யாரெல்லாம் எக்ஸ்ஏடி தேர்வு எழுதலாம்?

Posted By:

சென்னை : எக்ஸ்ஏடி மதிப்பெண் அடிப்படையில் ஜாம்செஷட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனம் மற்றும் பிற சேவியர் இணை மேலாண்மைக் கழகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளைப் பார்ப்போம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். எம்பிஏ போன்ற முதுகலைப் படிப்பில் சேருவதற்காக இந்த எக்ஸ்ஏடி தேர்வு நடத்தப்படுகிறது.

யாரெல்லாம் எக்ஸ்ஏடி தேர்வு எழுதலாம்?

இறுதி ஆண்டு பட்டப்டிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும் எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்டப் படிப்பில் 50% மார்க் பெற்றவர்கள் எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இறுதி ஆண்டு பட்டப்படிப்பை எதிர்கொள்ளும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் பி-ஸ்கூல் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதி ஆண்டு பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் தங்களது முந்தைய வருடத்தின் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

எக்ஸ்ஏடி எனப்படும் சேவியர் திறனறி தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களைப் பொறுத்து எக்ஸ்எல்ஆர்ஐ, லிபா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை

எக்ஸ்ஏடி மதிப்பெண் அடிப்படையில் ஜாம்செஷட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனம் மற்றும் பிற சேவியர் இணை மேலாண்மைக் கழகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

எக்ஸ்ஏடி தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் எக்ஸ்ஏடி தேர்விற்கான ஐடி மற்றும் பாஸ்வோர்டினை தங்கள் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் பற்றிய விபரங்களுக்காக உருவாக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை அப்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரேடிட் கார்டு மற்றும் நெட் பேங்க் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு அதனை மறவாமல் தங்கள் எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும.

பணமாகவோ அல்லது டிடி மூலமோ விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் எக்ஸ்எல்ஆர்ஐ, சர்க்யூட் ஹவுஸ் பகுதி (கிழக்கு), ஜாம்ஷெட்பூர் - 831001 என்ற முகவரிக்கு அனுப்பவும்

விண்ணப்பக் கட்டணம் - பொதுப் பிரிவினருக்கு rs. 950/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஸ்சி எஸ்டி பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு rs. 650/- விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எக்ஸ்ஏடி தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறை -

எக்ஸ்ஏடி தேர்விற்கு இளநிலைப் படிப்பில் 50% மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எக்ஸ்ஏடி மதிப்பெண் அடிப்படையில் ஜாம்செஷட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனம் மற்றும் பிற சேவியர் இணை மேலாண்மைக் கழகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எக்ஸ்ஏடி தேர்வு இரண்டு கட்டத் தேர்வாக நடத்தப்படும். எக்ஸ்ஏடி தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மதிப்பெண் பட்டியல், கட்ஆப் மார்க், ஜெனரல் டிஸ்கசன் மற்றும் பர்சனல் நேர்காணல் மூலம் ஒவ்வொரு கல்வி நிறுவனங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்களில் எம்பிஏ படிப்பில் மாணவர்கள் சேருவதற்காக எக்ஸ்ஏடி தேர்வு நடத்தப்டுகிறது. எக்ஸ்ஏடி மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்களில் எம்பிஏ படிப்பில் மாணவர்கள் சேர்கை நடைபெறுகிறது. மேலும் அந்த ஐஐஎம்களின் தனிப்பட்ட தேர்வு முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

எக்ஸ்ஏடி தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் கட் ஆப் மார்க் அடிப்படையில் ஜாம்செஷட்பூர் எக்ஸ்எல்ஆர்ஐ நிறுவனம் மற்றும் பிற சேவியர் இணை மேலாண்மைக் கழகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தேர்நதெடுக்கப்படும் மாணவர்கள் அந்தந்த ஐஐஎம்களில் நடைபெறும் ஜெனரைல் டிஸ்கசன் மற்றும் நேர்காணல் மூலம் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு www.xatonline.net.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
XAT is a national level entrance examination for MBA admissions, conducted by the XLRI institute for admissions to over 100 B-schools in India.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia