மயக்கமா... கலக்கமா... புது ஆஃபிஸ் பயத்தை போக்க 15 வழிகள்!

Posted By: Kani

புதிதாக வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளித்தாலும் புதிய இடம், புதிய நண்பர்கள், நியூ பாஸ் என ஒரு சில தயக்கம் இருப்பது பொதுவான வழக்கம்தான்.

என்னதான் கைநிறைய சம்பளம், கார் என வேலை கிடைத்தாலும் நம் ரசனைக்கேற்ப நண்பர்களை உடனடியாக தேர்ந்தேடுப்பது கொஞ்சம் கடினமானதுதான்.

இந்த 13 பார்முலாவை மட்டும் பலோ பண்ணா போதும் அப்படியே காந்தம் இரும்பை ஈர்ப்பது போல உங்கள் நண்பர்களை ஈஷியா உங்க பக்கம் கொண்டு வரலாம்.

1.உங்களை அறிமுகப்படுத்துங்கள்

ஆபிஸ் போன உடனே சந்திக்கும் ஒவ்வெரு நபரிடமும் உங்களை அறிமுகப்படுத்த மறக்காதீர்கள். ஒரு பொன்சிரிப்போடு, அலுவலக, நடைமுறைகள், வீக் எண்ட் பிளான் போன்ற விஷயங்களை பேசுவதன் மூலம் எளிதாக நம்மை அறிமுகப்படுத்த முடியும்.

2.பெயர் சொல்லி அழையுங்கள்

ஒரு நபரை பெயர் சொல்லி அழைப்பதில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான். அதுவும் பெயர் தெரியாத நபர் ஒருவர் அலுவலகத்தில் திடீரென நம்மை பெயரிட்டு அழைத்தால் அதன் மதிப்பே தனி.

அலுவலகத்திற்கு சென்றதும் முதலில் நண்பர்களின் பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள். முதல் சந்திப்பிலே பெயர் சொல்லி அழைப்பதால் உங்களின் நட்பு இன்னும் ஆழமாக வாய்புள்ளது.

 

3.மற்ற டெஸ்க் நண்பர்களுடன் உணவருந்துங்கள்

நான் சொல்வது, மதிய உணவே அல்லது காலை உணவே எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் மற்ற டெஸ்க் நண்பர்கள் அனைவருடனும் சகஜமாகப் பேசி உணவருந்துங்கள்.

சாப்பிடும் நேரம் தான் உங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு. இதன் மூலம் உங்கள் நட்பு வட்டத்தை மேலும் விரிவாக்கலாம்.

 

4.ஒரு கப் காபி

காபி குடிப்பது என்பது இன்றைய நாட்களில் ஒரு கெட்ட பழக்கமாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு காபி போதும் வருங்கால மனைவியில் இருந்து வருங்கால பதவி வரை தீர்மானிப்பதற்கு.

இது உங்களின் சகபுதிய நண்பர்களை பற்றி அறிய கிடைத்த ஒரு அர்ப்புதமான வாய்ப்பாக அமையும். இன்று காபிக்கு நீங்கள் பணம் கொடுத்தால், நாளை அவர் பணம் கொடுப்பார் உங்களின் நட்பு நீட்சிக்கு இது ஒரு பாலமாக அமையும்.

 

5.ஸ்மால் மீட்டிங்

இது நட்பின் இருக்கத்தை அதிகரிக்கும் சாப்பிட்ட பின்னரோ அல்லது டீ ப்ரேக் டைம் என எப்போ வேண்டுமானலும், ஒரு 5 நிமிடம் கலந்து ஆலோசிப்பதால் உங்கள் நண்பர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ள முடியும்.

6.டெக்கரேட் யுவர் டெஸ்க்

அலுவலகத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்ட இடத்தை அலங்கரியுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், போட்டோ, பேப்பர், அல்லது டாய்ஸ். இது உங்களின் ரசனைகளை மற்றவர்களுக்கு எடுத்து காட்டும். ஒத்த ரசனை உள்ளவர்களை எளிதாக உங்களுக்கு அடையாளம் காட்டும்.

7.ஸ்டார்ட் குரூப்

உங்களுக்கு பிடித்த புட் பால், சோஷியல் ஒர்க், என எந்த குரூப்பாக வேண்டுமானலும் இருக்கலாம். அப்படி ஏதும் இல்லையா புதிதாக உடனே ஒரு குரூப் ஸ்டார்ட் பண்ணுங்க. எடுத்துக்காட்டாக 'புக் கிளப்' ஈஷியா ஸ்டார்ட் பண்ணலாம். தம்மிடம் உள்ள புத்தகங்களை எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும். மற்றும் மற்றவர்களிடம் உள்ள புத்தகங்களோடு, நண்பர்களின் மனதையும் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

8.டேக் ஸ்னாக்ஸ்

அலுவலகத்திற்கு உணவு, அல்லது ஸ்னாக்ஸ் எடுத்துவர பழகுங்கள். உங்களுடன் பணிபுரியும் சகநண்பர்களை வாழ்த்தும் போது ஒரு சின்ன ஸ்னாக்ஸ் உடன் வாழ்த்த பழகுங்கள். அதுவும் வீட்டில் தயாரித்த உணவு என்றால் கூடுதல் சிறப்பு.

9.ஸ்டார்ட் சாட் ரூம்

பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சகலவிதமான விஷயங்களையும் பேச அனுதினமும் பயன்படுத்துவது சாட்ரூம்தான். இதில் கலந்து கொள்ள தவறாதீர்கள். சில வித்தியாசமான நண்பர்களை உங்களை அடையாளம் காட்டும்.

10.மாற்று இடங்களில் பணியாற்ற பழகுதல்

அலுவலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமர்ந்து பணியாற்ற கற்றுக்கொள்ளுங்கள். இது எளிதாக புதிய நண்பர்களை ஈர்க்க வழி வகுக்கும். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டியது மிக அவசியம்.

11.பாஸிட்டிவ் எனர்ஜி

எப்போதும் நம்மை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்,அது நமது பதவியின் மேல் கொண்ட பயத்தால் சேர்ந்த கூட்டமாக இருக்க கூடாது. நாம் எப்போதும் கொண்டாடப்படும் போது நமது வளர்ச்சியும் நம்மை சார்ந்தவர்களின் வளர்ச்சியும் அதிகமாகும்.

12.மே ஐ கெல்ப் யூ

உங்களுடன் பணிபுரிபவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் கேட்காமல் உதவ தயாராக இருங்கள். இது உங்களின் மதிப்பை ஒரு படி உயர்த்தும்.

13.க்ரீட் பண்ணுங்க

'ஹாய்... ஹலோ...வெல்கம்... ஹேப்பி மார்னிங் போன்ற வார்த்தைகளை அடிக்கடி யூஸ் பண்ண கத்துகோங்க. ஒருவர் நம்மை நேராக பார்க்கும் போது ஒரு ஹாய் கண்டிப்பாக கூற மறக்காதீர்கள்.

தலையை குனிந்த படி நகர்வதை தவிருங்கள் இது ஈஷியாக நண்பர்கள் வட்டத்தை உருவாக்கும்.

14. பாடி லாங்வேஜ்

நமக்கு தெரிந்த விஷயங்களை நமக்கு தெரியாமல் வெளிப்படுத்துவதில், 'பாடி-லாங்வேஜ்' எனப்படும், உடல் மொழி முக்கிய இடத்தை பிடிக்கிறது. எனவே உடல் மொழியில் கவனமாக இருங்கள். இது உங்களை மதிப்பிட பயன்படுத்தப்படும் அளவுகோள் என்பதை மறவாதீர்கள்.

15.வெளிப்படையாக இருங்கள்

வெளிப்படையாக இருங்கள். இதுவே தலைமைப் பண்பு. உங்களுடன் வேலை செய்வோர் தங்களின் பிரச்னைகளை உங்களுடன் வெளிப்படையாக பேசும் படி நடந்து கொள்ளுங்கள். இதற்கு யாரிடம் எதை பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என கற்பது அவசியம்.

English summary
15 Easy Ways to Make Friends at a New Job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia