இந்த 10 விஷயம் தெரிஞ்சா போதும் நீங்களும் ஒரு நாள் வால்மார்ட்டுக்கு பேரம் பேசலாம்!

Posted By: Kani

'உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்' என்று ஒரு பழமொழி உண்டு. உங்கள் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம்.

உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள் கண்டிப்பாக உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு உந்துதலாக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்திலே இருங்கள். மேலும் வாழ்க்கையில் வெற்றியடைய சில நுணுக்கங்கள் இதோ...

1.கனவு காணுங்கள்:

வெற்றி என்பது ஒரு நாள் இரவில் பெற்றுவிடக்கூடிய மாய மந்திரம் இல்லை. பல வெற்றிச்சரித்திரங்கள் பெரும்பாலும் கனவிலிருந்தே ஆரம்பமாகிறது.

கனவே பெரும்பாலான வெற்றிக்கு மூலதனம். சாதிக்க விரும்புபவராக இருந்தாலும், புகழ்பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தாலும் நாம் காணும் கனவே நம்மை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

2.நினைவுகள் பெரியதாக இருக்கட்டும்:

மதிப்பெண்கள் மட்டும் ஒரு போதும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. சில தினங்களுக்கு முன் வால்மார்ட்டுக்கு, தனது 16 பில்லியன் டாலர் பங்குகளை இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் விற்றுள்ளது.

இது தொடங்கப்பட்டது சாதாரண பிளாட்டில் என்பது எத்தனை பேருக்கு தெரியும். வெற்றிக்கான இலக்கை நோக்கிய பயணமே நமது வெற்றியை தீர்மானிக்கும்.

எனவே நினைவுகள் பெரிதாக இருக்கட்டும், அதோடு அதற்கான சரியான உழைப்பும் வேண்டும்.

3.சிறு வயதிலிருந்து தொடங்குங்கள்:

பிளிப்கார்ட் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இருவரால் பிளிப்கார்ட் துவங்கப்பட்டது. கோரமங்களாவில் உள்ள இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில் இந்த ஆன்லைன் வர்த்தகத்தை மிகக் குறைந்தபட்ச முதலீட்டுடன், அதிகபட்ச வியர்வையை கொண்டு சிறிய அளவில் துவங்கப்பட்டது.  

நாம் நமது நிறுவனம், தொழில் சிறியதாக தொடங்கப்பட்டதற்கு வெட்கப்பட கூடாது, இகழ்வாக கருதகூடாது. கனவு, உழைப்பு, எண்ணம், செயல் பெரியதாக இருக்கும்பட்சத்தில் நாமும் ஒருநாள் பெரிய இடத்தை அடைந்தே தீருவோம்.

4.உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்:

நாம் ஒரு செயலை செயல்படுத்துகிறோம் என்றால் அதற்கு பிரதானம் நம்பிக்கை. நாம் நம் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.

எல்லா திறமைகளும் நமக்குள் இருக்கின்றன என்று நாம் நம்மை உறுதியாக நம்பவேண்டும். எந்த தருணத்திலும் நம் மீது வைத்த நம்பிக்கையை இழக்ககூடாது.

5.பிடித்த விஷயத்தை பின்பற்றுங்கள்:

நம்மில் பல பேர் வெற்றியடையாததற்கு ஒரு காரணம்தான் உண்டு, விருப்பம் இல்லாத செயல்களை கட்டாயத்தின் பேரில் செய்வதுதான்.

நமக்கு எதில் தீராத காதல், விருப்பம் இருக்கிறதோ அதை பின்பற்றவேண்டும். நமது முழு ஈடுபாட்டுடன் செய்யும் செயல்களே நமக்கு முழுமையான வெற்றியை தேடித்தரும்.

6.விமர்சனத்தை எதிர்கொள்:

விமர்சனங்களை எதிர்கொள்ள துணிவு வேண்டும் இன்று வாழ்வில் வெற்றி பெற்ற பெரும்பாலோனோர் விமர்சனங்களுக்கு ஒருபோதும் அடிபணியாதவர்களே. எந்த ஒரு விமர்சனத்திற்ககாவும் நமது குறிக்கோளிலிருந்து ஒரு போதும் பின்வாங்கக் கூடாது. அதேவலையில் சரியான விமர்சனங்களை பரிசலிக்கவும் தவறக்கூடாது.

7.விடாமுயற்சி:

வெற்றி என்ற கனியை பெறுவதற்கு முன் வியர்வை என்ற நீரை சிந்தித்தான் ஆகவேண்டும். எந்த ஒரு மனிதனும் சூரிய வம்சம் கதாநாயகன் போல் ஒரே பாடலில் உயர முடியாது.

கனவால் மட்டும் வெற்றி சாத்தியப்படாது, கடின உழைப்பும் சேர்ந்தால்தான் கிட்டும். விடாமுயற்சியை வெற்றிக்கான சாவி.

8.பயப்பட வேண்டாம்:

பெரும்பாலும் நாம் நம்மை விட வலுவானவர்களையும், பேராற்றல் உள்ளவர்களையும், திறமையானவர்களையும் பார்த்து நமது தைரியத்தை சில சமயம் இழந்துவிடுகிறோம்.

தைரியம் என்ற பண்பு வெற்றியாளர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் மிக முக்கியமான பண்பாகும். ஒருபோதும் பிரச்னைகளை கண்டு துவண்டு விடக்கூடாது.

9.கவனத்தை குவியுங்கள்:

வெற்றிபெற்ற அனைவரும் பெரும்பாலும் ஒரே கனவில் கவனத்தை செலுத்தியவர்கள்தான் இருப்பார்கள்.

பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தும் போது வெற்றிக்கான பயணநேரம் அதிகமாகிறது. நமது கனவு எதுவோ, நமது விருப்பம் எதுவோ அவற்றிலே நமது முழு கவனத்தை செலுத்தும் பட்சத்தில் அது வெற்றியை துரிதப்படுத்தும்.

10.முடிவு எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்: 

உறுதியான முயற்சியை எடுக்காமல் யாரும் எந்த வெற்றியை எளிதாக பெற்றுவிட முடியாது.

நாம் எடுக்கும் துணிகர முயற்சியே நம் வெற்றியை தீர்மானிக்கும். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் இரண்டும் விலைமதிக்க முடியாத சொத்துக்களே எனவே துணிந்து முடிவெடுக்க கற்றுக்கொள்ளுங்கள்.

நான் உங்கள் தங்கையை அழைத்து கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள்? இன்டெர்வியூவில் பகீர் கேள்வி!

English summary
10 Secrets to Becoming Rich, Successful, and Happy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia