ஒரு புறம் புதிய வேலைவாய்ப்பு, அதிகளவில் வேலையிழப்பு மறுபுறம் AI எனப்படும் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என அதிவேக வளர்ச்சிக்கிடையே பெரும்பலோனோர் வேலை இழக்க காரணம் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்திற்கு ஊழியர்களால் ஈடுகொடுக்க முடியாததே காரணமாக அறியப்படுகிறது.
ஆட்டோமேஷனின் துல்லியமான வேலைக்கு எவரும் ஈடுகொடுக்க முடியாது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்றே கூறலாம். வரும் காலங்களில் நவீன வளர்ச்சியின் ஒருபகுதியாக இந்த வகையான தொழில்களில் வேலை வாய்ப்புகள் பொதுவாக அதிகரிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொபைல் அப்பிளிகேஷன்
பழைய பழமொழிகளை ஓரங்கட்டி 'ஆப்ஸ் இன்றி அமையாது உலகு' என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். வரும் காலங்களில் மைபைல் பயன்பாடு அதிகரிப்பதோடு, மொபைல் அப்பிளிகேஷன் தொடர்புடைய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தற்போதே பல்வேறு நிறுவனங்கள் தங்களை புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்து வருகின்றன.
ஹேல்த் கேர்
ஏற்கனவே நவீன தொழில்நுட்ப காற்று இளைஞர்களை தன்வசம் இழுக்க தொடங்கி விட்டதால் அதைசார்ந்து ஹேல்த் கேர், டெக்னாலஜி போன்ற துறைகளும் வேகமாக வளர்ச்சியை கண்டு வருகின்றன.
வெளிப்படைத்தன்மை
தற்போது அதிகரித்தும் வரும் வேலைவாய்ப்பில் பலர் போலியான தகவல்களை கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே விண்ணப்பிப்பவருக்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள தகவல்களின் உண்மை தன்மையானாது சோதனைக்கு உள்ளக்காப்படவேண்டி கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்த வகையான வேலைவாய்ப்புகளும் வருங்காலங்களில் வளர்ச்சியை சந்திக்கும்.
ஜாப் எக்ஸ்பிரிமெண்ட்
தற்போது பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அவர்கள் விரும்பும் இடத்தில் பணியமர்த்தி தங்களுக்கு தேவையானதை முழுமையான பணிக்கான பயனை பெற்று வருகின்றனர். இது வருங்காலங்களில் அனைத்து நிறுவனங்களில் கடைபிடிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications












