எப்பவுமே ஆபிஸ் ஹிட்லிஸ்டில் இருக்கணுமா? இந்த 6 ஹேபிட் இருந்தா போதும்!

Written By: kaniselvam

ஆபிஸ்ல ஒரு சிலருக்கு மட்டும் எப்போதும் தனி மறியதை இருக்கும். அவுங்களுக்கு மேனேஜ்மெண்ட் கொடுக்கிற ரேட்டிங் எப்பவும் பத்துக்கு பத்து, பத்துக்கு ஒன்பதுதான்.

ஏன்னு பாத்திங்கனா இவங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை விட அதிகமாக வேலை பாக்கிறதோட மொத்த டீமையே பேலன்ஸ் பண்ணுவாங்க...

இது அவுங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமுனுதான் தெரியலனு புலம்பாதவங்களே இருக்க முடியாது. இந்த 6 விஷயத்தை கடைபிடிச்ச போதுங்க அது ரொம்ப சிம்பில்.

பங்சுவாலிடி

இது அலுவலக வேலைக்கு மட்டுமானதல்ல. சமூகத்திலும், குடும்பத்திலும் தினம் தினம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு செயல்தான்.

நம்மில் பலருக்கும் இதன் முக்கியத்துவம் தெரிந்தாலும், யாரும் அதை பின்பற்றுவதில்லை. முதலில் உங்க பாஸ் உங்களை நம்பணும், அதுக்கு எல்லா வேலையையும், டெட்லைனுக்கு முன்னாடியே கம்ளீட் பண்ண கத்துக்கணும்.

பக்கத்துல இருந்து வா மச்சி டீ சாப்பிட போலாம்னு அழைப்பு வந்த, இல்லை மச்சி கொஞ்சம் வேலை இருக்குனு சொன்னா, அது ஒன்னும் நீங்க அவுங்கள மதிக்கமா இருக்கறதா அர்த்தமில்லை. நீங்க இப்போ போனக்கூட டெட் லைன மட்டும் கோட்டை விடாத மாதிரி பாத்துகோங்க.

 

ஸ்பெஷல் அப்டேட்

டாப் டென்லா இருக்கிற ஸ்மார்ட் டுயூட்ஸ் அவங்களோட வேலையில எப்பவும், எங்கேயும் தடுமாறவே மாட்டாங்க இதுக்கு காரணம் புதுசு, புதுச ஏதாவது கத்துக்கிட்டே இருக்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

எப்போ நீங்க புதுசா கத்துக்க ஆரம்பிக்கிறிங்களோ அப்போவே உங்க டேபிலுக்கு வாய்ப்புகள் சிட்டுக்கட்டு போல வந்து குவியத்தொடங்கும்.

 

நேரக் கட்டுப்பாடு

டூ மினிட்ஸ்தான் லேட்ணு நினைக்கலாம், அது ரெண்டு நிமிஷத்து வேலையை ரெண்டு மணி நேரத்துக்கு செய்ய வச்சிரும்.

அப்புறம் கடைசி நேரத்துல எல்லாத்தையும் இழுத்து போட்டுகிட்டு செய்யறமாறி ஆயிரும், சோ அந்தந்த வேலையை அந்தந்த நேரத்துல செஞ்சி முடிப்பது நம அடுத்து கட்டத்துக்கு போறத தீர்மானிக்கவிட்டாலும் கூட, பின்னோக்கி செல்லாமல் பாத்துக்கும்.

ஹெல்தி புட்

டைம் லைன்ல வேலைய முடிப்பது எவ்வளவு முக்கியமே அவ்வளவு முக்கியம் நேரத்துக்கு சாப்பிடுவது மற்றும் தூங்குவது.

இது அடுத்த நாள் வேலைய அலட்டிக்காம செய்ய உதவிசெய்யும். ஏன்னா 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' சோ ஹெல்தி புட், ஹெல்தி சிலிப் ரொம்ப முக்கியம்.

 

கீப் ரெகுலர் ஒர்க் அவுட்

டெய்லி உடற் பயிற்ச்சி செய்வது, உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் மகிழ்ச்சியா வைக்க உதவும். மைண்ட் மட்டும் ரிலாக்ஸாக இருந்த போதும் வேலையில் சுறுசுறுப்பு தானவே கூடும்.

அதிகாலையில் எழுந்து ஒரு ஜாக்கிங் போயிட்டு ஆபிஸ் போயி பாருங்க. அன்றைய பொழுது எல்லாம் வேலையில் ஓர் ஆத்ம திருப்தி இருக்கும். சில நல்ல விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பல கெட்ட விஷங்கள் படிப்படியா மறைய தொடங்கும்.

பல சமயங்கள்ல இதுவே நமக்கு ஒரு ட்ரீட்மெண்டா இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

English summary
6 Habits Of Highly Productive Employees

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia