பணி நீக்க காலத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய 12 விஷயங்கள்!

Posted By: Gowtham Dhavamani

எந்த நிருவனத்த எடுத்தாலும், அதுல ஒருத்தர் ரெண்டு பேர்த்த வேலைல இருந்து நீக்கி இருக்கறத பாக்க முடியும். இப்போதைக்கு அது எல்லா நிறுவங்களுக்கும் வழக்கமா போச்சு. அது போக, எல்லாத்துக்கும் இப்போ ஒரு எந்திரத்த கண்டுபுடிச்சு மனுஷன் செய்யற வேலைய எந்திரத்த செய்ய வெக்கறாங்க. இதனால பலரோட வேலை பறிக்கப்படுது. இது ஒருத்தருக்கு நேரக்கூடாத விஷயம். அவரோட தன்மானத்துக்கும், மனநலத்துக்கும் பாதிப்பு உண்டாக்கற விஷயம். அந்த நிலைய கடந்து வர கண்டிப்பா அவுங்களுக்கு உதவி தேவ. எப்படி இந்த நிலைய சமாளிக்கலாம்?

கொட்டி தீர்த்துவிடுதல் :

அடுத்த வேலைய தேடறதுக்கு முன்னாடி மனசுல இருக்கற சங்கடத்த வெளில கொட்டித்தீர்த்திடனும். நமக்கு ஒரு இழப்பு உண்டாகி இருக்குன்னு புரிஞ்சுக்கணும். அந்த எண்ணத்த கட்டுப்படுத்த கூடாது. அதுக்கு அப்பறம் அழனும், நல்லா சாப்டணும், வெளியூர்க்கு போகணும் இப்பிடி எந்த எண்ணம் மனசுல வந்தாலும் அத செய்யனும். மனசுக்குள்ள வெச்சுட்டு வருத்தப் படக்கூடாது.

எங்க தப்புன்னு பாக்கணும்:

மூன்றாவது நபரோட கண்ணோட்டத்துல இருந்து இந்த சூழ்நிலைய ஆராயணும். எங்க தப்பு நடந்துச்சு, எந்த விஷயத்த மாத்தி செஞ்சுருக்கலாம்? வேலை போனதுக்கு யார் காரணம். நானா? இல்ல நிறுவனமா? இல்ல வெளில இருந்து எதாச்சும் காரணமா? நாமதான் காரணம்னா என்ன செய்யணும் அத சரி செய்ய? இப்பிடி யோசிக்க ஆரம்பிச்சா ஒரு புது வழி தென்படும்.

மறுபக்கத்த பாருங்க :

இந்த சூழ்நிலை உங்களுக்கு ஒரு வாய்ப்பா இருக்கலாம். ரொம்பநாளா நீங்க செய்ய நெனச்ச ஒரு விஷயத்த முயற்சி செய்ய வேண்டிய நேரமா இது இருக்கலாம். நமக்கு ஏத்த மாதிரி இருக்குன்னு ஒரே வேலைல ரொம்ப நாள் நாம அப்படியே இருந்தர்றோம். கொஞ்சம் அதிகமா உழைப்ப குடுத்து வேற வேலைக்கு போகறதுக்கு நாம தயாரா இல்ல. என்ன ஆகுமோன்னு பயமும் இருக்கத்தான் செய்யும். அதனால சூழ்நிலைய பாசிடிவ்வா பாக்கறது நல்லது.

உங்க நிதிநிலைமைய சரிபாருங்க:

மாசம் மாசம் வரப்போற சம்பளம் இப்போ வாராது. அப்போ எந்த எந்த செலவ குறைக்கலாம்ன்னு யோசிக்கணும். குடும்பதுக்கிட்ட நம்ம நிலைமைய பத்தி சொல்லணும். நிறுவனத்துகிட்ட இருந்து உங்களுக்கு என்ன என்ன கெடைக்கும்ன்னு கேட்டு தெரிஞ்சுக்கணும். சேமிச்சு வெச்சுருந்தா புது வேலை கெடைக்கற வரைக்கும் அது போதுமான்னு பாக்கணும். அவசரப்படாம நிதானமா யோசிக்கணும். உங்க கிட்ட இருக்கற காச சரியா பயன் படுத்தனும்.

உங்களுக்கு நெருக்கமானவங்க கிட்ட பேசுங்க:

நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது, நம்ம கூட இருக்கறவங்க கிட்ட பேசணும். மனசு விட்டு பேசணும். எவளோ தூரம் நமக்கு இது கஷ்டமா இருக்கு.. மனசுல என்ன என்ன எண்ணம் தோணுது? என்ன செஞ்சா சரியா இருக்கும்? இப்பிடி மனசு விட்டு பேசணும்.

பதில் தேட ஆரம்பிங்க:

வேலை போன உடனே எல்லாரும் பல கேள்வி கேப்பாங்க. ஏன் வேலை போச்சு? நீ சரியா வேலை செய்யலையா? அதுக்கு என்ன காரணம்? இப்பிடி எல்லா கேள்விகளுக்கும் பதில் தேடி வைங்க.

ஜாப் போர்டல்ஸ் என்ற நண்பன் :

ஜாப் போர்டல் - வேலை கெடச்ச உடனே நாம மறந்து போற ஒரு விஷயம். வேலை போனதுக்கு அப்பறம் நாம தேடி போற ஒரு விஷயம். அதனால மறுபடியும் உங்க ரெஸ்யூம தூசி தட்டி எடுத்து விண்ணபிக்க பாருங்க. உங்க கூட முன்னாடி வேல செஞ்சவங்க கிட்ட பேசுங்க. அடுத்த வேலைக்கு என்ன திறமை தேவையோ அத வளத்துக்க பாருங்க. புதுசா என்ன வந்துருக்குனு தெரிஞ்சுக்கோங்க.

உங்கள கவனிங்க :

சரியா சாப்பிட்டு, எட்டு மணிநேரம் தூங்கி எந்திரிச்சு, உடற்பயிற்சி செஞ்சு உங்கள நீங்க கவனிச்சுக்கோங்க. மூலைல உக்காந்து அழணும்னு தோணும். ஆனா அது உங்களுக்கு உதவாது. அதனால, அடுத்த வேலைக்கு தயாராகுங்க.

உங்க திறமை என்ன?

இந்த வேலை போனதுக்கு உங்க கிட்ட ஒரு திறமை இல்லைன்றது காரணமா இருக்கலாம். ஆனா வேற என்ன என்ன திறமை உங்க கிட்ட இருக்குன்னு பாருங்க. அத சிறப்பா எப்படி பயன் படுத்த முடியும்ன்னு யோசியுங்க.

துறை மாற்றம் :

கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி ஒரே துறைல தான் வேலை பாப்பேன்னு யோசிக்காம, வேற துறை வேலை வாய்ப்புகளையும் கொஞ்சம் கவனிக்கணும். உங்க பலம் பலவீனம், என்னன்னு தெரிஞ்சுக்கணும். நேர்காணல்ல அது கண்டிப்பா உதவும்,

மாத்தி யோசி:

பாய்ஸ் படத்துல இயக்குனர் ஷங்கர் சொன்னது தான். எப்போமே ஒத்து போகற ஒரு விஷயம். கொஞ்சம் மாத்தி யோசியுங்க. புது வேலைக்கு முயற்சிய செய்யும் போது மத்தவங்க மாதிரி இல்லாம தனித்தன்மையோட இருக்க பாருங்க.

பகுதி நேர வேலைகள் இருக்கு :

கண்டிப்பா ஒரு நிறுவனத்துல முழு நேர வேலை பாத்தாதான் சம்பாதிக்க முடியும்ன்னு இல்ல. வீட்டுல இருந்த படி நீங்க வேலை செய்யலாம். பகுதி நேரமா வேலை பாக்கலாம். இதனால உங்க நேரம் உங்களோடதா இருக்கும்.

English summary
12 Simple Things To Do When You Are In Lay-Off

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia