World Ozone Day 2022: உலக ஓசோன் தினம் 2022 தீம் தெரியும்?

உயிரினங்கள் உயிர் வாழ வான்பரப்பில், 'ஓசோன்' படலம் ஆற்றிவரும் பணி அளப்பரியது மகத்தானது. கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு, பல ஆயிரம் கோடி முறை சிரம் தாழ்ந்து நன்றிகளை தெரிவிக்க வேண்டியது நமது கடமை.

இன்று, அறிந்தும், அறியாமலும் நாம் செய்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை எவரும் உணர்ந்த பாடில்லை.

சர்வதேச ஓசோன் தினம் 2022

மனிதன், புறச்சூழலால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும், ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16 ஆம் தேதியை, 'ஓசோன்' தினமாக நினைவு கூறுகின்றன.

ஓசோன் தெரியும்?

ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்திருக்கும் ஒரு மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல் வாயு நிலையில் இருக்கின்றது.

இது ஆக்ஸிஜனின் பிறிதொரு மாற்றுரு (allotrope) வாகும். இது ஈரணு ஆக்ஸிஜன் மூலக்கூறு போல் நிலைத்தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்து விடும் தன்மை ஆகும்.

கண்டுபிடிப்பாளர் யார்?

ஜெர்மன் வேதியியலாளர் சி. எப். ஸ்கோன்பின் (Christian Friedrich Schönbein) என்பவர், 1840 இல் ஓசோனை முதலில் கண்டறிந்தார்.

அது ஒருவகையான மணம் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் (ozein, "மணத்தல்") ஓசோன் என்று பெயர் சூட்டினார்.

ஆனால் மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்த விஞ்ஞானப் பெயரின் பொருள் ஓசோன் என்பது, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து, சுவிஸ் வேதியியலாளர் 1865இல் ஜாக்ஸ் லூயிஸ் சோரெட் (Jacques-Louis Soret) என்பவர் செய்த ஆய்வுக்கு முன் அறியப்படவில்லை.

பின்னர் சி.எப்.ஸ்கோன்பினால், 1867 இல் உறுதி செய்யப்பட்டது. ஒரு ரசாயனப் பொருளின் மாற்றுருவாக (allootrope) அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.

அளவீடும் கருவி பெயர்

வளிமண்டலத்தில் ஓசோன் அடர்த்தி, 'டாப்சன்" அலகினால் அளவிடப்படுகிறது. ஓசோன் அடர்த்தி கணக்கிட, 19 வகையான கருவிகள் உள்ளன.

அவற்றில் சில டாப்சன் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் ஸ்பேக்ட்ரோ போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம். 83, பில்டர் ஓசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் பப்ளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோன்ட் உள்ளிட்டவை ஆகும்.

பாதிப்பு

ஓசோன் இழப்பால் அதிகமான புற ஊதா கதிர்கள் பூமியை வந்து அடைவதால், மனிதனுக்கு தோல் நிறமிப் புற்றுநோய், கண்பார்வை குறைபாடு, நோய் தடை காப்பு மண்டலம் செயலிழப்பு, எரித்திமா போன்ற பாதிப்புகள் ஏற்படும் இறுதியாக, மனித இனமே புவியில் இருந்து அழிந்து விடும். புவியில் உள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவை சந்தித்து விடும்.

நீர் மற்றும் நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும். மேலும் புவியில் உணவு சங்கிலியும் பாதிக்கப்படும்.

மான்ட்ரீல் சாசனம்

மாண்ட்ரீல் சாசனம், செப்டம்பர் 16, 1987 இல் கையெழுத்தானது. ஓசோன் அடுக்கு சிதைவுக்கு காரணமான பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஓசோன் அடுக்கைப் பாதுகாக்க திட்டமிடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

மாண்ட்ரீல் சாசனம், செப்டம்பர் 16, 1987 இல் கையெழுத்தானது. ஓசோன் அடுக்கு சிதைவுக்கு காரணமான பொருட்களின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஓசோன் அடுக்கைப் பாதுகாக்க திட்டமிடப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

அதாவது, நாம் அதிகம் பயன்படுத்தும் குளிர் சாதனங்களான ப்ரிட்ஜ் மற்றும் ஏசி இயந்திரங்களில் நிரப்பப்படும் வாயுக்களே ஓசோன் பாதிப்புக்கு பெருமளவு காரணம்.

இதுபோன்ற வாயுக்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், புதிய பொருள்களைக் கண்டுபிடித்தால், அதை ஊக்கப்படுத்துவதை வலியுறுத்தியும், உலகின் பெரும்பாலான நாடுகள் இணைந்து கையொப்பமிட்ட மான்ட்ரீல் சாசனம், செப்டம்பர் 16ஆம் நாள் வெளியிடப்பட்டது.

இந்நாளை 1994 இல் சர்வதேச ஓசோன் தினமாக, ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சர்வதேச ஓசோன் தினம் 2022

ஓசோன் பணி தெரியும்?

சூரிய ஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளன. இத்தகைய ஒளிக் கதிர்களை செங்கீழ்க் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். செங்கீழ்க் கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது.

புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து (UV) பாதுகாப்பு கவசமாக ஓசோன் படலம் செயற்படுகிறது.]

அதாவது, சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் பூமியின் நிலப்பரப்பை அடையாமல் காக்கும் இயற்கையாக அமைந்த பாதுகாப்பு கட்டமைப்பே ஓசோன் படலம்.

வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கான ஸ்ரெட்டோஸ்பியரில்தான் ஓசோன் மிகுந்து காணப்படுகிறது. அதாவது, பூமியிலிருந்து சுமார் 10 முதல் 40 கிலோமீட்டர் தொலைவுக்கு உட்பட்ட வளிமண்டல அடுக்குகளில் காணப்படும் ஓசோன், பூமியை பல்வேறுபட்ட கதிர்வீச்சு தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து வருகிறது.

ஓசோன் படலத்தை கண்டுபிடித்த காலத்தில் இருந்து விஞ்ஞானிகள், அதன் இயற்கை அமைப்பு மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓசோன் படை தேய்விற்கு காரணமான பொருட்களை வெளியிடாமல் இருப்பதற்கான பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமை மக்களையே சார்ந்துள்ளது.

சர்வதேச ஓசோன் தினம் 2022

ஓசோன் ஆய்வுக்கு நோபல் பரிசு

இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் 'இந்த பூவுலகை காக்கும் ஓசோன் படலத்தை காக்க, உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும்" என்பதுதான்.

ன்றி பியூசன் ஆகியோர், இந்த அற்புதத்தை வெளிப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ஓசோனின் பண்புகளை பற்றி இங்கிலாந்து வானிலையியல் ஆராய்ச்சியாளர் டோப்சன்(G.M.B. Dobson) விரிவாக ஆராய்ந்து, ஸ்பேக்ரோபோட்டோமீட்டரை கண்டுபிடித்தார்.
இதன் வாயிலாக, தரையிலிருந்து ஓசோனை அளவிட, அவர் பயன்படுத்தினார்.

அதையடுத்து, 1995ல் ஓசோன் மண்டல ஆய்விற்காக, குருட்சன் மற்றும் நிகோலஸ்,ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஓசோன் துவாரத்திற்குக் காரணம் ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) என கூறப்படுகிறது.

இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன், இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ் ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro Floro Carban), கார்பன் நாற்குளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதைல் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்கு காரணமாக அமைகின்றன எனக்கூறப்படுகிறது.

ஓசோன் பாதிப்பால், பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலின் சம நிலையிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. பூமியின் சராசரி வெப்பநிலை உயரும் போது பனிப்பிரதேசங்களில் மிகவும் அதிகமான பனி உருகி கடல் மட்டம் உயர்கிறது. கடல்மட்ட உயர்வின் விளைவால் கடலருகே உள்ள பூமியின் பெரும்பான்மையான நிலப்பகுதி நீரால் சூழப்பெற்று உயிரினங்கள் வாழும் நிலப்பகுதி வெகுவாக குறைந்து விடும் அபாயம் உருவாகும்.

ஓசோன் படை தேய்வினை தடுப்பதும் ஓசோன் படையை பாதுகாப்பதும் பூமியின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நிலைநாட்டுவதற்கு எடுக்க வேண்டியதே முக்கிய விஷயமாகும்.

அதாவது, ஓசோன் படுகையை பாதுகாக்கும் சர்வதேச ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால், வரும் 2050-65 ஆண்டுக்கு இடையில் முற்றிலும் சீரடைந்த ஓசோன் படுகையை (அதாவது 1980ம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழலை) ஏற்படுத்த முடியும் என, உலக வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிற நாட்களைப் போல் எளிதில் கடந்து விடக்கூடிய ஒன்றாகவே இந்த நாள் இல்லாமல், நம்மால் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமோ? அதை மேற்கொள்ள வேண்டும் என்பதே, நம் ஒவ்வொருவரும் ஓசோன் படை தேய்வு மீட்புக்கு வழங்கும் முன்னெடுப்பு ஆகும்.

2022 ஆம் ஆண்டின் தீம் என்ன?

ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான 2022, சர்வதேச தினத்தின் கருப்பொருள் என்ன எனில், 'மான்ட்ரீல்

சாசனம்@35

பூமியில் உயிரைப் பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு' ஆகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Even though the new and new inventions we make for luxury and modernity bring some kind of benefit, we should remember at least once the environmental impact caused by the materials used to create them. In that order, through seminars and awareness programs about the ozone layer that protects us from ultraviolet rays, future generations
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X