ஐஐடியில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை - பிரகாஷ் ஜவடேகர்

Posted By:

மும்பை : மும்பையில் நேற்று ஐஐடி குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐஐடியில் பெண்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஐஐடி நிலைக்குழுத் தலைவர் அசோக் மிஸ்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மற்ற கல்லூரிகளை விட ஐஐடியில் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மற்றக் கல்லூரிகளைப் போலவே ஐஐடியிலும் பெண்களின் சேர்க்கை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஐஐடியில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை -  பிரகாஷ் ஜவடேகர்

8 அல்லது 9% பெண்கள் மட்டுமே ஐஐடியில் கல்வி கற்கின்றனர். 2020ம் ஆண்டிற்குள் பெண்களில் சேர்க்கை 20% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஒவ்வொரு பாடத்திலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பெண்களின் சேர்க்கை அதிகப்படுத்தப்படும். ஆண்களைப் போலவே பெண்களும் அதிகம் ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும். மற்ற
கல்லூரியில் பெண்களின் சேர்க்கை அதிகம் இருப்பது போல ஐஐடியிலும் பெண்களின் சேர்கையை அதிகப்படுத்த வேண்டும் அதற்கான முயற்சிகள் வரும் கல்வியாண்டில் இருந்து எடுக்கப்படும் என ஐஐடி குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற கல்லூரியில் படிக்கும் பெண்களின் எண்ணிக்கையை விட ஐஐடியில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே பெண்கள் கல்வி கற்கின்றனர். மேலும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்கள் ஐஐடியில் சேருவதற்கு தகுதிப் பெற்றவர்கள் எனவும் ஐஐடி நிலைக்குழுத் தலைவர் அசோக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

English summary
Union HRD Minister Prakash Javadekar was present at the IIT Group meeting held in Mumbai yesterday, the admission of women in IIT will be increased.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia