2021-ஆம் ஆண்டுல என்னென்ன நடந்துருக்கு பாருங்க! ஐந்து பெரிய மாற்றங்கள் உள்ளே!

இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு ஆண்டே நிறைவடையவுள்ளது. இந்த 2021-ஆம் ஆண்டில் டிஜிட்டல் கல்வி முதல் புதிய கல்விக் கொள்கை வரை, நாட்டின் கல்வித் துறையை பாதித்த ஐந்து பெரிய மாற்றங்கள் இங்கே உள்ளன.

 
2021-ஆம் ஆண்டுல என்னென்ன நடந்துருக்கு பாருங்க! ஐந்து பெரிய மாற்றங்கள் உள்ளே!

குறிப்பாக, கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய கல்விக் கொள்கை (NEP) அமலாக்கம் மற்றும் கொரோனா நெருக்கடி இன்னும் பதுங்கியிருப்பதால், இந்த ஆண்டு இந்தியாவில் கல்வித் துறைக்கு ரோலர் கோஸ்டர் சவாரிக்கு சிறிதும் குறைவு இல்லை என்று தான் கூற வேண்டும். சரி, அப்படி இந்த 2021-ஆம் ஆண்டில் கவனிக்கப்பட்ட ஐந்து பெரிய மாற்றங்கள் அல்லது முக்கிய நிகழ்வுகள் இங்கே காணலாம் வாங்க.

டிஜிட்டலான கல்வி முறை

டிஜிட்டலான கல்வி முறை

கற்றல் செயல்முறையை மெய்நிகர் இடங்களுக்கு மாற்றி, இந்தியக் குழந்தைகளுக்கு ஒரு புதிய வகையிலான கற்றல் இடைவெளியை அளித்தது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சக நண்பர்களுடனான விளையாட்டை மறந்து ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

வாய்ப்பற்ற மாணவ குழந்தைகள்

வாய்ப்பற்ற மாணவ குழந்தைகள்

கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் பாதுகாப்பாக இருந்தாலும், அதற்கான வசதிகள் அற்ற பல மாணவ, மாணவியர்கள் செய்வதறியாது கல்வியை பாதியில் நிறுத்தினர். குறிப்பாக, தில்லி பல்கலைக்கழக மாணவி ஐஸ்வர்யா ரெட்டி தனது கல்விச் செலவுக்காகத் தற்கொலை செய்துகொண்டதையும், இதுபோன்ற பல நிகழ்வுகளையும் நாம் இந்த 2021-ஆம் ஆண்டில் பார்த்திருக்கிறோம்.

புதிய கல்விக் கொள்கையின் தாக்கங்கள்
 

புதிய கல்விக் கொள்கையின் தாக்கங்கள்

கர்நாடகா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற பல மாநிலங்கள் இந்த புதிய கல்விக் கொள்கையினை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. 2021 ஆண்டில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பல பல்கலைக் கழகங்களும், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக #RejectNEP டிரெண்டிங்கையும் கண்டது.

சிபிஎஸ்இ-யின் மாற்றப்பட்ட முறை

சிபிஎஸ்இ-யின் மாற்றப்பட்ட முறை

ஊரடங்கு உள்ளிட்ட சோதனையின் போது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அதன் 2021-2022 கல்வி அமர்வுக்கு ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. புதிய முறையில், தலா 50 சதவிகிதம் பாடத்திட்டத்துடன் ஆண்டுக்கு இருமுறை தேர்வுகள் நடத்தப்படும். முதல் பருவத் தேர்வு என்பது வழக்கு அடிப்படையிலான மற்றும் உறுதியான பகுத்தறிவு வகை MCQ-களுடன் 90 நிமிடத் தேர்வாக இருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் இரண்டாம் பருவத்தேர்வு நீண்ட மற்றும் குறுகிய கேள்விகளுடன் இரண்டு மணி நேரத் தேர்வாக இருக்கும்.

இந்தியாவின் இடைநிற்றல்கள்

இந்தியாவின் இடைநிற்றல்கள்

2021 ஆண்டின் தொடக்கத்தில் கல்வி உரிமை மன்றத்தின் கொள்கை விளக்கத்தின்படி, இந்தியாவில் சுமார் 10 மில்லியன் பெண்கள் படிப்பை கைவிடும் அபாயத்தில் உள்ளனர். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆகஸ்ட் மாதம் 15 கோடி குழந்தைகள் கல்வி முறையில் இல்லை என்று கூறினார். UDISE அறிக்கையின்படி, இடைநிலைப் பள்ளி அளவில் இந்தியாவிற்கான இடைநிற்றல் விகிதம் 17 சதவிகிதமாக இருந்தது, நான்கு மாநிலங்கள் 30 சதவிகிதம் வரை இடைநிற்றல் விகிதங்களைப் பதிவு செய்துள்ளன.

கல்வித்துறையின் சாதிவெறி

கல்வித்துறையின் சாதிவெறி

தனது நிறுவனத்தில் சாதிவெறி காரணமாக ராஜினாமா செய்த ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் முதல் தீபா மோகனனின் சண்டை வரை, நம் நாட்டின் கல்வித் துறையின் உள்ளார்ந்த சாதியத் தன்மையைக் காட்டும் பல்வேறு வழக்குகள் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் ஜாதிப் பாகுபாடுகள் நடைபெறக் கூடாது என்று பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு யுஜிசி (UGC) கடிதம் எழுதியது. இதுபோன்ற வழக்குகளைக் கையாளும் போது நிர்வாகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதற்கான தீர்வுக்கான இணையதள பக்கத்தை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Year Ender 2021: From NEP to cbse syllabus change, online classes held This Year
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X