ஆல்ரெடிக்கும், ஆல்-ரெடிக்கும் வித்தியாசம் தெரியுமா?

Posted By: Kani

வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். கையால் அடிப்பதை விட அவை ஏற்படுத்தும் காயங்கள் இன்னும் ஆழமானவை. மறக்க முடியாதவை.

சொற்களின் பொருளைப் புரிந்து கொள்வது முக்கியம். ஒரு வாக்கியத்தின் பொருளைத் தோராயமாகவோ அல்லது பொதுப்படையாகவோ புரிந்து கொள்வது போதாது.

வாக்கியத்தில் பயின்று வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் புரிய வேண்டும். அப்போதுதான் சரியான சொற்களைச் சரியான இடத்தில் பயன்படுத்தும் பழக்கம் ஏற்படும்.

உலகம் விசித்திரமானதோ இல்லையோ... ஆனால் இந்த வார்த்தைகள் மிகவும் விநோதமானது. பிறமொழி வார்த்தைகளை பேசும் போது அதிக கவனம் தேவை. சில சொற்கள் ஒன்றாக இருக்கலாம் ஆனால் அர்த்தம் முற்றிலும் மாறுபடும் அந்தவகையில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தட் அதுவா... இதுவா... வார்த்தைகள் சில.

சுட்டிக்காட்டுதல்: allusion- மறைமுகமாக சுட்டிக்காட்டுவது. 'ரசாயன உரங்களை அதிகமாகப் போடுவதால் ஏற்படும் விளைவுகளை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன'

பிரமை: illusion-இல்லாதது இருப்பதுபோலவும் நிகழாதது நிகழ்வது போலவும் மனத்தில் ஏற்படும் தோற்றம் அல்லது உணர்வு.
'கிணற்றுப் பக்கம் போகும்போதெல்லாம் கிணற்றுக்குள்ளிருந்து யாரோ தன்னைக் கூப்பிடுவது போன்ற பிரமை'
'அம்மா காலமான பின்பும் அவள் வீட்டில் இருப்பதாகவே ஒரு பிரமை'

ஏற்கனவே: already (சொல்லப்படும் இந்த நேரத்துக்கு) முன்பே; (கட்டுரை முதலியவற்றில், குறிப்பிடப்படும் இந்த இடத்துக்கு) முந்திய பகுதியில்.

'நிவாரணப் பொருள்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன'
'எனக்கு ஏற்கனவே பழக்கமானவர்'
'மேலை நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகத் தொடர்பை ஏற்கனவே கண்டோம்'

எல்லாம் தயார்: all ready (ஒருவர்) மன அளவில் அல்லது செயல் அளவில் உடனடியாக ஒன்றைச் செய்யத் தகுந்தவாறு இருக்கும் நிலை/(ஒன்று) உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை.

'சண்டையை மறந்து சமாதானமாகப் போக நாங்கள் தயார்'
'வெளியே கிளம்பத் தயாராகிவிட்டார்கள்'

ஒட்டுமொத்தம்: altogether (தனித்தனியாகக் குறிப்பிடாமல் தொகுத்துக் கூறும்போது) பலவற்றின் தொகுப்பு.

'எல்லாக் கலைஞர்களையும் ஒட்டுமொத்தமாகப் பாராட்டிப் பேசினார்'
'பறவைகளின் ஒட்டுமொத்தமான இரைச்சல்'

ஒன்றாக: alltogether மொத்தமாக; கூட்டாக. ஒரே நேரத்தில்; ஒரே இடத்தில்.

'நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தோம்'
'நானும் அவனும் ஒன்றாகத்தான் தங்கினோம்'

அருகில்: beside- அருகாமை; அண்மை.

'அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டான்'
'உன் அலுவலகம் இங்கிருந்து பக்கமா, தூரமா?'
'பக்கத்தில்தான் கடை இருக்கிறது, போய்விட்டு வருகிறேன்'
'பேருந்து நிலையத்திற்குப் பக்கமாக ஏதாவது வீடு வாடகைக்கு இருந்தால் சொல்'

தவிர: besides- '(குறிப்பிடப்படுவது அல்லது குறிப்பிடப்படுபவர்) நீங்கலாக' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

'இந்த மின்விசிறியைத் தவிர வேறு எந்த மின்விசிறியையும் போட வேண்டாம்'
'உன்னைத் தவிர எல்லோரும் வீட்டுக்குப் போய்விட்டார்கள்'
'தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் படித்துக்கொண்டே இருப்பான்'

நிறுவனர்:founder- ஒரு அமைப்பைத் தொடங்கியவர்.

'தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று கட்சியின் நிறுவனர் அறிவித்தார்'
'நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரே அதன் வேந்தராகவும் இருந்துவருகிறார்'

தடுமாற்றம்: flounder- (நடத்தல், நிற்றல் போன்ற செயல்களைச் செய்யும்போது) சீராக இல்லாமல் முன்னும்பின்னுமோ பக்கவாட்டிலோ சாய்தல்.

'நடையில் இருக்கும் தடுமாற்றத்தைப் பார்த்தால் அவன் குடித்திருப்பான்போல் தெரிகிறது'

திருப்தி: complement- மனநிறைவு.

'பாடுபட்டதற்கான பலன் கிடைத்துவிட்ட நிறைவு அவர் முகத்தில் தெரிந்தது'
'வாரத்தில் ஒரு நாளாவது கோயிலுக்குச் சென்று வருவது மனத்திற்கு நிறைவான உணர்வைத் தருகிறது'
'திருமண ஏற்பாடுகள் நிறைவாக அமைந்திருந்தன'
'வாழ்க்கையை முழுமையாக அனுபவித்த நிறைவு'
'ஏதோ நல்லது செய்திருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் மனத்தில் ஒரு நிறைவு ஏற்படுகிறது'

பாராட்டு: compliment-(கௌரவம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து) பொருட்படுத்துதல்.

'அவர் எல்லோரிடமும் எந்த வித வித்தியாசமும் பாராட்டாமல் பழகுவார்'
'இருவருமே கௌரவம் பாராட்டிக்கொண்டிருந்தால் பிரச்சனை முடியப்போவதில்லை'

கழகம்: council-ஒத்த கொள்கை, ஆர்வம் முதலியவை கொண்ட பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் ஓர் அமைப்பு.

'கம்பன் கழகம்'

ஆலோசனை: counsel- ஒருவர் தன் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிப்பதன்மூலம் காட்டும் வழிமுறை; ஒருவர் மற்றொருவரிடம் கலந்து பெறும் கருத்துரை.

'இந்த நூலின் கையெழுத்துப் பிரதியைப் படித்துப்பார்த்துவிட்டு நண்பர்கள் ஆலோசனைகள் வழங்கினார்கள்'
'கட்சித் தலைவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகே போராட்டத் திட்டம் வகுக்கப்பட்டது'

அதாவது: i.e.-ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்பும்போது இரண்டு வாக்கியங்களுக்கு இடையே அல்லது தொடர்ந்து வரும் இரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள ஒத்த தொடர்பை விளக்கும் முறையில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; 'எவ்வாறு என்றால்'; 'சொல்லப்போனால்'.

உதாரணம்: e.g.-பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை; எடுத்துக்காட்டு.

'திரவ நிலையில் உள்ள உலோகத்துக்கு உதாரணம் பாதரசம்'
'தாராளமாக வாக்கு தருபவர்களை நம்பக் கூடாது என்பதற்கு நீயும் ஓர் உதாரணம்!'

வம்சம்: descent-தலைமுறைதலைமுறையாக வரும் குடும்பத் தொடர்ச்சி; பரம்பரை.

'சுதந்திரத்திற்குப் பின் அரச வம்சத்தினர் பெற்று வந்த மானியங்கள் நிறுத்தப்பட்டன'
''அவன் வம்சத்தையே பூண்டோடு அழிக்கிறேன்' என்று கறுவிக்கொண்டிருந்தான்'

பேதம்: dissent-வேறுபாடு.

'ஜாதி மத பேதங்களை மறந்து மக்கள் ஒன்றுபட வேண்டும்'
'நண்பர்கள் என்று இருந்தால் அபிப்பிராய பேதங்கள் வரத்தான் செய்யும்'

லாஸுக்கும், லூஸுக்கும் வித்தியாசம் தெரியுமா?

English summary
10 pairs of English words we often confuse

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia