இந்த 4 விஷயம் மட்டும் உங்ககிட்ட இருந்தா போதும்... ஆபிஸில் உங்கள யாராலயும் ஜெயிக்க முடியாது!

Posted By: Kani

எந்த வேலையா இருந்தாலும் பார்க்கும் வேலையில பெரிய இடத்துக்கு போக வேண்டும் நினைப்பது எல்லாருக்குமே இருக்கும் பொதுவான ஆசைதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் இது சாத்தியமா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம்.

ஆண்டுதோறும் புதுவருடம் பிறக்கும் போது சபதம் எடுப்பதோடு சரி இலக்குகளை பரண் மீது மூட்டை கட்டிவைத்துவிட்டு, டார்கெட்டை நோக்கி ஓட ஆரம்பிச்சா அது எங்க போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாது.

ரொம்ப சிம்பில் டுயூட்ஸ் நம்ம பிஸியான செட்யூலுக்கு இடையே இந்த 4 விஷயத்தை மட்டும் டெய்லி தவறமா கடைபிடித்தால் மட்டுமே போதும் நம்ம பார்க்கும் வேலையில் வேற லெவலுக்கு ஈஷியா போகலாம்.

வாசிப்பு

வாசிப்பை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வாசிக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை.


இரவு தூங்குவதற்கு முன் ஒரு 5 பக்கம் என்று வைத்தால் எளிதாக ஒரு புத்தகத்தை ஒரு மாதத்தில் படிக்க முடியும். இது ஆபிஸை தவிர்த்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை நமக்கு புகட்டும்.

அன்றாட வேலைகளுக்கிடையே வீடு, வீடு விட்டா ஆபிஸ் என்று இல்லாமல், உலகில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள தினமும் செய்தித்தாள்களை வாசிப்பது அவசியம். இது உங்களுடைய சமூக அறிவை அதிகப்படுத்துவதோடு, உங்களை எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்ள உதவும்.

தற்போது நவீன வசதிகளுடன் பல்வேறு ஆப்ஸ் வந்துவிட்டன. எதைப்படிக்க வேண்டும், எப்போது படிக்க வேண்டும் என்பதை மட்டும் செலைக்ட் பண்ணா போதுமானது அதுவே உங்களுக்கு சரியான நேரத்தில் நினைவூட்டும்.

 

கனெக்ட்

தினமும் ஒரு முறையாவது இணையத்தில் உலவுங்கள், குறிப்பாக சமூக ஊடகங்களை பார்க்க மறக்காதீர்கள். சோஷியல் மீடியாவை பொறுத்த மட்டில் எப்போதுமே நடப்பு நிகழ்வுகள் அப்டேட்டாக இருக்கும்.

நீங்கள் வைத்துள்ளது ஸ்மார்ட் ஃபோன் மூலமாக ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என ஏதாவது ஒரு வழியில் கனெக்ட்டாக இருங்கள். இது உங்களை நீங்களே புதுபித்துக்கொள்ள வழி வகுக்கும்.

பொழுது போக்கில் இருந்து வேலைவாய்ப்பு வரை சகலவிதமான தகவல்களை பெற பல்வேறு தளங்கள் உள்ளன.

உதரணமாக வேலைவாய்ப்பு சம்பந்தமான அனைத்து விதமான தகவல்களையும் ஒருங்கினைக்கும் இடமாக லிங்டுஇன் செயல்படுகிறது.

தினமும் பார்வையிட சாத்தியமில்லை என்றாலும் கூட வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த தளத்தை பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல், நம் தகவல்கள் முழுவதையும் அப்டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம்.

வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் எந்த ரூபத்தில் வேண்டுமானலும் வரலாம் அதற்கு தயாராக இருப்பது அவசியம்.

 

எழுதுங்கள்

தினமும் ஒரு 10 நிமிடம் அன்றைய நாளில் நடந்த ஸ்பெஷல், செய்ய வேண்டிய குறிக்கோள்கள் என்பதை பற்றி சிறு குறிப்புகளை எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு தெரிந்தது எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம், ஒரு வராமே அல்லது ஒரு மாதமே கழித்து அதை திரும்பி பார்க்கும் போது நாம் செய்த தவறுகள் என்ன என்பது தெரிய வரும்.

நாம் எதில் தொடங்கி தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பது தெரிய வரும். எழுதும் போது தேடல் அதிகமாகும்.

தனியாக எழுத பிடிக்கவில்லையா பேஸ்புக், பிளாக் என எதில் வேண்டுமானலும் எழுதுங்கள். இது உங்களைப்போன்றே பண்புள்ள நல்ல நண்பர்களை அடையாளம் காண உதவும். இதுவே உங்களின் வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையாக இருக்கும்.

 

கேள்வி கேளுங்கள்

உங்களுக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கேள்வி கேட்க மறக்காதீர்கள். அது அலுவலகமாக இருக்கலாம், காபி ஷாப்பாக இருக்கலாம்.

எப்போது கேள்வி கேட்க தொடங்கிவிட்டிர்களே அப்போதே நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இது இப்போது இல்லை என்றாலும் என்றாவது ஒருசமயம் உங்களுக்கு துணை நிற்கும்.

நண்பர்களிடம் நேரடியாக கேட்க கூச்சமாக இருப்பதாக உணர்ந்தால், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கேள்விகளை தொடுக்கலாம் அதற்கு உடனடியாக பதிலும் கிடைக்கும்.

அன்றாட வேலைகளுக்கிடையே இந்த நான்கு விஷயங்களை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் நாம் உயர்ந்த இடத்தை எட்டுவது கிட்டும் தூரம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

 

English summary
4 Small Daily Habits That'll Have a Big Impact on Your Career

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia