சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். பிரச்னை என்ற சுறாக்கள் இருந்தால்தான் வாழ்க்கை என்ற மீன் சுவையானதாக இருக்கும்.
பிரச்னைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பிகிடப்போம். எனவே எப்போதும் பிரச்னைகளை கண்டு ஒதுங்காமல், அதை எதிர்கொள்ளும் திறமையை வளத்து கொள்ளுங்கள் அது இன்டெர்வியூவாக இருந்தாலும், வாழ்கையாக இருந்தாலும் சரி...

அடிப்படை அறிவு:
ஒரு மரத்தின் உச்சியை அடைய அணிலை வேலைக்கு அமர்த்துவீர்களா அல்லது ஒரு குதிரையை அமர்த்துவீர்களா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதே போல்தான் வேலை தேடும் போது நம் இலக்கு என்ன, என்ன பணிக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது, இதில் சேர்ந்தால் நேரடியாகவே, மறைமுகமாகவே நமது இலக்கை எட்ட முடியுமா என்று யோசித்தபின் விண்ணப்பிப்பது வெற்றிக்கான வாசல் கதவை திறக்கும் என்பதை மறக்காதீர்கள்.
அப்டேட் அவசியம்:
ஒரு நேர்முகத்தேர்வில் வெற்றிபெற வேண்டுமெனில், அதற்கு அடிப்படை அப்டேட்தான். நம்மைச்சுற்றியும், நம்துறையை சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க தவறினால் நமது பாடு நேர்முகத்தேர்வில் திண்டாட்டம் ஆகிவிடும்.
எனவே நம்மை சுற்றி நிகழும் நாட்டு நடப்புகளை அவ்வப்போது செய்திதாள், தொலைக்கட்சிகள் மூலம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இது நேர்முகத்தேர்வில் எளிதாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க உதவும்.
இதுவே இறுதி வாய்ப்பு:
பொதுவாக, வளர்ச்சியை விரும்பும் ஒரு நிறுவனம், திறமையான ஊழியர்களை கண்டால் தக்க சன்மானம் கொடுத்து தங்களுடன் வைத்துக்கொள்ளவே விரும்பும். எனவே நேர்முகத்தேர்வில் நம்முடைய கிரியேட்டிவ் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்று எண்ணும் போது அது நிச்சயம் சாத்தியப்படும்.
பலம், பலவீனம்:
வழக்கத்தைவிட உற்சாகமாக இருப்பது, நன்கு உடை உடுத்தி இருப்பது, நன்றாக பேசுவது ஆக மொத்தத்தில், இன்டர்வியூ செய்கிற அரை மணி நேரத்தில், மிகச் சிறந்த ஒரு ஊழியராக இருப்பேன் என்று சொல்லி 'இம்ப்ரஸ்' செய்தால் மட்டும் போதாது.
நம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால், சில சமயத்தில் ஏமற்றத்தை சந்திக்க நேரிடும்.
ஆங்கிலப் புலமையும், ஆட்டிட்யூடும்:
மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் நம்மை மெல்ல மெல்ல மாற்றிவிட்டது என, காரணங்களை அடுக்காமல் முதலில் ஆங்கிலத்தில் பேசவும், வாசிக்கவும் நமது திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.
ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, இவரை கொண்டு எப்படி தொழிலை பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தலாம் என பல்வேறு விதமாக யோசிப்பார்கள், எனவே அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் செய்து கொள்வது அவசியம்.
சிந்தனைக்கான பரிசோதனை:
உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அவை ஒரு காலத்தில் பெருஞ்செயல்களாக உருவெடுக்கும். எனவே நமது சிந்தனைக்கு எங்கு சரியான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவது அவசியம். அதோடு நமது சிந்தனைகளை அவ்வப்போது பரிசோதித்து பார்ப்பது மிக அவசியம்.


Click it and Unblock the Notifications












