ஹைதராபாதில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடக்கம்!!

Posted By:

சென்னை: தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவீண் புலா இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் வோக்ஸன் பிசினஸ் ஸ்கூல் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறி்த்து பிரவீண் புலா கூறியதாவது: தொடக்கத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் இந்தியாவில் கல்வி சார்ந்த இன்ஸ்டிடியூட்டுகளைத் தொடங்கவுள்ளது. அடுத்த 5 வருடங்களில் இது ரூ.300 கோடியாக அதிகரிக்கப்படும்.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தரம் வாய்ந்த பேராசிரியர்கள் போன்ற வசதிகள் இந்த வணிகப் பள்ளியில் இடம்பெறும். இந்த கல்வித் திட்டத்தில் சேர்வதற்கு மேலும் பல தொழிலதிபர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆண்டுதோறும் பல தொழில்முனைவோர்களை இந்த பள்ளி உருவாக்கும். இந்தப் பள்ளிக்காக பள்ளியின் முன்னாள் மாணவர் ரூ.1 கோடி நிதியளித்துள்ளார்.

தற்போது 100 மாணவர்களுடன் பள்ளி தொடங்குகிறது. தொடக்கத்தில் ஓராண்டு, இரண்டாண்டு பி.ஜி. படிப்புகளை பள்ளி அளிக்கும் என்றார் அவர்.

English summary
UK-based education entrepreneur Praveen Pula yesterday announced that his maiden education venture in India, Woxsen School of Business will be inaugurated today by the Telangana IT and panchayat raj minister KT Rama Rao and Dr Reddy's Laboratories co-chairman and chief executive officer GV Prasad.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia