உலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.clarendon.ox.ac.uk என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
வெளிநாட்டில் இருந்து பிரிட்டனுக்கு வந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைதான் கிளாரெண்டன் பன்ட் கல்வி உதவித்தொகை ஆகும்.
சுமார் 10 ஆண்டுகாலமாக இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகையின் மூலம் பயன் பெற்று கல்வி அறிவு பெற்றுள்ளனர்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பட்டப்படிப்பு பயிலும் சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது கல்விக் கட்டணம், இதரச் செலவுகளும் சேர்த்து 30 ஆயிரம் யுரோக்கள் வழங்கப்படுகின்றது.
வெளிநாட்டில் இருந்து வரும் சிறந்த மாணவர்கள், பொருளாதார நெருக்கடியால் படிக்க இயலாமல் போகக் கூடாது என்ற அடிப்படை நோக்கத்தில்தான் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித் தொகை குறித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள www.clarendon.ox.ac.uk இணையதளத்தைப் பார்க்கவும். இந்த இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி, வயது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications












