ஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

By Kani

சிந்தையில் புதிய ஐடியாக்களுடன் கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களிடமிருந்து கூகுள் வழங்கும் 'வெங்கட் பஞ்சாபகேசன் மெமோரியல் ஸ்காலர்ஷிப்' பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கம்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பதோடு, அவர்களின் திறமையை மேலும் மெருகேற்றிக்கொள்ளும் வகையில், இந்த ஸ்காலர்ஷிப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு நிமிட வீடியோ... கூகுள் வழங்கும் ரூ.50 ஆயிரம் ஸ்காலர்ஷிப்!

 

தகுதி: விண்ணப்பிக்கும் நபர் 2017-­18 மற்றும் 2018­-19 ஆண்டு கணினி அறிவியல் படித்தவராகவே, படிப்பவராகவே இருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப் பெயர்: வெங்கட் பஞ்சபகேசன் மெமோரியல் ஸ்காலர்ஷிப்

ஸ்காலர்ஷிப் விபரங்கள்: 750 அமெரிக்க டாலர் (ரூ.50,647.88) பணம் மற்றும் யூடியுப் தலைமையகத்தை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு.

எப்படி விண்ணப்பிப்பது: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் 250 வரிகளுக்கு மிகாமல் இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டும்.

மேலும் ஏன் இந்த ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கிறோம் என ஒரு நிமிடம் ஓடும் வீடியோவை தயார் செய்து யூ-டியுப் தளத்தில் அப்லோட் செய்து அதன் லிங்கை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இதனுடன், ரெஸ்யூம் மற்றும் பணிபுரிந்த அலுவலகம், ஆசிரியர்கள், மேற்பார்வையாளர் என யாரவது இரண்டு பேரிடம் பெற்ற பரிந்துரை கடிதங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: ஜூன் 15, 2018 இரவு11: 59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Google VP Memorial Scholarship
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X