சென்னை: புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் ஆன்-லைனில் ரோமன் ஆர்க்கிடெக்ச்சர் படிப்பை படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
ரோமன் கலாசாரம், கலை, சமூகம் தொடர்பான பல்வேறு விஷயங்களை இந்த படிப்பு மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று யேல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த படிப்பு மூலம் ரோம் நகரம் மற்றும் அதன் பேரரசுகளில் இருந்த, இப்போது இருக்கும் சரித்திரம் வாய்ந்த கட்டடங்கள், அதன் வரலாறுகளை அறிந்துகொள்ள முடியும். நகர்ப்புற கட்டமைப்புத் திட்டம், தனி நபர்களின் நினைவுச் சி்ன்னங்கள், அதற்கு செய்யப்பட்ட அலங்காரங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.
ரோம், போம்பெய், மத்திய இத்தாலி நகரங்களில் உள்ள புராதனக் கட்டடங்களின் அடிப்படைகளை அறிந்துகொள்ள முடியும்.
மேலும் இந்த படிப்பின்போது பல்வேறு கட்டடங்களின் டிசைன்களையும் புரிந்துகொள்ள முடியும்.
செப்டம்பர் 7-ம் தேதி இந்த ஆன்-லைன் படிப்பு தொடங்கவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்தப் படிப்பை ஆன்-லைன் மூலம் எளிதில் படிக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு https://www.coursera.org/course/romanarchitecture என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












