வெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித் தொகை!

Posted By: Kani

ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்று வெளிநாட்டிலுள்ள பழ்கலைகழங்களில் உயர்கல்வியில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை அனுமதி பெற்றுள்ள எஸ்/எஸ்டி பிரிவை சேர்ந்த மாணவ,மாணவிகளுக்கு மத்திய சமூக நலத்துறை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.

உதவித்தொகையின் பெயர்: நேஷனல் ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்

இந்த உதவித்தொகை மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படுகிறது. பாடப்பிரிவு வாரியாக வழங்கப்படும் உதவித்தொகை விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு/துறையில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் உயர்கல்வி பயில உதவித் தொகை!

மேலும் ஏதாவதொரு வெளிநாட்டுப் பல்கலைக்கழத்தில் இளநிலை பட்டதாரிகள் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவும் முதுநிலை பட்டதாரிகள் பிஎச்டி படிப்பில் சேரவும் மாணர் சேர்க்கை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1-04-2018 தேதியின் படி 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண் சம்பந்தப்பட்ட துறையில் விண்ணப்பதாரரின் சாதனைகள், ஆராய்ச்சி பணி அனுபவம், மேல் படிப்பிற்காக மாணவர் சேர்க்கை பெற்றுள்ள பழ்கலைகழகத்தின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் உதவி தொகை பெற தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பதாரரின் முழு கல்வி கட்டணம், பயணம், மற்றும் தங்குமிட செலவிற்கு ஏற்ற வகையில் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை தொடர்பான கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதள லிங்கில் மேற்கண்ட உதவித்தொகை தொடர்பான முழு விபரம் மற்றும் விண்ணப்படிவம் ஆகியவற்றை டவுண்லோடு செய்து மார்ச் 31- ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

English summary
Government of India Offers National Overseas Scholarship for SC,ST Candidates 2017-18

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia