தமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை! எப்படி பெறுவது?

By Saba

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பில் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
தமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை! எப்படி பெறுவது?

சென்னை தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கே ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். இதன் மூலம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வரையில் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாசன், வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

'தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் சார்பில் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு ஊதியம் அளித்தல் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் படி அறிவியில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை ஊக்கப்படுத்தும் வகையில், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உதவித்தொகை பெற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanscst.nic.in என்னும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இளம் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பங்களை பூர்த்தி செய்தபின் அதை இரண்டு ஜெராக்ஸ் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்குச் செப்டம்பர் 6-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்'. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

MEMBER SECRETARY,
Tamilnadu State Council for Science and Technology
Sardar Patel Road,
DOTE Campus,,
Chennai 600 025,
Tamilnadu, INDIA.

 

உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விபரங்களுக்குத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu State Council For Science & Technology - Scholarship
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X