விப்ரோ நிறுவனத்திலிருந்து 600 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

Posted By:

புது டெல்லி : விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் (2016) சுமார் 1 லட்சத்து 79 ஆயிரம் பணியாளர்க்ள் பணிபுரிந்தனர். இந்நிலையில் 600 பணியாளர்கள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விப்ரோ நிறுவனத்தின் பணி நீக்க எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தொடும் என யூகிக்கப்படுகிறது. கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையை சீரான முறையில் விப்ரோ நிறுவனம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.

அதன்படி வர்த்தக நோக்கங்கள், நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் மற்றும் வாடிக்கையாளர்கள் தேவைகள் ஆகியவற்றுடன் தனது பணியாளர்களை வரைமுறைப்படுத்தி கொள்கிறது.

பணி நீக்கம்

இந்த மதிப்பீட்மு முறையால் சில பணியாளர்களை விப்ரோ நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் மாறுபடும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பணி நீக்க எண்ணிக்கை உயரும் எனவும் யூகிக்கப்படுகிறது.

அறிக்கை வெளியிடப்படும்

விப்ரோவின் 4வது காலாண்டு மற்றும் முழுவருட பணியாளர்கள் எண்ணிக்கை பற்றி வருகிற 25ம் தேதி அறிக்கை வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விப்ரோவின் விரிவான செயலாக்க மதிப்பீட்டு முறையானது அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி ஊழியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளின் பணியாளர் விசா நடைமுறையில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் இந்திய ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சவால்களை சந்திக்கும் ஐ.டி நிறுவனம்

விப்ரோ நிறுவனம் தற்காலிக பணி விசாக்களை பயன்படுத்தி ஊழியர்களை பணிக்கு அனுப்புகிறது. வெளி நாடுகளில் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு விட்டதால் பணியாளர்களை அனுப்புவது மற்றும் பிற செலவுகளால் சவால்களை ஐ.டி நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளது.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியாலும், செயற்கை முறையிலான கருவிகளின் பயன்பாடுகளாலும் அதிக அளவில் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 60 சதவீத வருவாயை வடஅமெரிக்க சந்தையிலும், 20 சதவீத வருவாயை ஐரோப்பிய சந்தையிலும் மீதமுள்ள வருவாயை பிற நாடுகளில் இருந்தும் இந்திய ஐ.டி நிறுவனங்கள் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
The country's third largest software services firm Wipro is learnt to have fired hundreds of employees as part of its annual "performance appraisal".

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia