இந்தியாவைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான உதவித்தொகை திட்டங்களை, இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை பர்மிங்காம் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.birmingham.ac.uk/study/postgraduate என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
பர்மிங்காம் பல்கலை: ஓர் அறிமுகம்
இங்கிலாந்தில் உள்ள மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று இந்த பர்மிங்ஹாம் பல்கலைக்கழகமாகும். நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகம், 10 நோபல் வெற்றியாளர்களை இதுவரை உருவாக்கியுள்ளது. அதிலிருந்தே இந்த பல்கலைக்கழகத்தின் பெருமையையும், சிறப்பையும் மாணவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
பர்மிங்காம் பல்கலைக்கழகம் என்பது இங்கிலாந்தின் பர்மிங்காமில் அமைந்து உள்ள ஒரு பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். பர்மிங்காமில் உள்ள குயின்ஸ் கல்லூரி (1825-ல் பர்மிங்காம் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பள்ளியாக நிறுவப்பட்டது) மற்றும் மேசன் அறிவியல் கல்லூரி (1875-ல் சர் ஜோசியா மேசனால் நிறுவப்பட்டது) ஆகியவற்றின் வாரிசாக 1900 இல் அதன் அரச சாசனத்தைப் பெற்றது, இது முதல் ஆங்கில குடிமை அல்லது 'ரெட் பிரிக்' பல்கலைக்கழகம் அதன் சொந்த அரச சாசனத்தைப் பெறுகிறது,

மேலும் முதல் ஆங்கில யூனிட்டரி பல்கலைக்கழகமாகும். இது பிரிட்டிஷ் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் ரஸ்ஸல் குழுமம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் சர்வதேச வலையமைப்பான யுனிவர்சிட்டாஸ் 21 ஆகிய இரண்டின் நிறுவன உறுப்பினராக உள்ளது.
மாணவர் எண்ணிக்கையில் 2019-20-ல் 23,155 இளங்கலை மற்றும் 12,605 முதுகலை மாணவர்கள் உள்ளனர், இது இங்கிலாந்தில் 7 வது பெரியதாகும். பல்கலைக்கழகத்தின் 2022-23 ஆண்டு வருமானம் £909.1 மில்லியனாக இருந்தது அதில் £196.7 மில்லியன் ஆராய்ச்சி மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் £884.7 மில்லியன் செலவாகும்.
2021 ஆராய்ச்சி சிறப்புக் கட்டமைப்பில், பர்மிங்காம் பல்கலைக்கழகம் கிரேடு புள்ளி சராசரியில் 129 நிறுவனங்களில் 13வது இடத்தைப் பிடித்தது
இத்தகைய சிறப்புவாய்ந்த பர்மிங்காம் பல்கலைக்கழகம் சார்பில்தான், முதுநிலை கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு பலவிதமான உதவித்தொகைகளை தற்போது வழங்கப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, அவுண்ட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் ஸ்காலர்ஷிப், இந்தியா சான்சலர் ஸ்காலர்ஷிப், குளோபல் மாஸ்டர்ஸ் ஸ்காலர்ஷிப் உட்பட பல்வேறு திட்டங்களில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே, இதற்கு விண்ணப்பித்து மாணவ, மாணவிகள் நல்ல பயனை அடையலாம்.
மாணவர்கள், படிப்புக்குத் தேவையான நிதி குறித்து கவலைப்படாமல், படிப்பில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதற்காக, மொத்தம் 2 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள உதவித்தொகைகளை பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் வழங்குகிறது. அவற்றில் இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் அதாவது ரூ. 10.5 கோடி மதிப்பில் உதவித்தொகைகளை பெற முடியும்.
கீழ்கண்ட பிரிவுகள், படிப்புகளுக்கு பர்மிங்காம் பல்கலைக்கழகம் உதவித்தொகையை அறிவித்துள்ளது.
* முதுநிலை படிப்புகளுக்கான விருது
* பர்மிங்காம் முதுநிலை உதவித்தொகை
* ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ் முதுநிலை உதவித்தொகை
* குளோபல் முதுநிலை உதவித்தொகை
* பர்மிங்காம் பிசினஸ் ஸ்கூல் உதவித்தொகை
* கலை மற்றும் சட்டக் கல்லூரி முதுநிலை உதவித்தொகை
* கெமிக்கல் இன்ஜினியரிங் நுழைவு உதவித்தொகை
* 125ம் ஆண்டு பிளேக் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை
* ஆராய்ச்சி குழு நிதி உதவி
* முதுநிலை பட்ட ஆராய்ச்சி
* என்.இ.ஆர்.சி., - சி.என்.டி.ஏ.,
* கலை மற்றும் சட்டக் கல்லூரி ஆராய்ச்சி உதவித்தொகை
மேற்கண்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்த பல்கலைக்கழக உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் படிப்புக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். ஒவ்வொரு உதவித்தொகை திட்டத்துக்கும் கல்வியில் சிறந்த மற்றும் இதர தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப தேதி உதவித்தொகை திட்டத்திற்கு ஏற்ப மாறுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள்:
உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப தேதி உதவித்தொகை திட்டத்திற்கு ஏற்ப மாறுபடும்.எனினும், பெரும்பாலான முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆகஸ்ட் 31, 2024 ஆகும்.
இணையதள முகவரி:
மேலும் விவரங்களுக்கு www.birmingham.ac.uk/study/postgraduate என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












