பல்கலைக் கழகங்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருக்கை அமைக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்களில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கையை அமைக்க தீவிர நடவடிக்கைகளை மாநிலங்களவை ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

 
பல்கலைக் கழகங்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருக்கை அமைக்கப்படும்: யுஜிசி அறிவிப்பு

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டம் மற்றும் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கை அமைப்பது உள்ளிட்டவற்றிற்கான நடைமுறைகள் மாநிலங்களவையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை, செயலகங்களின் முன்னாள் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் இரண்டு ஆண்டு காலம் இந்த படிப்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. மேலும், ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

இதில், இருக்கைக்கு ரூ.20 லட்சம் நிதியும், நிச்சயமற்ற மானியமாக ரூ.2.50 லட்சமும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பல்வேறு அம்சங்கள் மீது ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு கடந்த 2009ம் ஆண்டு மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதனை மேன்மைப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதற்காக மாநிலங்களவையின் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தற்போதைய திட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டுவந்துள்ளார்.

தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய திட்டமானது மாநிலங்களவை ஆராய்ச்சிக் கல்வித் திட்டம் (ஆர்எஸ்ஆர்எஸ்) எனும் பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கை, மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டம், மாநிலங்களவை மாணவர்கள் பங்கேற்பு பயிற்சித் திட்டம் உள்ளிட்டவை இடம் பெறும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dr. S. Radhakrishnan Chair and Fellowships of Rajya Sabha: UGC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X