மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NPCC) நிறுவனத்தில் காலியாக உள்ள Site Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.34 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள பி.இ பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் (NPCC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Site Engineer
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பி.இ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.33,750 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 19.07.2021 தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.npccindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












