

ரெஸ்ட் ரூம் விசிட்:


நீங்கள் கடைசியாக கிளம்புவதற்கு முன், கழிவறையை பயன்படுத்தவும், அப்போது இரண்டு விஷயங்களைக் கவனிக்க மறக்காதீர்கள் சுத்தமாக இருக்கிறதா, கழிப்பறையில் காகிதங்கள் உள்ளனவா.

இது உங்கள் வேலை இல்லை என்றாலும் இதை பார்த்து வைத்துகொள்வது பிற்காலத்தில் உதவும். எனென்றால் அசுத்தமாக இருந்தால் எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் என்று அர்த்தம் இதன் மூலம் என்ன யூகிக்க முடிகிறது? ரெஸ்ட் ரூம்கென்றே ஒரு ரசிகர் மன்றம் உள்ளது.

அப்படி என்றால் வேலையில் ஊழியர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம், ரூம் சர்வீஸ் ஊழியர் இன்று விடுமுறை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

வேலையில் சேரும் முன் இது நமக்கான நிறுவனம்தானா? சுதந்திரமாக பணியாற்ற முடியுமா? போன்ற விஷயங்களை தெரிந்து கொண்டு சேருவது நலம்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
7 warning signs that you shouldn’t accept a job offer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X