இந்த 5 விஷயத்தில் நீங்க 'பர்பெக்ட்டா'... அப்போ வேலை உங்களுக்குத்தான்!

Posted By: Kani

தற்போதைய நிலவரப்படி படித்து முடித்தவுடனே இளைஞர்கள் சென்னையை நோக்கி வேலைக்காக படையெடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் இன்ஜினியர்ஸ்.

தனது எதிர்காலம், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களுக்காக எப்படியும் ஜெயித்தாக வேண்டும் கட்டாயத்தின் பிடியில் பலர்.

இப்போ இருக்கற காலத்தில் அரசியல் கட்சியைக்கூட ஈஸியா ஆரம்பிக்கலாம் போல ஆன வேலை வாங்குறதுங்கறது அவ்வளவு ஒண்ணும் ஈஸியான சமச்சாரம் இல்லங்கறது வழக்கமான ஒன்னா போச்சு.

இருந்தாலும் ஷார்ட் டைம்ல புத்தியை கூர்மையாக்கி ஸ்மார்ட்டாக அப்பாயிண்ட் ஆர்டர் வாங்குறது எப்படினு பார்க்கலாமா..?

5.அட்ராக்டிவ் கவர் லெட்டர்

பார்க்கும் போதே யூ ஆர் செலக்ட் அப்படினு சொல்லறமாறி இருக்கனும் ரெஸ்யூம், ஒரு பத்து நிமிஷத்தபாத்து பக்கத்தில் இருக்கும் நண்பர் கிட்ட ரெஸ்யூம், கவர் லெட்டரை காப்பி பண்ணா அப்புறம் கடைசி வரைக்கும் வேலை இல்லா பட்டதாரினு பட்டம் மட்டும்தான் மிஞ்சும்.

சோ நம்ம ரெஸ்யூம் எப்பவுமே தனித்துவமா இருக்கறமாறி பாத்துக்கோங்க. நன்மதிப்பை அதிகரிக்கும் விதமாக அழைப்பு கடிதம் கிடைத்தவுடன், அதற்கு பதில் அளிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது நன்றியாக கூட இருக்கலாம்.

 

4 .ஆன்லைன் புரபைல்

இப்போ எல்லாம் யாரிடம் என்ன கேள்வி கேட்டாலும் உடனே கூகுளிடம் கேட்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பித்தால் உடனடியாக அவர்கள் நோட்டமிடுவது உங்களுடைய ஆன்லைன் புரபைலைத்தான்.

நீங்கள் சரியான முறையில் கீவேர்ட், பணி அனுபவம் போன்ற விவரங்களை கொடுத்து வைத்திருந்தால் நேராக லிங்க்டு இன் செல்லும், இல்லை என்றால் உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தை காட்டும்.

எனவே எந்த தளமாக இருந்தாலும் சரி அதில் உங்களுடைய முழு விவரத்தையும் தெளிவாக குறிப்பிட மறக்காதீர்கள். முக்கியமாக உங்களது நன்மதிப்பை குறைக்கும் விதமான படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தால் அதை உடனடியாக நீக்குவது சாலச்சிறந்தது.

 

3. நட்பு வட்டம்

நம்முடைய நட்பு வட்டத்தை நம்முடைய திறன் சார்ந்து அமைத்து கொள்வது நம் வேலை தேடலை எளிமையாக்கும். ஒரே குழுவாக இருக்கும் பட்சத்தில், நம் விண்ணப்பித்த வேலைக்கான நிறுவனத்தில் நமது நட்பு வட்டத்தில் உள்ள நண்பர் பணிபுரியும் பட்சத்தில் ஐஸ்கீரிம் மேல் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழம் வைத்தாற் போல் வேலைதேடும் விவகாரத்தை இனிமையாக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

 

2. தேடல்

நம் விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் முழு விவரம் மட்டுமல்லாது, விண்ணப்பிக்கும் பணி சார்ந்த முழு தகவல்களையும் நேர்காணலுக்கு முன்பே அறிவது அவசியம். இது உங்களுக்கு எந்த அளவிற்கு புதிய பணி, நிர்வாகத்தின் மீது அக்கறை உள்ளது என்பதை காட்டும்.

எனவே விண்ணப்பிக்கும் முன் முழுத் தகவல்களும் உங்கள் உள்ளங்கையில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

1. பாராட்டுங்கள்

எல்லோருமே பாராட்டை விரும்புவர்கள்தான். உங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்கும் தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவிப்பது உங்களை மற்றவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தி காட்டும்.

உங்களது வாழ்த்தையோ, கருத்துகளையோ, மெயிலில் அனுப்பினாலும் சரி அல்லது நேரடியாக கூறினாலும் சரி இது உங்கள் வேலையை கைப்பற்றக்கிடைத்த கடைசி வாய்ப்பாக கூட சிலசமயம் அமையலாம்.

English summary
5 Clever Ways to Get a Job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia