வர்க் ஃப்ரம் ஹோம் பண்ணும் போது நீங்க இதெல்லாம் கவனத்துல வெச்சுக்கணும்!

Posted By: Gowtham Dhavamani

வீட்டுல இருந்து அலுவலகம், அலுவலகம் விட்ட வீடுன்னு வேலைபாத்தது அந்த காலம். நான் எங்க இருந்த என்ன? உங்களுக்கு வேலை ஆகுதுல்ல? அப்பறம் என்ன உங்க பிரச்சனைன்னு கேக்கறது இந்த காலம்." ஒர்க் பிரம் ஹோம்" இப்போ இது உலகத்தோடு தாரக மந்திரமா மாறிக்கிட்டுருக்கு. நீங்க முழுநேரமா ஒரு அலுவலகத்துல வேலை செஞ்சாலும் சரி, பகுதி நேரமா வேலை பாத்தாலும் சரி, செய்யற வேலைய வீட்டுல இருந்து செய்யறது கொஞ்சம் சிரமமான விஷயம். அப்படி இருக்க எப்பிடி நம்ம கவனத்தை குவிச்சு வேலை பாக்கறது? எப்பிடி சரியான நேரத்துக்கு வேலைகளை முடிக்கறது? எல்லாத்தையும் விட வீட்டு வாழ்க்கை, வேலை ரெண்டையும் எப்பிடி தனி தனியா வெச்சுக்கறது?

வல்லுனர்கள் சொல்றது என்ன?

வீட்டுல இருந்து வேலை பாக்கறோம்னு சொன்ன, கழுவாத முகம், பரட்டை தலைன்னு , சரியான சோம்பேறியான ஒரு பிம்பம் மனசுக்கு வரதுலாம் அந்த காலம். இப்போல்லாம் தொழில்நுட்பம் அதிகமா வளர வளர, நிறுவனங்களும், நீங்க வீட்டுல இருந்து வேலை பாருங்க எங்களுக்கும் அதுதான் சிக்கனமா இருக்கும்னு சொல்றாங்க. 2005ல இருந்து 2012வரைக்கும் அமெரிக்கால வேலைக்காக பயணிக்கறவங்க என்ணிக்கை அதிகமா இருந்துச்சு. ஆனா சமீபத்துல ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் செஞ்ச ஒரு ஆராய்ச்சில, அலுவலகத்துல இருந்து வேலை பாக்கறவங்கள விடவும் வீட்டுல இருந்து வேலை செய்யறவங்க 13% அதிகமா உழைக்கறாங்கன்னு தெரியவந்துருக்கு.

 

 

நேர மேலாண்மையை கடைபிடிக்கறது :

மேற்பார்வை இல்லைனா, நம்ம கட்டுப்படுத்த நம்மால முடியாது. இது எல்லாரும் ஒத்துக்க கூடிய விஷயம். ஆனா வீட்டுல இருந்து வேலை பாக்கறதுன்னு முடிவு எடுத்துட்டா, முதல்ல நாம பழக வேண்டியது நேர மேலாண்மை. அது வேலைய சீக்கிரமா முடிக்க மட்டும் இல்ல, உத்வேகத்தோட வேலை செய்யவும் நமக்கு உதவும்.

1. அலுவலகத்துல வேலை செய்யற மாதிரியே உங்க வேலைகளை நீங்க ஆரம்பிக்கணும்.
2. சீக்கிரமா எழுந்து, குளிச்சு வேற துணி உடுத்தி, இணையத்துல மத்த வலைத்தளங்களுக்கு போகாம உங்க வேலைகள பாக்கணும்.
3. எந்த நேரத்துல வேலைசெஞ்சா நம்ம எந்த வித இடையூறும் இல்லாம கவனமா வேலை செய்யறோம்னு தெரிஞ்சு வெச்சுக்கணும்.
4. அடுத்து ஒரு நாள்ல எவளோ வேலைய முடிக்க முடியும்னு சரியாய் கணக்கிட்டு வெச்சுக்கணும்.
5. எவ்ளோ தூரம் வேலை செய்ய நேரம் எடுத்துகாரமோ, அவ்ளோ தூரம் ஓய்வு எடுக்கவும் நேரம் ஒதுக்கணும்.

 

 

சரியான எல்லைகளை கட்டமைக்கறது :

வீட்டுல இருந்து வேலை செய்யும்போது சுலபமா அலுவலக வேலைக்கும் வீட்டு வேலைக்கும் வித்தியாசம் இல்லாம, எல்லாமே ஒரே மாதிரி மாறுவதற்கான வாய்ப்பு இருக்கு. அப்பிடி ஆனா, எல்லா நேரத்துலையும் ஒரே எடத்துல இருக்கற மாதிரி ஒரு மனநிலை நமக்கு வர வாய்ப்பு இருக்கு. அப்பறம் எந்த வேலையையும் நம்மால கவனம் செலுத்த முடியாது. அதனால முடிஞ்ச அளவு வீட்டுல இருந்து வேலை செய்யும்போது, அதுக்குன்னு தனியா ஒரு இடம் ஒதுக்குறது நல்லது.

அதவிட முக்கியமா நம்ம வீட்டுல இருக்கறவங்க, நம்ம நண்பர்கள் இவங்களுக்கு, வேலை நேரத்துல இடையூறு செய்யாம இருக்க கத்து தருவது.!! ஆமா கத்து குடுத்தாகணும். ஏன்னா இது கண்டிப்பா அவுங்களுக்கு புதுசா இருக்கும்.

இப்படி செய்யறதுனால, வேலை முடிஞ்சு நாம வீட்டுல இருக்கற மனநிலைக்கு திரும்ப வசதியா இருக்கும்.

அடுத்ததா, எந்த அளவுக்கு வேலைக்கு முக்கியத்துவம் குடுத்து, அதுக்கு நேரம் ஒதுக்கறமோ அதே அளவு முக்கியத்துவம் குடுத்து வீட்டுல இருக்கறவங்களுக்காக நேரத்த செலவு செய்யணும்.

அதுபோக வேலை முடிய போற நேரத்துல முழுசா முடிக்காம கொஞ்சம் அரைகொறைய விடறதும் நல்லது. ஏன்னா நாளைக்கு எங்க இருந்து ஆரம்பிக்கணும்னு ஒரு கேள்வியை இது தடுத்துரும்.

 

சரியான நேரத்துல இன்டர்வல் விடுங்க பாஸ் :

சினிமாவா இருந்தாலும் சரி , பள்ளி கலோரியா இருந்தாலும் சரி 1 1/2 மணி நேரத்துக்கு ஒரு தரம் நம்மள வெளில போய் நடந்துட்டு வர அனுமதிப்பாங்க. காரணம் நம்ம உடல விட மூளை அதிவேகமா கலைப்படையும். அதுக்கு இன்டெர்வல் வேணும். சமீப ஆராய்ச்சிகள் கூட 52 நிமிஷம் வேல செஞ்சுட்டு 17 நிமிஷம் ஓய்வு எடுத்தா அதிகமா வேலை செய்ய முடியும் னு சொல்லியிருக்கு. சரி, எப்பிடிப்பட்ட ஓய்வு? ஜன்னல் வழியா வேடிக்கை பாக்கறது, அன்னைக்கு வந்த நாளிதழை படிக்கறது, இப்பிடி ஏதா வேணும்னாலும் இருக்கலாம். மூளைக்கு கொஞ்சம் ஓய்வு குடுத்து மறுபடியும் வேலை வாங்குனா சரியா உழைக்கும். ஏன்னா உடல்ல இருக்கற மத்த தசைகள் மாதிரி மூளையும் ஒரு தசைதான். கொஞ்சம் ஓய்வு அப்பறம் நெறைய பயிற்சி அத கட்டுமஸ்தா மாத்தும்.

 

 

தலையை காட்டுவது தலையாய கடமை :

வீட்டுல இருந்து வேலை செய்யும் போது எப்பிடி அலுவலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க முடியும்? புதுசா என்ன வந்துருக்கு? யாரு வந்துருக்கா? அடுத்தவருஷம் நம்ம வேலை எப்பிடி மாற்றத்துக்கு உள்ளாகும்? இந்த கேள்விகளுக்கு பதில் கண்டிப்பா 5 நாளைக்கு ஒரு தரம் நீங்க அலுவலகத்துக்கு போயிட்டு வரது. அப்பிடி இல்லைன்னா அங்க இருக்கற உங்க நண்பர்களை சரியான இடைவெளில சந்திக்கிறது. ஏன்னா வீட்டுல இருந்து மட்டுமே வேலை செய்யறது, தனியா சிறைல உங்கள அடைச்சு வெக்கற மாதிரி. புது மனிதர்கள், புது விஷயங்களை கத்துக்க வாய்ப்புகள் கிடைக்காது. அத விட முக்கியமா அலுவலகத்துல உங்கள அப்பப்போ பாத்தாதான் நினைவுல வெச்சு உங்களுக்கு பதவி உயர்வு குடுக்க யோசிக்கவாவது செய்வாங்க. அதனால அப்பப்போ தலைய காட்டி வைங்க.

ஸ்வீட் எடு கொண்டாடு:

வீட்டுல இருந்து வேலை செய்யும்போது, உத்வேகத்தோட வேலை செய்யறது ரொம்ப சிரமம். ஏன்னா தொவைக்க துணி இருக்கும். பேஸ்புக் உங்கள இழுக்கும். வாட்ஸப் வம்பிழுக்கும், இப்படி இருக்க எங்க இருந்து வேலை செய்ய மனசு வரும்?

இந்த சூழல்ல இருந்து வெளில வர, ஒரு நாள் முடியும் போது, அன்னைக்கு என்ன செய்தோம்? எவ்ளோ சீக்கிரமா செய்தோம்னு கொஞ்சம் யோசிச்சு பாக்கறது. இன்னும் என்ன என்ன செய்யணும்னு பாக்கறது அவசியம் இல்ல.

எனக்கு தெரிஞ்ச சீனிவாசன் என்கிற சீனி அண்ணா அதான் செய்வாரு. அன்னைக்கு எவளோ வேலை செஞ்சாரு? யாரு அவருக்கு எவ்ளோ பணம் அதுக்கு குடுக்கணும்னு நாள் முடியும் போது கணக்கு எழுதி வெப்பாரு. அதனால அந்த தொகையை பாத்துட்டு தூங்கும் போது நிம்மதியான உறக்கம் கிடைக்கும்னு சொல்லுவாரு. லேத்து பட்டறைல வேலை பாத்துட்டு மிகப்பெரிய பாடத்த சுலபமா சொல்லிகுடுத்துட்டாரு.

அந்த மாதிரி நாம நம்ம செய்து முடிச்ச விஷயங்களை அப்போ அப்போ எடை போட்டு பாத்து, அதனால நமக்கு கிடைக்க கூடிய பலன யோசிச்சா அடுத்தநாளைக்கு தேவையான உத்வேகம் தான கிடைக்கும்.

 

 

நினைவில் கொள்ள வேண்டியவை :

செய் :
1.ஒரு திட்டம் போடுங்க, அந்த திட்டத்த செயல் படுத்துங்க.
2. ஒவ்வொரு நாளும் என்ன முடிச்சோம்னு பாத்து வைங்க. உத்வேகம் குறையாம இருக்க உதவும்.
3. வேலை செய்ய வீட்டுல தனியா ஒரு இடம். வேலை நேரத்துல யாரும் உங்கள தொந்தரவு செய்யாம இருக்கர மாதிரி ஒரு சூழல்.

செய்யாதே :
1. இன்டெர்வல் இல்லாம உழைப்பு உழைப்புன்னு உழைக்கறது.
2.யாரையும் பாக்காம, புது விஷயங்களை கத்துக்காமவிடறது.
3. அப்பப்போ அலுவலகத்துல தலைய காட்டறது.

 

வழக்காய்வு #1 :

ஹிதர்கு மத்தவங்க வியக்கர மாதிரி 6 இலக்கத்துல சம்பளம் இருந்துச்சு. ஆனா 2008வது வருஷம் வந்த பொருளாதார சுணக்கம் அவுங்கள வீட்டுல தள்ளிடுச்சு. கைக்குழந்தை வேற. வேற வழி இல்லாம வீட்டுல இருந்து வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு ஊருல இருக்கற முக்காவாசி நிறுவங்களுக்கு எழுதிட்டு இருக்காங்க. முன்னைவிட அதிகமான சம்பளம் இப்போ அவுங்களுக்கு.

சாதாரணமா எழுதற நேரம் தவிர்த்து, அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கறதால அவுங்க அதிக நேரம் உழைச்சாக வேண்டியது இருக்கு. இதுக்காகவே ஒவ்வொரு ஞாயிரும் ராத்திரி குழந்தைங்களை தூங்க வெச்சுட்டு, அடுத்த வாரம் என்ன செய்யணும்னு தெளிவா முடிவு செய்யறாங்க. எந்த வேலையா இருந்தாலும். காஸ் பணம் கட்டறது, வண்டிக்கு ஆயில் மாத்தறது எதுவா இருந்தாலும்.

அது போக ஒவ்வொரு நாளும் 45 நிமிஷம் ஒரு அலாரம் அடிச்சுகிட்டே இருக்கும். அது வரைக்கும் வேலை செஞ்சுட்டு 10 நிமிஷம் புடிச்சத விளையாடறது . மறுபடியும் வேலைன்னு மனச பழக்க படுத்திஇருக்காங்க.

மிகப்பெரிய சவாலா ஹிதர் சொல்றது தனிமை."எப்போமே மக்கள் சூழ இருக்கறது எனக்கு புடிக்கும். ஆனா வீட்டுல இருந்து வேலை செய்யறதுனால அப்பிடி இருக்க முடியல. அதனால எவ்ளோ முடியுமோ அவளோ நேரம் ஓதுக்கி என்னமாதிரி இருக்கற மத்த மக்கள சந்திக்கிறேன். இணையத்துல இருக்கற வட்டங்கள் சேந்துருக்கேன். இது புதுசா வேலை கிடைக்க மட்டும் இல்ல நண்பர்கள் கிடைக்கவும் உதவியா இருக்குன்னு சொல்றாங்க. அதனால தனிமைல இனிமை காண முயற்சிக்காதீங்க.

 

வழக்காய்வு #2: திட்டமிடலைன்னா நேரம் திருடு போகும்:

கேத்தரின் கேம்பெல் அவுங்க சொந்த நிறுவனத்த மிகுந்த யோசனைக்கு அப்பறம் துவக்குனாங்க. வீட்டுல இருந்து வேலை செய்யறது அவுங்களுக்கு புதுசு இல்ல. இருந்தாலும் சொந்த நிறுவனம்னு வரும்போது கொஞ்சம் அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும். அந்த சூழல்லையும், அவுங்க நேரத்தை திட்டமிட்டு பயன் படுத்த அவுங்க தவறுல.

@ எல்லா எல்லைகளும் நம்ம மனசுலதான் இருக்கு. வேலை சம்மந்தமான எந்த விஷயத்தையும், முக்கியமா இ-மெயில்கள நான் தொலைபேசில பாக்கறத நிறுத்தினேன்.
@எல்லா இ-மெயில்லையும், என்னோட வேலை நேரம் 9 முதல் 5 வரைன்னு தெளிவா குறிப்பிட்டேன்.
@சில நேரங்கள்ல அதிகமா வேலை செய்ய வேண்டி வந்தா அதுக்கு ஏத்த மாதிரி அடுத்த அடுத்த நாட்கள்ல கம்மியா உழைக்க கத்துக்கிட்டேன். ஏன்னா வாழ்க்கை 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் இல்ல. அது ஒரு மாரத்தான் பந்தயம். நின்னு நிதானமா ஆனா தூரமா ஓடணும்.
@ அடுத்து, ஒவ்வொரு நாளும் 5 மணிக்கு மேல எனக்குன்னு, என்னோட உடலுக்குனு நேரம் ஒதுக்க ஆரம்பித்தேன். அப்போதான் அடுத்த நாளுக்கு தேவையான சுறுசுறுப்பு கிடைக்கும்.
"வீட்டுல இருந்து வேலை செய்யறது சுலபம். ஆனா அத சரியா செய்ய கத்துகிட்டா சுபம்."

 

 

English summary
5 Ways to Work from Home More Effectively,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia