நீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா ? இந்த சேனல பாருங்க!!

இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்க எண்ணற்ற தளங்கள் வந்து விட்டன. பல்வேறு வகையான மொழிகள் மட்டுமல்லாது பல்வேறு வகையான விஷயங்களை கற்க கைகொடுக்கும் விடியோக்களை கொண்ட தளங்களில் யூ டியூப் தளமும்

இப்போது வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் கற்க எண்ணற்ற தளங்கள் வந்து விட்டன. பல்வேறு வகையான மொழிகள் மட்டுமல்லாது பல்வேறு வகையான விஷயங்களை கற்க கைகொடுக்கும் விடியோக்களை கொண்ட தளங்களில் யூ டியூப் தளமும் ஒன்று. யூ டியூப் பக்கம் சென்றலே எந்த விடியோவை பார்ப்பது எந்த விடியோவை விடுவது என பல்வேறு சந்தேகங்கள் வரும், இந்த விதமான சந்தேகங்களை தவிற்கும் விதமாக எளிதாக ஆங்கிலம் கற்க உதவும் சிறந்த 10 தளங்களின் பட்டியல் உங்களுக்காக.

நீங்களும் இங்கிலீசுல பீட்டர் விடணுமா ? இந்த சேனல பாருங்க!!

இதில் என்ன சிறப்பு என்னவென்றால் மிகவும் எளிமையான அதே நேரத்தில் சுவாரஸ்யமான முறையில் ஆசிரியரிடம் பாடங்களை கற்றுக் கொள்ளவது போல் இந்த தளங்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளமுடியும்.

Learn English with EnglishClass101.com:

Learn English with EnglishClass101.com:


இதில் அமெரிக்கா, பிரிட்டிஷ் கலாச்சாரங்களோடு, ஆங்கிலத்தை கற்கும் விதமாக சுவாரஸ்யமாக வீடியோ பாடங்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. விரைவான முறையில் எளிதான வழியில் ஆங்கில மொழி கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த தளம், இதில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட வீடியோ, ஆடியோ பாடங்கள் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கிடைக்கின்றன.

Speak English with Misterduncan:

Speak English with Misterduncan:


ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவும் பிரபலமான யூ டியூப் சேனல்களில் இதுவும் ஒன்றாகும். ஏன்? என்ற கேள்வி எழுகிறதா. பதில் இதோ 2006 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த சேனலில் ஆங்கிலத்தை நகைச்சுவையாக கற்றுக்கொடுக்கிறார் மிஸ்டர்டுன்கன். ஒவ்வெரு தலைப்பின் கீழ் பாடங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இலக்கணமின்றி எளிதாக ஆங்கிலம் கற்க இது ஒரு சிறந்த சேனல்.

BBC Learn English:

BBC Learn English:


உலகின் மிக பிரபலமான ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்று (பிபிசி). இவை யூ டியூப் வாயிலாக ஆங்கில மொழியும் கற்றுக்கொடுத்து வருகிறது. ரியாலிட்டி லைப் சம்பவங்களை கார்ட்டூன்கள், இன்டெர்வியூ போன்ற பல்வேறு முறையில் ஆங்கில உரையாடலாக பயிற்றுவிக்கப்படுகிறது. கொஞ்ச நேரம் ஓடும் விடியோக்களாக இருந்தாலும். நிறைய சுவரஸ்யமான தகவல்களை கொண்ட அறிவு பெட்டகம்.

Real English:

Real English:


ஆங்கில மொழி கற்கும் ஆர்வமுள்ள கத்துக்குட்டிகளுக்கானது இந்த தளம். இதில் பேச்சு வழக்கில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதால் அனைவராலும் எளிதான முறையில் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தலைப்புகளும் இரண்டு வீடியோக்களாக பதிவிடப்பட்டுள்ளன. ஒன்று சப்டைட்டில் உடனும் மற்றொன்று, சப்டைட்டில் இல்லாமலும் கிடைக்கிறது.

Business English Pod

Business English Pod


பொதுவாக எளிதான முறையில் ஆங்கிலத்தில் முகவரி, டைம் போன்றவற்றை கேட்கலாம், ஆனால் ஒரு பிஸ்னெஸ் மீட்டிங் போக வேண்டும் என்றால் என்ன ஆகும்? நினைத்தலே படபடக்கிறதா.உங்களுக்காகத்தான் நிதி, நிர்வாகம், சட்டம் போன்ற தலைப்புகளில் தெளிவான மற்றும் முழுமையான விளக்கங்களுடன் விடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏசி ரூமில் இருந்தாலும் வேர்வை வராமல் இருக்க வேண்டுமென்றால் இதில் உள்ள விடியோக்களை பார்த்தலே போதுமானது.

 

British Council: Learn English Kids

British Council: Learn English Kids


ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு பாடல் மிகச்சிறந்த வழி. அந்த வகையில் குழந்தைகளை குதூகலப்படுத்தும் விதமாக அழகான நர்சரி ரைம்ஸ், அனிமேட்டட் வீடியோக்களுடன் நிரம்பியுள்ளது இந்தச் சேனல். கார்ட்டூன்களுடன் ஆங்கிலத்தில் சப்டைட்டில்களும் வருவதால் குழந்தைகள் மிக எளிதாக இதன் வழியே ஆங்கிலம் கற்க முடியும். உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் புதிய வார்த்தையைப் பார்க்கவும் கேட்கவும் வழிவகை செய்யும் விதமாக இந்த சேனலில் ஒவ்வெரு வாரமும் 'வேர்ட் ஆப் தி வீக்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது இதன் தனிச் சிறப்பு.

VOA Learning English

VOA Learning English


இந்த சேனல் மற்றவைகளை விட கொஞ்சம் வித்தியாசமானது, இதில் உலக நடப்புகளை செய்தியாக தொகுத்து வழங்குகின்றனர். பயனர்களின் வசதிக்காக விடியோவை மெதுவாக, ஸ்பீடாக எப்படி வேண்டுமானலும் பார்த்து கொள்ளலாம். இதோடு கூகுள் +, ஹேங்அவுட் போன்ற தளங்கள் வாயிலாகவும் பயனர்களுக்கு பதில் அளிக்கின்றன.

EF podEnglish

EF podEnglish


ஆங்கிலத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்ற சேனல். இதில் பார்ப்பது, கற்றுக்கொள்வது, பின்பு பயிற்சி மேற்கொள்வது என மூன்று கோணங்களில் ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகின்றன. காலநிலை, டெக்னாலஜி, திசை போன்ற பல்வேறு வகையான அன்றாட தலைப்புகளில் விடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

Jennifer ESL

Jennifer ESL


இது ஒரு தனித்துவமான தளமாகும் இதில் நாம் நண்பர்களுடன் உரையாடுவது போல் மிக எளிமையாக விடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 விடியோக்களுக்கு மேல் உள்ள இந்த சேனலில் தெளிவான உச்சரிப்பு, எழுத்துநடை போன்றவைகளை எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.

Linguaspectrum Interesting English

Linguaspectrum Interesting English


இது மற்ற சேனல்களை விட முற்றிலும் வேறுபட்ட அணுகுமுறையில் ரசிக்கும் படியான சுவாரஸ்யமான விஷயங்களுடன் ஆங்கிலத்தை கற்பிக்கிறது.

உதாரணமாக, நீங்கள் ஒரு விமான நிலையத்தில் சந்திக்கும் பிரச்னைகளை தொகுத்து விடியோவாக வழங்குகின்றனர். கதை, வசனங்களுடன், உண்மைச் சம்பங்களின் தெகுப்பாக விடியோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எளிதாக இதன் மூலம் ஆங்கிலம் கற்கலாம்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
10 Great YouTube Channels for English Learners
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X