உலக உணவுதினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஐநாவின் போட்டி !!

Posted By:

ஐநா நடத்தும் உலக உணவு தினப் போட்டிக்கு மாணவர்கள் தங்கள் படைப்பை அனுப்பலாம். ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மைத்துறையின் கீழ் போட்டியை அறிவித்துள்ளது .

மாணவர்கள் வேளாண்மை மற்றும் உணவின் தேவை அதன் முக்கியத்துவம் அத்தியாவசியமான உணவினை எவ்வாறு சேமிப்பது மேலும் மக்கள் ஒரிடத்தில் குடிபெயர்தலுக்கும், ஓரிடத்தில் குடியமர்தலுக்கும் எவ்வாறு உணவு மற்றும் அதன் உருவாக்க துறையான வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதனை குறித்து மாணவர்கள் ஐநாவின் போட்டியில் பங்கேற்று தெரிவிக்கலாம்.

ஐநாவின் போட்டியானது மாணவர்களுக்கு முக்கியமாகும்

ஐநாவின் போஸ்டர் போட்டி :

மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை கட்டுரையாக வடிவமைத்து ஐநாவுக்கு அனுப்பலாம். ஐநாவின் மாணவர்களுக்கான இந்த போட்டியில் பங்கேற்க 5 வயது மாணவர்கள் முதல் 19 வது வயது இளைஞர்கள் வரை பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் சொந்த படைப்பினை கட்டுரை ஆய்வுகளை சமர்பிக்கலாம், மாணவர்கள் சமர்பிக்கும் டிஸ்கிரிபஸனை  போஸ்டர் என்ற புதிய யுக்தியிலும் சமர்பிக்கலாம். மாணவர்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மாணவர்கள் உலக உணவுதினத்தின் சிறப்பாக படைக்கும் படைப்பாற்றல் உலகிற்கொரு பாடமாக இருக்க வேண்டும். உங்களது படைப்பு உலகை மாற்றும் கருவியாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும். உலக மாணவர்கள் இளைஞர்கள் பங்கேற்கும் போட்டியில் உங்களது படைப்பு சிறக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள், இணையம் வாயிலாக கருத்துகளை அறிந்து கொள்ளுங்கள். 

மாணவர்களின் இந்த படைப்பானது தெளிவாக இருக்க வேண்டும் . உலகத்திலுள்ள எந்த மாணவர்களும் ஐநாவின் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம்.

உலக உணவு தினத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள தலைப்புகளை கவனமாக மாணவர்கள் குறித்து கொள்ள வேண்டும்.

1 எதிர்கால குடிபெயர்தலின் மாற்றம்
2 உணவு மற்றும் ஊரக மேம்பாட்டுக்கு முதலீடு செய்தல்

மேலே குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் மாணவர்கள் தங்கள் படைப்புகளை கற்பனையுடன் ஆய்வு செய்தும் உருவாக்கலாம்.

மாணவர்கள் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய இறுதி தேதி நவம்பர் 10 ஆகும். விண்ணப்பிக்க இணைய முகவரி இணைத்துள்ளோம் . WDF-poster-Contest@fao.org மாணவர்களே இந்த போஸ்டர் காண்டெஸ்டினை சிறப்பாக உருவாக்குங்கள் உங்களுக்கான வெற்றியை உறுதி செய்யுங்கள்.

சார்ந்த பதிவுகள்:

ஆர்பிஐ வழங்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ! 

தேசிய வெளிநாட்டு உதவித்தொகையின் கீழ் கல்விஉதவித் தொகை 

English summary
here article tell about contest of UN for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia