ரெஸ்யூம் 'எடிட் கட்' ஷார்ட் அண்ட் ஷார்ப் 6 டிப்ஸ்!

Posted By: Kani

ரெஸ்யூம் எழுத ஆயிரம் டிப்ஸ் படிச்சாலும் வேலை கிடைக்க மாட்டேங்குதேனு கவலையா இருக்க. ப்ரீயா விடுங்க பாஸ் அனுபவமே சிறந்த ஆசான். ஒவ்வெரு முறையும் நீங்கள் நிராகரிக்கப்படும் போது உங்களுக்குள் புதிதாக ஒரு சக்தி பிறக்கும்.

இன்டெர்வியூனா இதுதான். இப்படிதான் கேள்வி கேட்பார்கள் என்று ஒரு ஐடியா கிடைக்கும். இதையே சவலாக எடுத்துக்கொண்டு சரியான முறையில் தயார் செய்தால் வெற்றியை வேட்டையாடுது நீங்கள்தான்.

எவ்வளவு செலவானாலும் பரவால்ல எழுத்துப்பிழை இல்லாம ரெஸ்யூம மட்டும் தயார் செய்ய முயற்சி செய்யுங்கள். எவ்வளவு பேர் வந்தாலும் இது உங்களுக்கான வேலையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கும். உங்களுக்காக சில ரெஸ்யூம் டிப்ஸ்.

1. வார்த்தைகள்:

விவரங்களை ஷார்ட் அண்ட் ஷார்ப்பாவாகவும், ஒரே வார்த்தை மற்றும் திறமைகளை திரும்பத் திரும்ப குறிப்பிடுவதை தவிர்ப்பது சிறப்பு. வேலையை பெற்றுத்தர ரெஸ்யூம் ஒரு பக்கமே இருந்தலே போதும். அதிக பட்சமாக 2 பக்கம் வரை ஒ.கே.

2. உங்களால் என்ன பயன்:

நீங்கள் இந்த இடத்தை எப்படி அடைந்தீர்கள் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தும் விதமாக எழுதவும். என்னால என்னோட நிறுவனத்துக்கு இந்த விதத்துல லாபம் கிடைச்சுது என தங்களது துறையில் சந்தித்த சவால்களுக்கு எப்படி தீர்வு கண்டீர்கள் என்பதை குறிப்பிடலாம்.

இதன் மூலம் எந்த வகைல நீங்கள் நிறுவனத்துக்கு உதவுவீர்கள் என்பதை தீர்மானிக்க உதவும்.

3. ரத்தின சுருக்கம்:

உங்களோட அனுபவம் என்ன? எந்த துறை உங்களுக்கு சரியா இருக்கும்? உங்க சாதனைகள் என்ன? விடாமுயற்சி, கூர்மையாக கவனிப்பது போன்ற கீவேர்டுகளை சரியான இடத்தில் பயன்படுத்தவும். இது நேர விரையத்தை குறைப்பதோடு, நம்மை சரியான முறையில் விற்பனை செய்ய வசதியா இருக்கும்.

4. தலைமை பண்பு:

அனுபவம் எல்லாத்தையும் ரெஸ்யூம்ல குறிப்பிடனும்னு அவசியம் இல்ல. கடைசியா பணியாற்றிய தகவல் இருந்தா மட்டும் போதும். அதில் உங்களது பொறுப்புகள், வேலைசெய்த இடம், குழு அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடுவது அவசியம்.

5. பார்த்த உடனே புரியனும்:

ரெஸ்யூம்ல பல விஷயங்களை எங்க இருக்குனு தேடி பாக்கறதுக்குள்ள இன்டெர்வியூ முடிஞ்சுடும். அதனால முக்கியமான விஷயங்களை கண்ணில் படும்படி குறிப்பிடுங்கள்.

6. அனுபவம்:

முதல் பக்கத்தில் உங்கள் துறையில் சந்தித்த முக்கியமான தருணங்களை சுருக்கமாகக் குறிப்பிடலாம். இது நீங்கள் யார் என்று எடுத்து காட்டும். முதல்ல அனுபவத்துக்கு தான் மதிப்பு. அதனால முதலில் வேலை அனுபவத்தை குறிப்பிடவும் அப்பறம் படிப்பு பத்தி எழுதுங்க.

English summary
6 Tips for Writing an Effective Resume

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia