இன்டெர்வியூ முடிஞ்சதும் மறக்காமல் கேட்க வேண்டிய 7 கேள்விகள்!

வெவ்வேறு விதமான நேர்முகத் தேர்வுகளில் முதல் ஆளாக பங்கு பெறுவதில் தப்பில்லை அதன் மூலம் வேலையை எப்படி தட்டிப்பறிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

By Kani

இன்டெர்வியூ போவது என்றால் ஒரு சிலருக்கு மார்கழி மாதம் 4 மணிக்கு எழுந்து நீராடுவது போல், மறு சிலருக்கோ மார்கெட் போவது போல் வழக்கமான ஒன்று. ஒரு நபரை நான்கு பேர் சேர்ந்து இன்டெர்வியூ செய்யும் போது சிலருக்கு இன்டெர்வியூ முடிஞ்சி எப்போ வெளியே போவோம் என்று எண்ணம் எழுவது இயற்கையே, நேர்முகத்தேர்வு என்பது அவ்வளவு கடினமானது இல்லை.

பல்வேறு விதமான நேர்முகத் தேர்வுகளில் பங்கு எடுப்பதில் தப்பில்லை. இதன் மூலம் எப்படி வேலையை நம் தட்டிப் பறிக்கிறோம் என்பது மிக முக்கியம் அந்த வகையில் 7 கேள்வியில் வேலையை எப்படி தனதாக்கி கொள்வது என்று இப்போது பார்க்கலாம்.

1. ஏன் இந்த பணியிடம் காலியாக உள்ளது?

இந்தக் கேள்வியின் மூலம் நீங்கள் இந்த பணியின் சாதக பாதகங்களை எளிதாக அறிய முடியும். நீங்கள் மற்றொருவருக்கு மாற்றாக பணியமர்த்தப்படுகிறீர்கள் என்றால், அதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள முற்படுங்கள்.

அது உங்கள் புதிய வேலைக்கான முதல் கட்டளையாக கூட இருக்கலாம். நிறுவனம் குறிப்பிடும் காரணம் உங்களுக்கு ஒத்துவராது என்றபட்சத்தில் நீங்கள் தாரளமாக மாற்று வேலையை தேட வசதியாக அமையும்.

2. இந்த பணியில் மாஸ்டராக என்ன ஸ்கில்ஸ் தேவை?

இந்தக் கேள்வி உங்களுக்கு உண்மையிலே இந்த பணியின் மீது விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும். ஒரு வேலை அவர்கள் கேட்கும் ஸ்கில்ஸ் உங்களிடம் இல்லை என்றால் அதை தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.

3. இந்த பதவிக்கான முக்கியமான பணி என்ன?

இந்தக் கேள்வியை இடம் பொருள் ஏவல் அறிந்து கேட்பது அவசியம். நமக்கு புரியாத, அல்லது முன் பின் அறியாத பதவிக்கு விண்ணப்பிக்கும் போது கேட்பது நலம். நீங்கள் ஒரு சேல்ஸ் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பித்து விட்டு இந்த கேள்வியை கேட்டால் நல்லவா இருக்கும். எங்க, எப்போ இந்தக் கேள்வியை எழுப்புகிறோம் என்பது மிக முக்கியம்.

4. நிறுவன வளர்ச்சியில் பதவியின் பங்கு என்ன?

இந்தக் கேள்வி உங்களது இலக்குகளுக்கான கால அளவு என்ன என்பதை தீர்மானிக்கும். நீங்கள் ஒரு சேல்ஸ் ரெப் பணியில் சேருகிறீர்கள் என்றால், எத்தனை வருட அனுபவத்திற்கு பின் சேல்ஸ் மேனேஜர் பதவியை பெற முடியும், அதற்கான வழி என்ன என்பதை இந்தக் கேள்வியின் மூலம் அறிய முடியும்.

5. இங்கு பணியாற்றுவதில் மகிழ்ச்சியான விஷயம் என்ன?

இந்தக் கேள்வியின் மூலம் இரு வகையான கேள்விகளுக்கு உங்களுக்கு விடை கிடைக்கும். ஒன்று மனிதர்கள் எதை மகிழ்ச்சி என கருதுகிறார்கள். மற்றொன்று நிறுவனம் எந்த வகையான கலச்சாரத்தை பின்பற்றுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

6. இந்த பணியிடம் எப்போது இருந்து காலியாக உள்ளது?

இந்தக் கேள்வி மூலம் பதவியின் முக்கியத்துவத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் எந்த விதமான பணியாளர்களை நிறுவனம் எதிர்பார்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

7. நான் இந்த நிறுவனத்தை பார்வையிடலாமா?

ஈஷியா நாம் செலக்ட் ஆயிட்டோமா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த கேள்விக்கு சரி என்றால் நிறுவனத்தின் நடைமுறைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மறுக்கும் பட்சத்தில் இந்த நிறுவனம் நம்மை தேர்வு செய்யவில்லை அல்லது அதற்கு நேரமில்லாத பரபரப்பான நிறுவனம் என்று நாம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

எது எப்படியோ இந்தக் கேள்விகளையெல்லாம் அடுத்த முறை இன்டெர்வியூ முடிஞ்சு திரும்பும் போது கேட்க மறக்காதீர்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
7 Smart Questions You Should Ask at the End of Every Job Interview
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+