ராணுவ நல அமைப்பின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் !

Posted By:

ஆர்மி வெல்வேர் எஜூகேசன் அமைப்பினால் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது . ராணுவத்தில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இணைந்து நடத்தும் இந்த அமைப்பின் கல்வி தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.

இராணுவ நல அமைப்பின் கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 30குள் விண்ணப்பிக்கலாம்

ஆர்மி நலத்துறையினருக்காக நடத்தப்படும் அமைப்பு ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் முதல் முதுகலைப்பட்டம் படிக்கும் மாணவர்கள் வரை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

25 வயதுகுள் இருக்கும் இராணுவம் வீரகளின் பிள்ளைகளின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கல்விக்கான ஆர்மி வெல்ஃபேர் எஜூகேசன் சொசைட்டி வழங்கும் கல்வி உதவித்தொகையானது   ரூபாய் 6ஆயிரம் முதல் வருடத்திற்கு வழங்கப்படும். படிப்புகளுக்கு ஏற்ப கல்வி உதவித்தொகையும் மாறுபடும். 

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து தேவையான தகவல்களை கொடுத்து சான்றிதழ் இணைப்புகள் ஏதேனும் தேவைப்படின் அதனையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் வங்கி விவரங்கள் அனைத்தையும் எங்கு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதனை முழுமையாக அறிந்து விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

ஆர்மி வெல்ஃபேர் எஜூகேசன் சோசைட்டி
ஆஜுடாண்ட் ஜென்ரல் பேரன்ஜ்
தலைமையிடம்
பில்டிங் நெ 202
சங்கர் விகார்
நியூ டெல்லி 110 010

தேவையான விவரங்களை பெற இணைய இணைப்பை கொடுத்துள்ளோம் . ஆர்மியை சேர்ந்தோரின் குடும்ப மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

ஒடிசா அரசின் பிரேர்னா கல்வி உதவித் தொகை அறிவுப்பு 

கேந்திர சைனிக்கின் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை

English summary
here article tell about army welfare scholarship for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia