ராகு, கேது பார்வையால் அரசு வேலை கிடைக்குமா?

அரசு போட்டித் தேர்விற்கு தயாராகும் பலர் ராகு, கேது, குரு பகவானின் பார்வை என ஒவ்வொன்றையும் கணித்து அதற்கு ஏற்றாற்போல் தங்களது தேர்விற்கான தயாரிப்பை மேற்கொள்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மத்திய, மாநில அரசுகள் பல போட்டித் தேர்வுகளை நடத்தி அரசாங்க பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். அரசாங்க வேலை பெருவதையே லட்சியமாகக் கொண்டுள்ள பலர் தொடர்ந்து விடா முயற்சியின் மூலம் வெற்றிபெருகின்றனர்.

ராகு, கேது பார்வையால் அரசு வேலை கிடைக்குமா?

இன்னும் சிலரோ ராகு, கேது, குரு பகவானின் பார்வை என ஒவ்வொன்றையும் கணித்து அதற்கு ஏற்றாற்போல் தங்களது தேர்விற்கான தயாரிப்பை மேற்கொள்கின்றனர். மாறுபட்ட பயிற்சியில் பலர் வெற்றி பெற்றாலும் எவ்வகையான முயற்சி உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என பார்க்கலாம் வாங்க.

முதலில் கவனிக்க வேண்டியது இதத்தான்...!

முதலில் கவனிக்க வேண்டியது இதத்தான்...!


போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு நாம் அந்த தேர்விற்கு, அந்த பணியிடத்திற்கு தகுதியானவரா என தெரிந்து கொள்வது முக்கியம். முழுமையான தகுதியை பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தற்போது நீங்கள் படித்துக் கொண்டிருந்தாலோ, தேர்வு எழுதி ரிசல்ட் வெளிவராமல் இருந்தாலோ அந்த நேரத்தில் நீங்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது நல்லது.

போட்டித் தேர்வை குறித்து என்ன தெரியும் ?

போட்டித் தேர்வை குறித்து என்ன தெரியும் ?


போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கு முன்பு நம்முடைய கல்வி மற்றும் வயது, தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 10 மற்றும 12-ஆம் படித்தவர்கள் என்னென்ன போட்டி தேர்வுகளில் பங்கேற்கலாம், பட்டதாரிகள் எந்தெந்த போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என ஆராய வேண்டும். வங்கி, ரயில்வே போன்ற துறைகளுக்கான கல்வித் தகுதி என்ன என்பதை எல்லாம் முதலில் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறுதான் தேர்விற்கு தயாராக வேண்டும்.

இந்த மூனும் உங்க கிட்ட இருக்கா ?

இந்த மூனும் உங்க கிட்ட இருக்கா ?

 

1. மொழி

     

    ஒரு போட்டித் தேர்வுக்கு தயாராகுவோர், மொழியறிவு நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் மிக அவசியம். ஏனென்றால் பெரும்பாலும் போட்டித் தேர்வுகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்படும். குறிப்பாக மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண்களை பெற்று பயனடையலாம்.

     

    2. பொது அறிவு

    2. பொது அறிவு

     


    மொழிக்கு அடுத்தபடியாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது பொது அறிவு. அன்றாட நாட்டு நடப்புகள், வரலாறு, அறிவியல் என எதையும் விட்டுவைக்காமல் அறிந்துகொள்ள வேண்டும்.

     

    3. அடிப்படைக் கணிதம்

    3. அடிப்படைக் கணிதம்


    மூன்றாவதாக நீங்கள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அடிப்படைக் கணித அறிவு. இந்த மூன்றும் இருந்தாலே யார் வேண்டுமானாலும் போட்டித் தேர்வில் பங்கேற்கலாம். பொது அறிவைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியான உடன் படிக்கத் தொடங்குவது எந்த விதத்திலும் பயன் அளிக்காது. பொது அறிவு குறித்த தேடல்கள் எப்போதும் உங்களுக்குள் இருக்க வேண்டும்.

    தேர்வுன்னாலே பயமா?

    தேர்வுன்னாலே பயமா?


    இத்தனை லட்சம் பேர் போட்டித் தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்களிடம் எப்படி போட்டியிட்டு நான் வெற்றிபெறுவது ? இதுபோன்ற பயம் இங்கே பலருக்கும் இருக்கும. எத்தனை லட்சம் பேர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தாலும், கடினமாக உழைக்கக் கூடியவர்கள் அதில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே என மறவாதீர்கள்.

    எதை படிக்கலாம்? எப்படி படிக்கலாம்?

    எதை படிக்கலாம்? எப்படி படிக்கலாம்?


    அன்றாடம் வரும் செய்தித் தாள்கள், வாரம் ஒரு முறை டிஎன்பிஎஸ்சி குறித்தான சிறப்பு புத்தகம் என பல வந்தாலும் அவை தேர்விற்கு உங்களை தயார் படுத்த மட்டுமே. நீங்கள் படித்ததை நீங்களே மீண்டும் மீண்டும் சோதனை செய்து பாருங்கள். இதற்கென உள்ள சிறப்பு வகுப்புகளுக்குச் சென்றாலும் வாரம் ஒரு முறை நீங்கள் தனியே தேர்வெழுதி உங்களை சோதித்துக் கொள்ளுங்கள்.

    தேர்வுத் தயாரிப்பில் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள்:

    தேர்வுத் தயாரிப்பில் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டிய முக்கிய வழிமுறைகள்:

    மொழிக்கு முக்கியத்துவம் :

    தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் 50 சதவிகிதம் கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்திலிருந்து கேட்கப்படுவதால், உங்கள் தயாரிப்பில் பெரும்பாலான நேரத்தை மொழிக்குச் செலவிடுங்கள். பொதுவாக, மாணவர்கள் மொழிப்பாடத்தை எளிமையாகக் கருதி, அதிக சிரமம் எடுப்பதில்லை. ஆனால், மொழிப்பாடமே வெற்றியை நிர்ணயிக்கும் என்பதை மனதில்கொள்ளுங்கள்.

     

    பாடங்களை வரிசைப்படுத்துங்கள்

    பாடங்களை வரிசைப்படுத்துங்கள்


    கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் பாடவாரியாக எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதைக் கணக்கிடுங்கள். அதில், அதிகப்படியான கேள்விகள் கேட்கப்படும் பாடம் உங்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்க வேண்டும்.

    சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் :

    சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் :


    பல்வேறு பாடங்களும், அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளும் உங்களுக்கு ஓரளவிற்கு தெரிந்திருக்கும். ஒரு வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் நீங்கள் எந்த அளவுக்கு அறிந்துள்ளீர்கள் என எழுதுங்கள். அதிக மதிப்பெண் தரும் முக்கியமான பாடத்தில் குறைவாகப் படித்திருந்தால், உடனடியாக அந்தப் பாடத்தைப் படியுங்கள். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் உங்களைப் பரிசோதனை செய்து, உங்கள் தயாரிப்பைச் சரியான வழியில் எடுத்துச் செல்லுங்கள்.

    திரும்பத் திரும்பப் படியுங்கள் :

    திரும்பத் திரும்பப் படியுங்கள் :


    நம்மில் ஒரு சிலர் ஒரு பகுதியினை ஓரிரு முறை படித்தவுடனேயே அடுத்த பகுதிக்குச் சென்றிடுவோம். ஆனால், படித்தது மனதில் நின்றிருக்காது. போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ஒரு பகுதியினை தொடர்ந்து படியுங்கள். ஒரு முறை படித்தால் மறக்கும். ஐந்து முறை படித்தால், பத்து முறை படித்தால் நிச்சயம் மறக்காது.

    படிப்பை, தேர்வோடு தொடருங்கள் :

    படிப்பை, தேர்வோடு தொடருங்கள் :


    நீங்கள் ஒரு பாடத்தைப் படித்தால் அந்தப் பாடம்சார்ந்து முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து, உங்களது தயாரிப்பை சோதித்துக்கொள்ளுங்கள். உங்கள் தயாரிப்பு, அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு தயாரிப்பில் உள்ள குறைகளை சரி செய்துகொள்ளுங்கள். தொடர்ச்சியான தயாரிப்பே வெற்றிக்கு வழிகாட்டும்.

    கணிதத்துக்கு முக்கியத்துவம்:

    கணிதத்துக்கு முக்கியத்துவம்:


    ஏற்கனவே கூறியது போல பொது அறிவுப் பகுதியில் உள்ள கேள்விகளில் 25/100 கணிதப் பகுதியிலிருந்து தான் கேட்கப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பகுதியைக் கடினமாகக் கருதுவதால், கணிதப் பகுதியில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணும் வெற்றிக்கு வழிவகுக்கும்.

    நேர மேலாண்மை :

    நேர மேலாண்மை :


    தேர்விற்கு முந்தைய மூன்று மாதங்கள் உங்கள் வாழ்வை முழுமையாக மாற்றும் நாட்களாகும். ஒவ்வொரு நாளும் வாரமும் எவ்வளவு மதிப்பெண்ணுக்குத் தயார் செய்துள்ளீர் என்பதைக் கணக்கிடுங்கள். கடினமாக உழையுங்கள். இந்த நாட்கள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவை என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    நடப்பு நிகழ்வுகள்:

    நடப்பு நிகழ்வுகள்:


    பெரும்பாலான மாணவர்களுக்கு மனதில் எழும் கேள்வி, ''நடப்பு நிகழ்வுகளை எவ்வாறு தயாரிப்பது, எந்த மாதத்திலிருந்து படிப்பது'' என்பதுதான். டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரும்பாலான நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் தேர்வுக்கு முந்திய மாதத்திலிருந்து அதிகபட்சம் ஒரு வருட காலத்துக்குப் படிக்க வேண்டும். இதற்கு தினமும் செய்தித்தாள்களையும், சந்தையில் காணப்படும் நடப்பு நிகழ்வு சார்ந்த தொகுப்புப் புத்தகங்களையும் வாங்கிப் படிக்கலாம்.

    நிறைய தேர்வு எழுதுங்கள்:

    நிறைய தேர்வு எழுதுங்கள்:


    டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க தவறிவிடாதீர்கள். தேர்விற்கு முந்தைய காலத்திலேயே நிறைய மாதிரி தேர்வை எழுதும்போது, தவறான விடையை நீக்கி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பெறுவீர்கள். நான்கில் ஒரு விடையைத் தேர்ந்தெடுக்கும் வினாக்களுக்கு, சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட, தவறான விடையை நீக்கும் முறை சரியான விடையைத் தேர்ந்தெடுக்க உதவும்.

    தேர்வை எதிர்கொள்ளும் முறை :

    தேர்வை எதிர்கொள்ளும் முறை :


    கேள்விகளை மூன்று விதமாகப் பிரித்துக் கொள்ளுங்கள். எளிமையானவை, கடினமானவை, மிதமான கடினத்தன்மை கொண்டவை என பிரித்துக் கொள்ளுங்கள். எளிமையான வினாக்கள் பார்த்தவுடனேயே பதில் கிடைத்துவிடும். கடினமானவை என்பது நமக்குச் சரியாகத் தெரியாத பகுதி. இந்தக் கேள்விகளைக் கடைசியாக எதிர்கொள்வது நல்லது. மிதமான கேள்விகளில் ஓரிரு விடைகளை நாம் தவறு என நீக்கிவிட்டு மீதமுள்ள ஓரிரு விடைகளில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும். அதிக மாதிரி தேர்வுகளில் நம்மைத் தயார்செய்யும்போது இந்தத் தடுமாற்றங்களை தடுக்க முடியும்.

    பொருளாதார சூழ்நிலையோ, சமூகக் காரணியோ உங்கள் முயற்சியை தடுக்க முடியாது. உங்கள் முயற்சி மட்டுமே உங்களுக்கான வெற்றியைத் தரும். நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு பல பேர் காரணமாக இருக்கலாம், தோல்வியுற்றால் நீங்கள் மட்டும்தான் காரணம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
15 Quick Tips for Successful Exam Preparation In TNPSC, UPSC, RRB, Etc
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X