எக்ஸ்ஏடி தேர்வு - தயாராவதற்கான எளிய டிப்ஸ்

Posted By:

சென்னை : எக்ஸ்.ஏ.டி தேர்வு மற்ற மேலாண்மை நுழைவுத் தேர்வில் இருந்து மாறுபட்ட தேர்வாகும். எக்ஸ்.ஏ.டி தேர்வு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். எக்ஸ்.ஏ.டி தேர்வு ஒரு பெரும் சவலான தேர்வாகும். இந்த தேர்விற்கு தயார் ஆகும் மாணவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக இருப்பது அவசியமாகும்.

எக்ஸ்.ஏ.டி, தேர்வு அளவு சார்ந்த திறன் மற்றும் தரவு விளக்கம், வாய்மொழி மற்றும் தருக்க திறன், பகுப்பாய்வு சிந்திப்பதும் முடிவெடுப்பதும், கட்டுரை எழுதுதல், பொது விழிப்புணர்வு சோதனை, மாணவர் உளச்சார்பு இலக்கு ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு ஒரு சவாலாக அமைகிறது.

எக்ஸ்ஏடி தேர்வு - தயாராவதற்கான எளிய டிப்ஸ்

தொடர்ச்சியான பயிற்சி -

தொடர்ச்சியான பயிற்சி வெற்றியைத் தேடித் தரும். பகுப்பாய்வு ரீசனிங் மற்றும் முடிவெடுக்கும் திறன் போன்ற பகுதிகளை தீர்ப்பது அவசியமான ஒன்றாகும். மாதிரி வினாத்தாள்கள் மற்றும் போலி வினாத்தாள்களை தினமும் தீர்ப்பது மிகவும் முக்கியமாகும். அதனால் உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

வேகப் பயிற்சி -

அளவு சார்ந்த திறன் மற்றும் தரவு விளக்கம் ஆகிய பிரிவுகளில் கால்குலேசன் அடிப்படையான கணக்குகள் வரும். அந்தக் கணக்குகளை டிரிக்ஸ் மற்றும் சார்ட்கட் முறையை பயன் படுத்தி எளிய முறையில் தீர்ப்பது பற்றிய அறிவினை மாணவர்கள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, மாணவர்கள் எப்போதும் கணக்குகளை தீர்க்கும் போது விவேகமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கணித திறனை நன்கு வளர்த்துக் கொள்வதன் மூலம் விரைவாக எழுதலாம் அதிக மதிப்பெண்களையும் பெற முடியும்.

கவனமாகப் படித்தல் -

வாய்மொழி மற்றும் தருக்க திறன் பிரிவில் வாசிக்கும் அறிவை வளர்த்தல், வாக்கியத்தை திருத்துதல், சொல்லகராதி அடிப்படையில் கேள்விகள் (வார்த்தைகள் குழப்பி), உருவாக்குதல், பாரா, மற்றும் தர்க்க ரீதியான காரணங்களுக்கான கேள்விகளை தீர்த்தல் போன்றவற்றை மாணவர்கள் தினமும் பயிற்சிக்க வேண்டும். மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் போது உருவகப் படுத்தியும், ஒன்றை ஒன்றுடன் தொடர்வு படுத்தியும் புத்திசாலித்தனப் பயன் படுத்தியும் படிக்க வேண்டும். வேகமும் விவேகமும் படிப்பில் இரு கண்கள் போன்றவையாகும்.

பொதுஅறிவு மற்றும் கட்டுரை எழுதும் பயிற்சி -

பொது அறிவு மற்றும் கட்டுரை எழுதுவதை அடிக்கடி பயிற்சித்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரம், வணிகம், நடப்பு நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், ஆசிரியர்கள் மற்றும் விருதுகள் தொடர்பான புத்தகங்களைப் பயன்படுத்தி படிக்க வேண்டும். மனோரமா மற்றும் சமூக பொறுப்புணர்வு புத்தகங்களை வாங்கிப் படிக்கவும்.

200 வார்த்தைகள் கொண்ட கட்டுரையினை எழுதிப் பழக வேண்டும். கொடுக்கப்பட்ட தலைப்பில் உங்கள் எழுத்துத் திறன். கருத்துத் திறன், விரிவாக்கும் திறனைப் பயன்படுத்தி கட்டுரை எழுத வேண்டும். உங்கள் அறிவுத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள ஒன்றிக்கும் மேற்பட்ட செய்தித்தாளினை தினமும் வாசிக்க வேண்டும். மாநிலம், மாவட்டம், உள்நாடு மற்றும் வெளிநாடுச் சார்ந்த அனைத்து செய்திகளையும் படித்து அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நேரம் மேலாண்மை - அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான நேரம் ஒதுக்க வேண்டும். நேரம் மேலாண்மை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெற்றி பெறுவதற்கு தேவையான யுக்திகளில் இதுவும் அவசியமான ஒன்றாகும். கொஞ்சம் கடினமான பகுதிகளைப் படிக்கும் போது அதிகம் நேரம் செலவழித்து நன்குப் படிக்க வேண்டும். தேர்வில் எழுதும் போது அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தொடர் பயிற்சி இடைவிடா முயற்சி இரண்டும் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க உதவும் ஊன்றுகோல்களாகும்.

English summary
XAT, the most difficult and different from other B-School tests, is a challenge to crack as it aims at testing student's aptitude in Quantitative Ability and Data Interpretation, Verbal and Logical Ability, Analytical Reasoning and Decision Making, Essay Writing and General Awareness.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia