தேசிய சிறும்பாண்மை மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை!

Posted By:

பேகம் ஹஸ்ராத் மஹால் தேசிய கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற நவமபர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்கள் இத்தகைய கல்வி உதவித் தொகை பெற தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இக்கல்வி உதவித்தொகை பெற சிறுபாண்மை பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும். மேலும் தேசிய அளவில் உள்ள சிறுபாண்மை மாணவிகள் உதவித்தொகை பெற மேற்ப்படிப்படிக்கான நிதிவசதியற்றவர்களாக இருக்க வேண்டும்.

பேகம் ஹஸ்ரத் மகால் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உதவித்தொகையானது வசதியற்ற பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கப்படும் ஒன்றாகும். சிறுபான்மையினர் குழந்தைகளின் கல்வி இடைநிற்றலிலிருந்து காக்கவும் அவர்களின் கல்வி வளர்ச்சி உறுதுணையாக இருக்கவும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உதவிதொகையானது முதலில் மௌலானா ஆஷாத் கேம்பஸ் என வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கிழ் வழங்கப்படும் இந்த உதவித்தொகை பெறுவதற்கான முகவரிகள் கிழே இணைத்துள்ளோம்.

ஸ்ரீ மதுக்கர் நாயக் செக்ரட்ரி மௌலானா அஷாத் எஜூகேசன் ஃபவுண்டேசன்,
மௌலானா கேம்பஸ், செம்ஸ்ஃபோர்டு ரோடு ஆஃபோஷிட் , நியூ டெல்லி ரயில்வே ரிசர்வேசன் செண்டர், நியூ டெல்லி 110055. இமெயில் முகவரி :
Secy maef@nic.in. scholarships-maef.nic.in

விண்ணப்பிக்க ஆறு சிறுபாண்மை பெண் குழந்தைகள் மட்டுமே இக்கல்வி உதவித்தொகை பெற தகுதி படைத்தவர்கள் ஆவார். முஸ்லீம், சீக்ஸ், கிரிஸ்ட்டியன், ஜெயின், புத்தயிஸ்ட், பார்சியினர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

வருட குடும்ப வருமாணம் 2 லட்சத்துக்கு குறைவாக இருப்பவர்கள் இக்கல்வி உதவித்தொகை பெறலாம். மாணவிகள் இக்கல்வி உதவித்தொகையை பெற அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விதிமுறைகளை தெளிவாக படித்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து முறையான சான்றிதழ் இனைப்புகளை இணைத்து விண்ணப்பித்து அதனை மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம். ஆன்லைனின் விண்ணப்பிக்கவும் இணைப்பை கொடுத்துள்ளோம். பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகையானது 9, 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும். 11, 12 வகுப்பு மாணவிகள் 12,000 தொகை பெறலாம் . இரண்டு முறையாக தொகைகள் பிரித்து வழங்கப்படும்.

பள்ளியின் ஆசிரியர்கள் , மதிபெண் மற்ற அனைத்து தகவல்கள், வருமான வரிச்சான்றிதழுடன் சுய கையெப்பமிட்டு மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள்:

ஏழை எளியோர்க்கான வித்யாதன் கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு !! 

உலக உணவுதினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு ஐநாவின் போட்டி !!

English summary
here article tell about scholarship for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia