சொன்னா நம்ப மாட்டீங்க..! பிளிப் கார்ட்டின் சிஇஓ யார் தெரியுமா?

போட்டித்தேர்வுக்காக எவ்வளவுதான் படித்தாலும் தேர்வு பயத்தில் சில விஷயங்களை நாம் மறந்துவிடுவோம். கடைசி நேரத்தில் அவை நம் நினைவுக்கு வந்து தேவையில்லாத மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சொன்னா நம்ப மாட்டீங்க..! பிளிப் கார்ட்டின் சிஇஓ யார் தெரியுமா?

 

அதை தவிர்ப்பது எப்படி? குறிப்பிட்ட இடைவெளியில் திரும்பத் திரும்ப படிக்கும் போது எளிதாக மனதில் பதிந்துவிடும். அந்த வகையில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் மாணவர்களின் வசதிக்காக பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

கேள்வி 1: தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது?

கேள்வி 1: தமிழ்நாட்டில் காந்தி ஆசிரம் அமைந்துள்ள ஊர் எது?

விடை: திருச்செங்கோடு

விளக்கம்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள புதுப் பாளையம் கிராமத்தில் 1925-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி ராஜாஜியால் காந்தி ஆசிரமம் தொடங்கப்பட்டது. கிராம சுயராஜியத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட காந்தி ஆசிரமத்தை பெரியார் திறந்து வைத்தார்.

1925-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி, 1934-ம் ஆண்டு என இருமுறை மகாத்மா காந்தி, புதுப் பாளையம் காந்தி ஆசிரமத்துக்கு வந்து தங்கி சென்றார். அவர் ஆசிரமத்தில் தங்கியது தொடர்பாக, அவரே எழுதிய குறிப்பு காந்தி ஆசிரமத்தின் அலுவலகத்தில் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி 2: உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?

கேள்வி 2: உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது?

விடை: லடாக் விமானத்தளம்.

விளக்கம்: கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரத்து 614 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1962ம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரின் போது இந்த தளம் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு கைவிடப்பட்டு மீண்டும் 2010ல் செயல்படுத்தப்பட்டது. அண்மையில் 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிநவீன சி-130 ஜெ. சூப்பர் ஹெர்குலஸ் ஜம்போ விமானத்தை, அங்கு தரையிறக்கி விமானப்படை பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

கேள்வி 3:
 

கேள்வி 3: "யுகாந்தர்" என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்?

விடை: விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா

விளக்கம்: "யுகாந்தர் என்பது ஒரு பத்திரிகை. தீவிர அரசியல் பத்திரிகை. அதன் ஆசிரியர், பூபேந்திர நாத தத்தர் என்பவர். இவர் சுவாமி விவேகானந்தரின் சகோதரர். இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டதில் இதன் பங்கு மிக முக்கியமானது.

கேள்வி 4: மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்?

கேள்வி 4: மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை (Advocate General) நியமிப்பவர் யார்?

விடை: ஆளுநர்

விளக்கம்: இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப் பொறுப்பு செய்து வைப்பார்.

அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.

கேள்வி 5: தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?

கேள்வி 5: தேனீக்களின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?

விடை: ஃபார்மிக் அமிலம்

விளக்கம்: தேனீயின் வாயில் சுரக்கும் பார்மிக் மற்றும் பார்மால்டிகைடு அமிலம் தான், தேனில் உள்ள கிருமிகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கிறது.

தேனில் உயிருள்ள கிருமி மற்றும் இறந்த கிருமிகளும் உண்டு. இந்த கிருமிகளிலிருந்து வெளியேறும் நச்சுப்பொருளுக்கு, 'டாக்சின்' என்று பெயர்.

இந்த நச்சுப் பொருள், குடல் வியாதியை உண்டாக்கும். சில சமயங்களில் அந்த நச்சுப் பொருட்கள் நரம்பு மண்டலத்தையும் செயலிழக்க செய்யும்.

கேள்வி 6 : உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எது?

கேள்வி 6 : உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எது?

விடை: இன்சுலின்

விளக்கம்: இன்சுலின் செடி சர்க்கரைநோயை கட்டுபடுத்த சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலயே வளர்த்து பயன்படுத்தலாம். டைப் 2 சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் செடியின் இலையை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இன்சுலின் செடி விளங்குகிறது. தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது.

கேள்வி 7 : பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார்?

கேள்வி 7 : பிரம்மோஸ் ஏவுகணைக்கு அப்பெயரை சூட்டியவர் யார்?

விடை: டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்

விளக்கம்: பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் வகை கடந்த 2005-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. போர்க்கப்பலில் பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை பின்னர் ராணுவத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்திய ராணுவத்துக்காக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, சூப்பர் சானிக் வகையைச் சேர்ந்தது. 290 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை 300 கிலோ எடையிலான ஆயுதங்களை தாங்கிச் செல்லக் கூடியது.

கேள்வி 8 : அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?

கேள்வி 8 : அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?

விடை: பாரதியார்

விளக்கம்: சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882 இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார்.

கேள்வி 9 : பல்லவர்களின் தலைநகரம் எது?

கேள்வி 9 : பல்லவர்களின் தலைநகரம் எது?

விடை: காஞ்சிபுரம்

விளக்கம்: பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்.

இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறு பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

கேள்வி 10 : பிளிப் கார்ட்டின் புது சிஇஓ வாக அறிமுகப் படுத்தப்பட்டவர் பெயர் என்ன?

கேள்வி 10 : பிளிப் கார்ட்டின் புது சிஇஓ வாக அறிமுகப் படுத்தப்பட்டவர் பெயர் என்ன?

விடை: பி.கல்யாண் கிருஷ்ண மூர்த்தி

விளக்கம்: பிளிப் கார்ட் பெங்களூருவில் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சல் ஆகியோரால் 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகும். முதலில் புத்தக விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளம் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருள்களில் இருந்து ஃபேஷன் பொருட்கள் வரை விற்பனை செய்து வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Quick Tips for Successful Exam Preparation In TNPSC, UPSC, RRB, Etc
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X