கொட்டிக்கிடக்கும் வேலை... இந்த மாத கூகுள் தேடலில் இது தான் டாப்பு..!

அரசாங்க வேலை, தனியார், மற்றும் சுய தொழில் என மூன்று விதமான வாய்ப்புகள் இருந்தாலும் அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை மட்டுமே மதிப்பு மிக்கதாக சமூகத்தில் ஒரு தவறான பார்வை எப்போதும் உண்டு.

By Kani

அரசாங்க வேலை, தனியார், மற்றும் சுய தொழில் என மூன்று விதமான வாய்ப்புகள் இருந்தாலும் அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை மட்டுமே மதிப்பு மிக்கதாக சமூகத்தில் ஒரு தவறான பார்வை எப்போதும் உண்டு.

கொட்டிக்கிடக்கும் வேலை... இந்த மாத கூகுள் தேடலில் இது தான் டாப்பு..!

இன்றைய காலத்தில் திருமணத்திற்கு அரசாங்க வேலை அவசியமாக சித்தரிக்கப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து தரப்பினருக்கும் வேலை கொடுப்பது என்பது எந்த ஒரு அரசாங்கத்திற்கும் சிக்கலான காரியம்தான் என்றாலும் கூட எப்போதுமே வேலையை மட்டுமே தேடாமல், சமூகத்திற்கு முன்மாதிரியாக வேண்டும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் 100 பேருக்கு நாம் வேலை கொடுக்கலாம்.

10.என்ஜினிரிங்

10.என்ஜினிரிங்

என்னதான் வீட்டுக்கு ஒரு என்ஜினியர் உருவானலும் இந்த என்ஜினிரிங் மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. எப்போதும் கூகுள் தேடலில் 10 இடத்திற்குள் தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்டே வருகிறது.

இதற்கு மாணர்களை விட பெற்றோர்களின் என்ஜினிரிங் மோகமே காரணமாக அறியப்படுகிறது.

என்ஜினிரிங்கை பொறுத்தவரை, டிப்ளமோ என்னும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் நேரடியாக பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாவது ஆண்டில் சேரலாம்.

சில பிரிவுகளுக்கு இந்தச் சேர்க்கை விதி பொருந்தும். இளநிலையில் பொதுவாக பிஇ, பிடெக் இரண்டும் நான்கு ஆண்டுப் படிப்புகள். முதுநிலையில் எம்இ, எம்டெக் இரண்டும் இரண்டாண்டுப் படிப்புகளாக வழங்கப்படுகிறது.

சிவில் தொடங்கி பெட்ரோலியம் என்ஜினிரிங் வரை பல்வறு வகையான படிப்புகள் உள்ளன.

 

9. அலைய்டு  மெடிசின்

9. அலைய்டு மெடிசின்

மருத்துவத்துறை சார்ந்த துறைகளை பொறுத்தமட்டில் எப்போதும் தனி மார்கெட்தான்.

இந்த வகையான வேலை வாய்ப்புகளுக்கு எப்போதும் பஞ்சமே கிடையாது. எப்போது முடித்தாலும் பணியை எட்டிப்பிடிக்கலாம். அனுபவத்தின் அடிப்படையில் தரமான சம்பள உயர்வை படிப்படியாக பெறலாம்.

பொதுவாக மருத்துவபடிப்பை தவறவிடும் மாணவர்கள் இந்த வகையான படிப்புகளை அதிகம் தேர்வு செய்கின்றனர்.

செவிலியர் எனப்படும் நர்சிங் பணிக்கு டிகிரி, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. பிஎஸ்சி பட்டப்படிப்பின் கீழேயே விபத்து மற்றும் அவசர சிகிச்சை, மருத்துவ உதவியாளர் எனத் தொடங்கி 18 பிரிவுகளில் சிறப்புக் கல்வி அளிக்கப்படுகிறது.

இதே போல் பட்டயப்படிப்பில் நர்ஸிங் உதவியாளர், பல் மருத்துவத் துணைப்பணியாளர் எனத் தொடங்கி ஒன்பது பிரிவுகளில் கல்வி வழங்கப்படுகிறது.

தொழில்சார்ந்த மருத்துவ படிப்புகளான பிபார்ம், பிபிடி(பிசியோதெரபி), பிஓடி என்ற பட்டப்படிப்புகளுக்கும் ஏக மவுஸ்தான்.

 

8. உணவு மற்றும் வேளாண்மை

8. உணவு மற்றும் வேளாண்மை

வேளாண் துறையை பொருத்தமட்டில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போதைய நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு விவசாயம் செய்வது என பல்வேறு வகையான புதிய படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக பல்வேறு வகையான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் நான்காண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உயிரித்தொழில்நுட்பம், உயிரித்தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், உணவுப் பதப்படுத்துதல் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகியவற்றில் பிடெக் படிப்பும், வேளாண்மை, தோட்டக்கலை, வனவளம், மனையியல், பட்டுப்பூச்சி வளர்ப்பு, வேளாண் தொழில் மேலாண்மை ஆகியவற்றில் பிஎஸ்சி படிப்பும் பயிற்று விக்கப்படுகிறது.

மேற்கண்டவற்றில் இறுதி மூன்றில் சேர ஒரு மாணவர் உயிரியலுக்குப் பதிலாகக் கணிதம் பயின்றிருக்க வேண்டும்.

7. பாதுகாப்பு துறை

7. பாதுகாப்பு துறை

பாதுகாப்புத் துறை பணி என்பது அரசு வேலை என்பதையும் தாண்டி, நாட்டுக்கான சேவையாக கருதப்படுகிறது.

இதில் பணிபுரிவது வேறு எந்த வேலையிலும் கிடைக்காத ஆத்ம திருப்தியும் பெருமிதத்தை கொடுக்கும். சில வகையான வேலை வாய்ப்புகள் மாணவர்களின் மாற்றுப் பார்வை, அரசுகளின் மாற்றத்தினால் மாணவர்களிடம் பெயர் பெரும்.

அந்த வகையில் பாதுக்காப்பு துறையின் மீதான ஈடுபாடும், அதைச் சார்ந்த வேலை வாய்ப்புகளின் தேடல்கள் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன.

 

6.மெர்ச்சண்ட் நேவி

6.மெர்ச்சண்ட் நேவி

கடல் மற்றும் கண்டம் தாண்டி பறக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களுக்கான துறைதான் மெர்சன்ட் நேவி இதில் கேப்டன், ஆபிஸர் உள்ளிட்ட உயர் பதிகளில் இருந்து பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இலவச உணவு, தங்குமிடம், சம்பளத்தோடு கூடிய விடுமுறை, இலவச பயணப் படி, குடும்பத்திற்கான சலுகைகள் ஆகியவை மெர்ச்சன்ட் நேவி பணிகளில் வழங்கப்படும் சலுகைகள்.

இதை தவிர்த்து போனஸ், விடுமுறைப் படி போன்றவைகளும் தரப்படுகின்றன. வருமான வரி இல்லாத வருமானமத்தை பெற வாய்ப்புகளை வாரி வழங்குகிறது.

5. ஆர்கிடெக்சர்

5. ஆர்கிடெக்சர்

மதிப்பு குறையாத வேலைகளில் இதுவும் ஒன்று. கலைத்திறனை பிரதிபலிக்கும் ஆர்கிடெக்சர் துறைக்கு என்றும் வரவேற்புதான்.

மாட மாளிகைகளில் இருந்து வரலாற்றில் இடம்பெரும் நினைவு சின்னங்கள் வரை உலகையே அலங்கரிக்கும் துறையாக விளங்குகிறது. இதற்கும் மதிப்பு குறைந்தபாடில்லை.

4.அனிமேஷன் & கிராபிக்ஸ்

4.அனிமேஷன் & கிராபிக்ஸ்

எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு சிறந்த தேர்வு கம்ப்யூட்டர் அனிமேஷன் & கிராபிக்ஸ் துறைதான் இந்தக் காலத்தில் கண்ணத்தில் விரல் வைக்கும் அளவிற்கு ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அதில் இதன் பங்கு முக்கியத்துவம் பெரும். இதற்கான தேடலும், வேலைவாய்ப்பும் கற்பனைக்கேற்ப கொட்டிக்கிடக்கின்றன.

 

3. எத்திக்கல் ஹேக்கிங்

3. எத்திக்கல் ஹேக்கிங்

தன் திறமைகள் எங்கு மறுக்கப்படுகிறதே அப்போதுதான் தான் கற்ற திறமைகள் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது.

ஹேக்கர்கள் அனைவரும் தவறான பொதுவாக செயல்களுக்காக ஹேக் செய்வதில்லை. பரிசு மற்றும் வேலை வாய்ப்பு தேடலுக்காக இதை செய்ய துணிகின்றனர்.

ஹேக்கர் என்றால் திருடர் என்பது போல சித்தரித்து வருகின்றனர். ஹேக்கர் என்றால் திருடர் எப்படியெல்லாம் திருடுகிறார்கள் என்பதை கண்டு பிடித்து அதை தடுப்பதும் ஹேக்கிங்தான் என பலருக்கு தெரிவதில்லை.

எத்திக்கல் ஹேக்கிங் என்ற படிப்பே உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உலகமே இணையத்தில் உல வரும் காலத்தில் இந்த வகையான படிப்புகளை தேர்ந்தெடுப்போருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

2.கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன்&ஐடி

2.கம்ப்யூட்டர் அப்பிளிகேஷன்&ஐடி

வரும் காலத்தில் இந்திய ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறையும் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஆளுமைகள் கூறினாலும் கூட புதிய தொழில்நுட்ப அறிவோடு செல்பவர்களுக்கு எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்புதான்.

ஆப்ஸ் இன்றி அமையாது உலகு என்பதை போல் மாற்றம் வந்தாலும் மறுப்பதற்கில்லை. அசுர வளர்ச்சியில் இருக்கும் துறை தற்போது ஐடிதான்.

 

1. கணிதம் மற்றும் புள்ளியியல்

1. கணிதம் மற்றும் புள்ளியியல்

உலகை இயக்குவது கணிதம் என்றால் மிகையாகது, எப்போதும் தனக்கான இடத்தை முதல் வரிசையில் தக்கவைத்து கொள்வது கணிதத் துறைதான். அது படிப்பாகட்டும், வேலையாகட்டும். அக்கவுண்டன்ட் வேலையில் இருந்து ஆராய்ச்சி அதிகாரி வேலை வரை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

பிகாம் படிப்பு மட்டுமே பொது, ஆக்சுவேரியல் மேலாண்மை, வங்கி மேலாண்மையும் காப்புரிமையும், கணினிப் பயன்பாடு, இ-காமர்ஸ் எனத் தொடங்கி 17-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

இதைச்சார்ந்த படிப்புகளான சிஏ (சார்ட்டர்ட் அக்கெளவுண்ட்), ஏசிஎஸ் (அசோசியேட் கம்பெனி செக்ரட்டரி புரோகிராம்), சிஎப்ஏ (சார்ட்டர்ட் பினான்சியல் அனலிஸ்ட்) ஆகியவற்றையும் பிகாம் படிக்கும்போதே இணையாக படிக்கலாம்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Most Popular (And Most-Searched) Careers in March 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X