எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு...!!!

பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளை படித்து வரும் பழங்குடியின (எஸ்.டி) மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை உயர்வானது, கடந்த 01-07-2010 முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.tribal.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு அறியலாம்.

பழங்குடியின மாணவர்கள் மேற்கொள்ளும் படிப்புகள், குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என்று நான்கு வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப உதவித்தொகைகள் வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
குரூப்-1 படிப்புகள் - மருத்துவம்(அலோபதிக், இந்திய மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ படிப்புகள்), பொறியியல், தொழில்நுட்பம், திட்டமிடுதல், கட்டிடக்கலை, வடிவமைப்பு, பேஷன் தொழில்நுட்பம், விவசாயம், கால்நடை மற்றும் துணைநிலை அறிவியல்கள், மேலாண்மை, வணிக நிதி/நிர்வாகம், கணிப்பொறி அறிவியல்/பயன்பாடுகள் ஆகியவற்றில் இளநிலை, முதுநிலை, எம்.பில் மற்றும் பிஎச்.டி படிப்புகள், வணிக பைலட் லைசன்ஸ்(ஹெலிகாப்டர் பைலட் மற்றும் மல்டிஎஞ்சின் ரேட்டிங்) படிப்பு, மேலாண்மை மற்றும் மருத்துவ படிப்புகளில், பலவித பிரிவுகளில், முதுநிலை டிப்ளமோ படிப்புகள், சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ/சி.எஸ்/ஐ.சி.எப்.ஏ. மற்றும் எல்.எல்.எம். போன்ற படிப்புகள்

எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகை உயர்வு...!!!

குரூப்-2 படிப்புகள் - பார்மசி, நர்சிங், எல்.எல்.பி., பி.எப்.எஸ் மற்றும் இதர துணைநிலை மருத்துவ படிப்புகளான புனர்வாழ்வு, பரிசோதனை மற்றும் பொது மக்கள் தொடர்பு, ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை, டிராவல்/சுற்றுலா/விருந்தோம்பல் மேலாண்மை, உட்புற அலங்காரம், சத்துணவு மற்றும் உணவுக் கட்டுப்பாடு, வணிக வரைகலை, நிதி சேவைகள் போன்ற படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்பவர்கள். (மேற்சொன்ன படிப்புகளில், மேல்நிலை பள்ளிப் படிப்பை தகுதியாக வைத்து சேர்ந்திருக்க வேண்டும்).

குரூப் - 3 படிப்புகள் - இளநிலை பட்டப்படிப்பு என்ற நிலையில் வரும் பி.ஏ./பி.எஸ்சி மற்றும் பி.காம். போன்ற படிப்புகளை மேற்கொள்பவர்கள். இந்த பிரிவில், குரூப்-1 மற்றும் குரூப்-2 பிரிவில் வரும் படிப்புகள் இடம்பெறாது.

குரூப் - 4 - பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மேற்கொள்ளும், ஐ.ஐ.டி. மற்றும் டிப்ளமோ போன்ற பட்டப் படிப்பு அல்லாத படிப்புகள் இந்த பிரிவில் சேரும். இந்த படிப்புகளுக்கு உயர்நிலைக் கல்வித் தகுதியே(10 ம் வகுப்பு) போதும்.

மேற்கண்ட படிப்புகளை மேற்கொள்ளும் எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படவுள்லது.

இவைத்தவிர, உதவித்தொகை பெறும் எஸ்.டி. மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமான வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, முன்பு இருந்த 1.45 லட்சம் வரம்பிலிருந்து, ரூ.2 லட்சம் என்ற அளவில் வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்.டி. மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை திட்டங்களின்கீழ், கடந்த 2007-08 ம் ஆண்டில் 10.41 லட்சம் மாணவர்களும், 2008-09 ம் ஆண்டில் 12.57 லட்சம் மாணவர்களும், 2009-10 ம் ஆண்டில் 13.76 லட்சம் மாணவர்களும் பயனடைந்தனர். 2010-11 ம் ஆண்டில் 15.59 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பான விரிவான விவரங்களுக்கு www.tribal.nic.in என்ற இணையதளத்தை அணுகி பெறலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ST Scholarship is awarded to the students of the Scheduled Tribe (ST) category by the Ministry of Tribal Affairs, Government of India. The objective of the ST scholarship is to provide financial assistance to these students to complete their studies at both the school and college levels. Some of the most popular ST scholarships are Pre-matric Scholarship, Post-matric Scholarship, Rajiv Gandhi National Fellowship, and Overseas Scholarship.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+