என்எம்எம்எஸ் உதவித்தொகைக்கான விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விவரங்களை அக்டோபர் 21-ஆம் தேதி முதல் பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் வருடந்தோறும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய என்எம்எம்எஸ் தேர்வானது வட்டார அளவில் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து கடந்த செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது விண்ணப்பித்தவர்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்னும் அரசு கல்வித் துறை இணையதளம் வழியாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விபரங்களை வரும் அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வசதிகள் செய்ய வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.