ஐஏஎஸ் கேள்வி: காலையில் கண் விழிக்கும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்! வாட் நெக்ஸ்ட்?

Posted By: Kani

யுபிஎஸ்சி என்றழைக்கப்படும் ஐஏஎஸ் தேர்வை பொருத்தமட்டில் பள்ளியில் படிக்கும்போதே தேர்வுக்கான தயாரிப்பு இருந்தால் கல்லூரியில் எழுதும் தேர்வு போல மிக எளிதாக ஜெயிக்கலாம். சொல்வது எளிது செய்வது மிக கடினம். ஆனால் விடா முயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் நம் கனவு ஒருநாள் சாத்தியப்படும்.

தேர்வுக்கு தயாரவதற்கு முதலில் நம்மை சுற்றி என்னென்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். தினசரி செய்தித்தாள்களைப் படிப்பது, பொது அறிவு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது இதற்கு உறுதுணை புரியும்.

பொதுவாக ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத ஒரு பட்டப்படிப்பு போதுமானது. கலைப் பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ, உங்களுக்கு எந்தப் பாடத்தில் விருப்பம் இருக்கிறதோ, அதை எடுத்து படிக்கலாம். சரியான முறையில் படித்தால் வெற்றி நிச்சயம்.

முன்னதாக சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட சில ட்ரிக்கான கேள்விகளும் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கப்பட்டது என்பதையும் பார்க்கலாம்.

கேள்வி1: காலையில் விழிக்கும் போது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் வாட் நெக்ஸ்ட்?

பதில்: ரொம்ப சிம்பிள் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு லீவு எடுத்துவிட்டு என் கணவருடன் கொண்டாடுவேன்.

கேள்வி2: இரட்டை குழந்தை ( ஆதர்ஷ்&அனுபம்) பிறந்தது மே. ஆனால் இவர்களது பிறந்த நாள் ஜூன் எப்படி?

பதில்: மே என்பது பிறந்த நகரத்தின் பெயர்.

கேள்வி 3: ஜேம்ஸ் பாண்ட் ஒருவரை விமானத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பும் இன்றி கீழே தள்ளிவிடுகிறார். ஆனால் கீழே தள்ளிவிடப்பட்ட நபருக்கு எதுவும் ஆகவில்லை எப்படி?

பதில்: விமானம் ரன்வேயில் சென்று கொண்டிருக்கும்.

கேள்வி 4: தண்டனை நிறைவேற்ற கொலைகாரனுக்கு அறைகளை தேர்ந்தேடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. முதல் அறையில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. இரண்டாவது அறையில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி உள்ளது. மூன்றாவது அறையில் 3 ஆண்டுகளாக உணவு எடுத்துக்கொள்ளாத சிங்கம் உள்ளது. எந்த அறை அவனுக்கு பாதுகாப்பானது?

பதில்: மூன்றவது அறை. ஏனென்றால் மூன்று ஆண்டுகள் சாப்பிடாத சிங்கம் உயிருடன் இருக்காது.

கேள்வி 5: பே ஆப் பெங்கால் விச் ஸ்டேட்?

விடை: 'லிக்யூட்' இதான் விடை புரியலையா எனக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது. கொஞ்சம் அறிவியல் பூர்வமாக யோசித்தால் விடைக்கான புதிர் புரியும்.

கேள்வி 6: 8 வேலையாட்கள் இணைந்து 10 மணி நேரத்தில் ஒரு சுவரை கட்டி எழுப்புகின்றனர். 4 ஆட்கள் எவ்வளவு நேரத்தில் கட்டி முடிப்பார்கள்?

பதில்: சுவர் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டதே. இதுதான் வெற்றியை தேடிதந்த பதில்.

கேள்வி 7: நீங்கள் ஒரு சிகப்பு கல்லை நீல நிறக்கடலில் தூக்கி போடுகிறீர்கள் என்ன நடக்கும்?

பதில்: கல் நனையும் அல்லது முழ்கி விடும்.

நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்? இன்டெர்வியூவில் பகீர் கேள்வி!

English summary
7 Most Hilarious Questions Ever To Be Asked During The Civil Services Examinations

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia