கல்வி உதவித்தொகை வேண்டுமா...! சிவகங்கை மாணவிகளுக்கு அழைப்பு

அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கல்வி உதவித்தொகை வேண்டுமா...! சிவகங்கை மாணவிகளுக்கு அழைப்பு

றியுள்ளதாவது:

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை தமது வருமானச்சான்று மற்றும் ஜாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இணையதள முகவரி:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Sivagangai District collector has invited applications from girls students for educational scholarships. For more details students can login into https://sivaganga.nic.in/
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+