ஆபீஸ் குட்புக்ல உங்க பெயர் வேணுமா? இந்த 15 விஷயத்தில் சூதானமா இருந்த போதும்!

Posted By: Gowtham Dhavamani

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் நன்கு வேலை செய்து, சிறந்த பணியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்றே விருப்பப்படுகிறார்கள்.

ஆனால் நீங்கள் வெற்றிகரமான தொழிலாளியாக வரவேண்டுமென்றால் இதுமட்டும் போதாது. உங்கள் தொழில் திறனை மேலும் கூர்மைப்படுத்துதல், குழுக்களில் திறமையான தொழிலாளியாக பணியாற்றுவது மிகவும் அவசியம்.

இந்த திறன்களை நீங்கள் வளர்த்துக் கொண்டு, வெற்றிகரமான பணியாளராக நீங்கள் எப்படி வரவேண்டும் என்பதை கீழ் வரும் 15 அம்சங்கள் குறிப்பிடுகின்றன.

1. உங்கள் வேலையை சிறப்பாக செய்வது எப்படி?

நீங்கள் சாதாரணமாக ஒரு வேலையை செய்வதற்கும், பெருமையுடன் ஒரு வேலை செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

வேலையை பகுதி, பகுதியாக பிரித்து சிறப்பாக அமைய கூடுதல் முயற்சி எடுத்து, நிறுவனத்தாரின் திருப்தியை பெற்று வேலையில் பிரகாசிக்கலாம்.

2. கடின உழைப்பு:

ஒரு காலத்தில் நேரத்துக்கு அலுவலகம் வந்து, ஏதோ வேலை பார்த்துவிட்டு நேரத்துக்குள் வீட்டுக்கு செல்வதை பெரிதாக நினைத்தார்கள்.

ஆனால் தற்போது அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்கள் காலம் தவறாமல் வேலைக்கு வந்து, கொடுக்கும் சம்பளத்துக்கு தகுந்தவாறு வேலை செய்கிறார்களா என்பதை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

எனவே சிறந்த பணியாளராக ஆக விரும்புபவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வந்திருந்து, தேவைப்பட்டால், நேரம் பார்க்காமல் கடின உழைப்பு மேற்கொள்ள தயாராக வேண்டும்.

3. நல்ல பணியாளராக நடத்தல்:

வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து எவ்வாறு கூடுதல் கவனத்துடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

வேலைபார்க்கும் இடத்தில் நம்மை முட்டாளாக்க பல சந்தர்ப்பங்கள் இருந்தாலும், அதற்கு இடம் கொடுக்காமல், தொழில் விதிகளுக்கு கட்டுப்பட்டு, தொழிலுக்கேற்ற உடையணிந்து, மதிப்பு மிக்க தொழிலாளியாக நடப்பது உங்கள் வாழ்க்கையை உயர வைக்கும்.

4. நேர்மறையான அணுகுமுறை:

அலுவலகத்தில் எப்போதும் நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டாம். அதே சமயம் எப்போதும் சிடு மூஞ்சியாகவும் இருக்க வேண்டாம்.
உதவி மனப்பான்மையுடன் இருப்பதையும், நேர்மறையான அணுகுமுறையையும் உடன் வேலை செய்பவர்கள் விரும்புவார்கள்.

எதிர்மறையாக நடந்து கொள்ளும் போது எல்லோரும் சேர்ந்து கவிழ்த்துவிடக் கூட தயங்க மாட்டார்கள். எனவே நேர்மறையான அணுகுமுறை அவசியம்.

5. முயற்சி எடுத்தல்:

உங்கள் வேலையில் நீங்கள் மிகவும் சரியாக இருப்பது உண்மைதான். தேவைப்பட்டால் கூடுதலாகவும் பணி செய்கிறீர்கள்.

இதுவும் அவசியமான ஒன்றுதான். அதே போல உங்கள் துறையும் இருக்க வேண்டும், செயல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனவும் எதிபார்க்கிறீர்களா? இது குறித்து உங்கள் முதலாளியிடம் எடுத்துச் சொல்ல விரும்புகின்றீர்களா? எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் குழப்பமில்லாமல், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் நிறுவனத்தின் மீது உங்களுக்குள்ள அக்கறை முதலாளி உட்பட அனைவருக்கும் தெரிய வரும்.

6. நல்ல குழுப் பணியாளர்:

வெற்றிகரமான நிலையை அடைய பணியாளர்கள் தங்கள் குழுவில் சிறந்த வேலைக்காரர்களாக இருக்க வேண்டும். சிறந்த தகவல் தொடர்பு அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணியாளர்களிடையே நல்ல முறையில் பழகுதல் அவசியம். குழுவின் வெற்றிக்கு தங்கள் செயல்பாடு எவ்வாறு உதவியது என்பது குறித்து உங்களுக்கு நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் உங்கள் குழுவில் உள்ள நல்ல தொழிலாளிகளிடம் உங்களின் செயல்பாடு பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

7. உங்கள் முதலாளியை அறிந்து கொள்ளுங்கள்:

நீங்கள் உங்கள் முதலாளியிடம் நட்பு வைத்துக் கொள்ளவோ, அல்லது நெருங்கிப் பழகவோ விரும்ப மாட்டீர்கள் என்பது உண்மைதான்.

ஆனால் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அவர் என்ன நினைக்கிறார்? எப்படி செயல்படுகிறார், நிர்வகிக்கிறார்? என்பது குறித்து நீங்கள் அறிந்து கொள்வது நல்லது.

அப்போதுதான் அவருடைய தேவையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் நீங்கள் சிறப்பாக பணியாற்ற முடியும்.

8. உங்கள் முதலாளியை புரிந்து கொள்ளுங்கள்:

தங்களுக்கு வேலையளித்த முதலாளியை புரிந்து கொள்ளாமலேயே, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே பல ஆண்டுகளாக வேலை பார்க்கும் ஊழியர்களும் உண்டு.

9. ஆக்கபூர்வமான விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்:

ஒரு பணியாளர் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் பிறர் செய்யும் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, அதில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொண்டு, தனது வேலையை முன்பைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான்.

சில முதலாளிகள் வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வேலை வாங்குவார்கள். சில முதலாளிகள் உங்கள் அனுபவத்தின்படியே வேலை செய்ய சுதந்திரம் அளிப்பார்கள்.

எனவே நீங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு மேலும் முன்னுக்கு வரலாம்.

10. உறவுகள் வளர்த்தல்:

உங்களுடன் பணியாற்றும் வேலையாட்களை எப்போதும் நீங்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
அவர்கள் செய்யும் வேலை நன்றாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் திருப்தி தெரிவிப்பது நல்லது.

அதனால் தங்கள் பணியில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு வேலை மேலும் சிறப்பாக அமையும்.
இதனால் உங்களை அவர்கள் விரும்புவதால் தொழில் உறவுகள் மேம்படும். நீங்களும் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு நட்சத்திர பணியாளராக மிளிர வாய்ப்புண்டு.

11. புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்:

ஒரே வேலையை பல காலங்களாக நாம் திரும்பி, திரும்பி செய்கின்ற போது போரடித்து (bored ) விடுகிறது.

எனவே காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப, தேவையான கூடுதல் பயிற்சி, தொழில் கல்வி ஆகியவற்றை பயில வாய்ப்பு கிடைக்கின்ற போது அவற்றை பயன்படுத்திக் கொண்டு, புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

12. தீர்வு காண்பதில் முக்கியமானவராக இருங்கள்:

தொழிலாளிகள் யாரும் உங்களை வெறுக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது அவர்களில் ஒருவர் ஒரு பிரச்னையை முன் வைக்கும் போது நீங்கள் அதற்க்கு தீர்வு காண வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு காணும் பணியாளர்களுக்கு எப்போதுமே வேலை பார்க்குமிடத்தில் தனி மதிப்பு உண்டு.

அந்த மதிப்பை நீங்களும் பெற்றுவிட்டால் நீங்கள் அந்த நிறுவனத்தில் தவிர்க்க முடியாத பணியாளராகிவிடுவீர்கள். இது உங்கள் அந்தஸ்த்தை மேலும் அதிகரிக்கும்.

13. வதந்திகளை தவிர்த்திடுங்கள்:

அலுவலகத்திற்குள் பரப்பப்படும் வதந்தி, கிசுகிசுக்களை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.
அதிலிருந்து நாம் விலகியிருப்பதே நல்லது. என்றாலும் வதந்திக்கு இடமளித்துவிட்டால் நமது நிலை தாழ்ந்து போகவும் வாய்ப்பளித்துவிடும்.

அதனால் வேலையில் நம்மால் கவனம் செலுத்தாமல் போகும். எனவே கூடுமானவரை வதந்தி, கிசு கிசுக்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது.

14. பலன் கருதாமல் உழைப்பு:

ஒரு தொழிற்சாலையில் காலத்துக்கு தகுந்தவாறு, பணி செய்யும் முறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இது குறித்து உரிய ஆலோசனைகளை உங்கள் முதலாளியிடம் பெற்று, இதற்கான திட்டத்தை தொடங்கலாம்.
அதுபோன்ற நேரங்களில் பலன் கருதாமல் நீங்கள் கூடுதல் பொறுப்பெடுத்து அதிகம் உழைக்க வேண்டியதாக இருக்கும். அதற்கு தயாராக வேண்டும்.

15. புதிய ஊழியர்களுக்கு வழிகாட்டி:

வேலை பார்க்கும் இடங்களில் அவ்வப்போது புதிய பணியாளர்கள், இளம் பணியாளர்கள் வேலையில் சேருவார்கள்.

நீங்கள் அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் சீனியர் தொழிலாளர் என்ற முறையில் அவர்கள் வேலையை கற்றுக்கொள்ளும் விதத்தில் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

இதனால் முதலாளிக்கு உங்கள் மீது நல்ல மதிப்பு ஏற்பட்டு உங்கள் எதிர் காலம் பிரகாசமாக இருக்கும்.

English summary
15 Quick Tips for Excelling at Work

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia