வேலை தேடுபவரா நீங்கள்?... எல்லா இன்டெர்வியூவிலும் இந்த 15 விஷயம் கட்டாயம் இருக்கும்!

Posted By: Gowtham Dhavamani

வாழ்க்கையை சூப்பரா ஓட்டணும்னா சும்மா இல்ல. சில அதிஷ்டகாரங்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு... நிச்சயம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக சில தந்திரங்களை கையாண்டுதான் ஆக வேண்டும்.

அதுக்காகத்தான் புதுசா வேலை தேடறவங்களுக்கு 15 விதமான பொதுவான யோசனைகளை இங்க புட்டு, புட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை படிங்க வேலையை எளிதில் பிடிங்க.

1. சுய மதிப்பீடு அவசியம்:

வேலை தேட ஆரம்பிக்கறதுக்கு முன்பு நம்மள நாமளே எதில் நாம் சரி, சரியில்லை என்று ஒரு சுய பரிசோதனை பண்ணிக்கணும்.

எந்த வேலையை கொடுத்தால் சரியாக கொடுத்த நேரத்தில் முடித்து கொடுப்போம்ன்னு ஒரு முடிவுக்கு நீங்களே வரனும்.

பின்பு அந்த முடிவுக்கு தகுந்த மாதிரி நல்ல வேலை கிடைத்து திருப்தியாக சம்பாதிச்சி, சந்தோஷமான வாழ்க்கை வாழலாம்.

2. தீவிர தேடுதல்:

ஒரு கெத்தான வேலை கிடைப்பதில் இருக்கும் ரகசியம் என்னான்னா தீவிரமா வேலை தேடறதும், பலவிதமான வேலைகளுக்கான தகவல்களை திரட்டுவதும்தான்.

விண்ணப்பிக்க ஒரு நல்ல நிர்வாகத்தை செலக்ட் பண்ணா மட்டும் போதாது. விண்ணப்பத்தை உரிய முறையில், வசீகரமான வார்த்தைகளை கொண்டு நிரப்பி இன்டெர்வியூவுக்கு தயாராவதும் முக்கியமானது. இதுக்காக நாம சேர்த்த தகவல்கள் நமக்கு நிச்சயம் உதவும்.

3. விண்ணப்பம் தயாரித்தல்:

வேலை தேடுவதில் ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா சூப்பரா.. ஒரு விண்ணப்பத்த தயார் பண்றதுதான்.

இதன் மூலம் நீங்கள் விரும்பும் வேலை வாய்ப்பை சுலபமாக பெறலாம். அதில் உங்களுடைய முக்கிய சாதனைகள், திறன்கள், அனுபவம், கல்வி, பயிற்சி எல்லாவற்றையும் வேலை கொடுக்கும் நிர்வாகத்தின் மனதில் படுவது போல் தெளிவாக குறிப்பிட்டு, ஒவ்வொரு வேலைக்கும், கம்பெனிக்கும் அனுப்புங்க.
நீங்கள் விண்ணப்பத்தில் கையாண்ட வார்த்தைகளும், உங்கள் திறமைகள் பற்றி குறிப்பிட்ட விதமும் உங்களுக்கு நல்ல வேலைய தேடிக் கொடுக்கும்.

4. ஆன் லைன் மூலம் தொடக்கம்:

தற்போது, வேலை தேடுபவர்களும், கொடுப்பவர்களும் பொதுவாக ஆன்லைன் பக்கத்திலே சந்தித்து பயனடைகின்றனர்.

லிங்கிடு இன், டுவிட்டர், பேஸ் புக் இல்லன்னா வேலை தேடுபவர்களின் தனிப்பட்ட இணையதளங்கள் மூலமாகவோ நமது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வப்போது, இந்த தளங்களுக்கு சென்று தேவைப்படாத விபரங்களை நீக்குவதோடு, தேவையான விபரங்களை சேர்த்துக் கொள்வதின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து இனிதான வாழ்க்கையை தொடங்கலாம்.

5. ஒழுங்குமுறை:

வேலைக்கு போகும் முன், வேலைவாய்ப்பு சம்மந்தமான கண்காட்சிக்கு சென்று, அங்கு வேலை வாய்ப்பு வழங்குபவர்களை சந்தித்து பேசுவது ஒரு சிறப்பான வேலை தேடலுக்கு ஏற்றது.

6. வலைதள தொடர்புகளை பயன்படுத்துதல்:

வேலை வாய்ப்பு தேடுபவர்களில் அதிகம் பேர் ஆன்லைனில், பலமான தொடர்புகள் வைத்திருப்பதால், இந்த தொடர்புகள் வெற்றிகரமாக வேலை தேட உதவும் என்பதை மறக்க வேண்டாம்.
உங்கள் வேலைக்கேற்ற புதிய நபர்களை நீங்க தொடர்ந்து தேடலில் இருந்தால் வெற்றி நிச்சயம்.

7. தகவல் நேர்காணல்:

தகவல் நேர்காணல்களை தொடர்ந்து செய்யுங்க .. ஆராய்ச்சி , நெட்வொர்க்கிங் இரண்டுக்கும் உதவுவது இந்த தகவல் நேர்காணல்தான்.

8. தினசரி முயற்சி:

தினமும் வேலை தொடர்பான நம்ம இலக்குகளை முடிக்க முயற்சிக்கிறது ரொம்ப நல்லது.

நம்ம எண்ணங்களும், முயற்சிகளும் உண்மையா இருக்கறதால சில சமயங்கள்ல நாம் சோர்வானாக்கூட கடைசியில ஜெயக்கிறதுதான் நாமதான்னு நம்பிக்கை பொறந்துடும்.

இதுக்குக் காரணம் தினமும் தேடும் முயற்சியில் நாம அடையற திருப்திதான். இதனால வெற்றி நமக்கு ரொம்ப சீக்கிரத்துல கெடச்சிடும்.

9.தனிமை முயற்சி வேண்டாம்:

நீங்க தனியாக இருந்து கொண்டு வேலை தேடற முயற்சியில் ஈடுபடும் போது பல சமயங்களில் நீங்க எரிச்சலடைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

வேலை தேடறது ரொம்ப போரடிக்கற மாதிரியிருக்கும். ஒரு குழுவா இருந்து இந்த முயற்சியில ஈடுபட்டாலோ, மத்த வேலை தேடும் நண்பர்களுடன் தொடர்பு வச்சிருந்தாலோ, உங்களுக்கு ஒரு தைரியமும், நிறைய புது ஐடியா கிடைக்கும். பல பேர் ஒன்ணா சேர்ந்து முயற்சிக்கும் போது நிச்சயம் வெற்றிதான்.

10. திறமை வெளிப்படுத்தல்:

வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு கதை மாதிரி சொல்லும் போது உங்களுக்குள் இருக்கும் திறமை அளவுக்கதிகமாக வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

ஒரு இன்டெர்வியூவிலோ, இணைய தளத்திலோ இந்த திறமையை வெளியே தெரியும்பட்சத்தில் நம்முடைய உண்மையான சாதனைகள் தெரிஞ்சி வெற்றி நிச்சயம் தேடி வந்து கதவ தட்டப்போவது உறுதி.

11.இன்டெர்வியூக்கு தயாராதல்:

நீங்கள் முதல் முதலா இன்டெர்வியூக்கு போகறதுக்கு முன்னாடி பொதுவாக இன்டெர்வியுவில் கேட்கற கேள்வியை தயார் பண்ணிக்கிட்டு அதுக்கு பதிலையும் தயார் பண்ணிட்டு, உங்க நண்பர்களோட இல்ல இணைய தள தொடர்புகளோட மாதிரிக்காக ஒரு இன்டெர்வியூ நடத்தி பழகலாம்.

இதல உங்களுக்கு நல்ல நம்பிக்கை வந்துடிச்சின்னா அப்புறம் என்ன வெற்றி உங்க பக்கம்தாங்க..

12. இன்டெர்வியூவை எதிர்கொள்ளல்:

இன்டெர்வியூக்கு போறதுக்கு முன்னால கம்பெனிய பத்தியும், இன்டெர்வியூ பண்றவங்க பத்தியும் தகவல்களை ஒரு அலசல் பண்ணுவதோடு, அவங்க எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி டீசன்ட்டா டிரஸ் பண்ணி 10 நிமிஷத்துக்கு முன்னாடியே போய்டுங்க.
அதுக்கு முன்னதாக என்னென்ன ( பேப்பர், பேனா , சான்றுகள், இன்டெர்வியூ அழைப்புக் கடிதம்) தேவைப்படுமோ அதெல்லாத்தையும் எடுத்துகொண்டு போங்க.

நல்ல சிரிச்ச முகத்தோட அங்குள்ள வரவேற்பாளர் முதல் மேனேஜர் வரை எல்லோரையும் பார்த்து வணக்கம் வையுங்க.

நம்பிக்கையோட இன்டெர்வியூ பண்றவங்கள நேருக்கு நேர் பார்த்து பதில் சொல்லுங்க. ஒரு பாராட்டுடன் நேர்காணல் முடிச்சிட்டு, அடுத்தகட்ட நடவடிக்கையைப்பத்தி ( next steps in the process) கேள்வி கேட்க தயங்காதீங்க..

13. நன்றி கூறுதல்:

இன்டெர்வியூ முடிந்ததும், இன்டெர்வியூ நடத்திய நிறுவனத்துக்கு நன்றி கூறி ஒரு மெயில் அல்லது போஸ்டல் மூலமாகவோ நன்றி கூறலாம்.

இதனால் அந்த நிறுவனத்தினர் மகிழ்ச்சியடைந்து அதன் மூலம் உங்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்குமென்பதை மறக்காதீங்க.

வேலை தேடுபவர்களில் அதிகமானோர் இந்த சிறிய மரியாதையை இப்பவும் கடைபிடிக்கிறாங்க..

14. மேனேஜர்களுடன் தொடர்பு:

இன்டெர்வியூ முடிஞ்சதும், நன்றி மெயில் அனுப்பியதும் எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சின்னு நெனைக்கக் கூடாது.

வேலை கொடுக்கும் மேனேஜருடன் தொடர்ந்து நீங்க தொடர்புலயே இருக்கணும். வேலையின் பேரில் இருக்கும் உங்க ஆர்வத்த காட்டுங்க..நமக்கு தேவையானதை செய்வதில் தப்பு ஏதுமில்லை..

15. வேலை குறித்த எதிர்பார்ப்பு:

வேலை சீக்கிரத்தில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.

அதே நேரத்துல நாம் கற்பனை பண்ற மாதிரி ரொம்ப சீக்கிரத்துல கெடச்சிடும்ன்னு நினைக்கக் கூடாது. சிலமாதங்கள் கூட ஆகலாம். இது போன்ற நேரங்களில் நாம மனச திடப்படுத்தி கொள்ளும் போது திடீரென்று அதிஷ்டவசமாக நமக்கு வேலை வர நிச்சயம் வாய்ப்பிருக்கு.

வேலை தேடுபவர்களுக்கு மேலும் சில குறிப்புகள்:

வேலை தேடி பழைய முறைகளில் விண்ணப்பிக்கும்போது, தற்போதுள்ள இணையதள தொடர்பு சூழ் நிலைக்கு பொருந்தாவிடில் வேலை வாய்ப்பு கிடைப்பது,குதிரை கொம்பாகத்தான் இருக்கும்.

முதலில் நேர்மறையான பழக்கவழக்கங்களும், கண்ணோட்டமும், உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

வேலை அளிக்கும் நிறுவனங்கள் இதைத்தான் விரும்புகின்றன.

நீங்கள் நீண்ட காலமாக வேலை இல்லாதவராக இருந்து தற்போது தேடும் போது, பழைய கோபம் அல்லது முந்தைய சுபாவங்களை விட்டுவிட்டு , புதிய நம்பிக்கையுடன் வேலை வாய்ப்பை எதிர் கொள்வது நல்லது.

அடுத்ததாக நீங்கள் பழைய பணியாளராக இருக்கும் பட்சத்தில் வேலை தேடும் போது, வயது புதிய வேலைக்கு தடையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் விண்ணப்பத்தில் வயது குறித்த பதிவுகளை நீக்கிவிட்டு, எத்தனை ஆண்டுகள் அனுபவம் என்பதை மட்டும் குறிபிட்டு, நேர்காணலில் பொருந்தக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

மூன்றாவதாக புதிய வேலைக்கு நீங்கள் வர முயற்சிக்கும் போது கூடுதல் பயிற்சி அல்லது அனுபவங்களை பெற்று வருமாறு கூறப்படலாம்.

நான்காவது, அனுபவமில்லாத நிலையில் ஒரு முழு நேர வேலை பெற நீங்கள் முயற்சிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அலுவலகம் வந்து அனுபவம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.

ஐந்தாவதாக, அவசர காலங்களில் அதிக ஆட்கள் தேவைபபடும் இடத்துக்கு நீங்கள் இடமாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம்.

கடைசியாக, விண்ணப்பத்தில் எந்த வேலைக்கு என குறிப்பிடாத பட்சத்தில், அவர்களுக்கு நிர்வாகத்தினர் அதிகம் பேர் பணி புரியும், வேறெந்த வேலையாவது அளிக்கலாம். இதனால் விரும்பிய வேலை சில பேருக்கு கிடைக்காமல் போகிறது.

இந்த நிலையில் ஆன் லைன் மூலம் வேலை தேடும்போது ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட காலி இடங்களை, கணினி மீண்டும் காட்டாது என்பதால் இந்த முறை அதிக பலனுள்ளதாக உள்ளது.

English summary
15 Quick Tips for Finding a New Job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia