பிளஸ் 2 முடித்த மாணவர்களே உங்களுக்கான கல்வி உதவித்தொகை !

Posted By:

ஆல் இந்தியா அளவில் கல்வி தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் மாணவர்களே! தேசிய அளவில் நடைபெறும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நுழைவு தேர்வு எழுத விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

 கல்வி உதவித் தொகையானது ஏஐஎஸ்இஇ ஒபன் புக் கல்வி உதவித்தொகை அத்துடன் ஏஐஎஸ்இஇ கல்வி உதவித்தொகை என பிரிவுகளாக நுழைவு தேர்வு உள்ளது இரு பிரிவில் ஏதோ ஒன்றில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் இத்தேர்வை எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பிளஸ் 2 முடித்த இன்ஜினியரிங் படிக்க எண்ணமிருக்கும் மாணவர்கள் அல்லது மருத்துவம் படிக்கவிருக்கும் மாணவர்கள் கல்வித்தொகை பெற விண்ணப்பிகலாம்.
இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களே உங்களுக்கான கல்வி உதவித்தொகை பெற நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை பார்த்து தெரிந்து கொள்ளவும். இந்த நுழைவு தேர்வில் வெற்றி பெறுவோர்கள் படிப்பிற்கு தேவையான பண உதவியினை பெறலாம்.

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அந்த இணைப்பை பின்ப்பற்றி படித்தப்பின் அந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். அதன் பின் பாஸ்வோர்டு பெறலாம்.

பதிவு செய்தபின் மாணவர்கள் பதிவு செய்த ஐடி அத்துடன் 2018 ஸாக்லர்ஷிப் தொடர்பான விண்ணப்ப தளத்தில் ஒபன் புக்கில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான தகவல்களை முறைப்படி கொடுத்து விண்ணப்பிக்கலாம்.

ஏஐஎஸ்இஇ கல்வி உதவித்தொகையானது அனைத்து  சாதிப் பிரிவு சேர்ந்த மாணவர்களுக்கும் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெப்சைட்டில் விண்ணப்பிக்கும் பொது மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி, ஒபிசி, பொது பிரிவு மாணவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 2000 செலுத்த வேண்டும் மற்ற விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

ஆண்டு தேர்வுக்காக படிக்கும் மாணவர்களே உங்களுக்கான குறிப்பு

கல்வி உதவித்தொகை

தேசிய ஒபன் புக் ஸ்காலர்ஷிப்:

தேசிய ஒபன் புக் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்ராய்டு ஆப் மூலம் விண்ணப்பிக்கும் பொது , எஸ்சி மற்றும் எஸ்டி , ஒபிசி பிரிவு மாணவர்கள் ரூபாய் 1800 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் பெண் மாணவர்கள் விண்ணப்பிக்க ரூபாய் 1800 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேசிய ஏஐஎஸ்இஇ ஸ்காலர்ஷிப் :

தேசிய ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கும் அனைத்து பிரிவு மாணவர்களும் வெப்சைட்டில் விண்ணப்பித்தால் ரூபாய் 1000 தொகை செலுத்த வேண்டும்.
அன்ராய்டு ஆப் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் ரூபாய் 900 விண்ணப்ப கட்டணமாக செலுத்தினா; போதுமானது ஆகும்.

தேவையான விவரங்கள் பெற இணைப்பினை இணைத்துள்ளோம்.

ஒரிஜினல் வெப்சைட் லிங்க் இங்கு கொடுத்துள்ளோம்

ஆன்லைனில்  மாணவர்கள் விண்ணப்பிக்க இணைய இணைப்பு

ஸ்காலர்ஷிப் குறித்து விவரங்களுடன் விண்ணப்பிக்கும் முறையைப் பெற இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். 

ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்க இறுதி தேதி : ஜனவரி 15, 2018க்குள் விண்ணப்பியுங்கள் மாணவர்களே . 

சார்ந்த பிரிவுகள்:

மாணவர்களுக்கான போர்டு எக்ஸாம் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

English summary
Here the article tells about entrance exams for Scholarships

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia