கேஐஐடி பல்கலை.யில் உலக உணவுத் திட்ட இயக்குநர்!!

Posted By:

சென்னை; ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகத்துக்கு உலக உணவுத் திட்டத்தின் செயல் இயக்குநர் எர்த்தரின் கசின் அண்மையில் வருகை தந்தார்.

கேஐஐடி

அங்கு அவர் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்(கேஐஎஸ்எஸ்) கல்வி நிறுவனத்துக்கும் வருகை தந்தார்.

கேஐஐடி பல்கலை.யில் உலக உணவுத் திட்ட இயக்குநர்!!

வேண்டுகோள்

கடந்த 6 மாதத்துக்கு முன்பு எர்த்தரின் கசினை, கேஐஐடி பல்கலைக்கழகத்துக்கு வருகை தருமாறு கேஐஐடி பல்கலை. வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தா கேட்டுக்கொண்டார்.

25 ஆயிரம் குழந்தைகள்

அதைத் தொடர்ந்து தற்போது எர்த்தரின் கேஐஐடி வந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு 25 ஆயிரம் பழங்குடியின குழந்தைகள் படிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். பழங்குடி குழந்தைகளின் கனவுகளை நனவாக்க அருமையான பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்துள்ளார் டாக்டர் அச்சுதா சமந்தா.

கேஐஐடி பல்கலை.யில் உலக உணவுத் திட்ட இயக்குநர்!!

வளமான உலகம்

இதன் மூலம் இந்த உலகத்தை பசியில்லா, வறுமையில்லா, அமைதியான, வளமானதாக மாற்ற முடியும். இதற்காக உங்கள் உதவியை நாடுகிறோம் என்றார் அவர்.

பாராட்டு

கேஐஐடி, கேஐஎஸ்எஸ் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

வியப்பு

கேஐஐடி, கேஐஎஸ்எஸ் வளாகத்தையும் அவர் சுற்றிப் பார்த்து வியப்படைந்தார். அருமையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வியை அளித்து வருவதாக டாக்டர் அச்சுதா சமந்தாவுக்கு எர்த்தரின் பாராட்டு தெரிவித்தார்.

English summary
Her Excellency Ms. Ertharin Cousin, Executive Director, World Food Programme visited Kalinga Institute of Social Sciences (KISS) and Kalinga Institute of Industrial Technology (KIIT) on January 13, 2016. Dr. Achyuta Samanta, Founder, KIIT & KISS had requested her to visit the institution six months back. Her visit was in response to the invitation. She went around various departments and units of KISS and interacted with 25,000 tribal students. “You are the future of India as well as the world. Dr. Samanta has given you a tremendous platform to dream. KISS is the right platform to fulfill your dreams”, she told the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia