கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? நீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை ஏன் தமிழில் நடத்தவில்லை என எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் வெள்ளிக் கிழமைக்குள் (செப்டம்பர் 6) பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? நீதிமன்றம் சரமாரி கேள்வி!

முன்னதாக, மதுரையைச் சேர்ந்த தயானா, சென்னையைச் சேர்ந்த குழந்தைவேல், ரோஹிணி, விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார், ஞானவேல் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அம்மனுவில், சென்னை உயர்நீதிமன்ற தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

மேற்குறிப்பிட்ட அறிவிப்பாணையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. குறிப்பாக இந்தத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கேட்கப்பட்டிருந்தன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு என அறிவித்துள்ள நிலையில் தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் நடத்தியது ஏற்புடையதல்ல.

மேலும் இந்தத் தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் என்பது தொடர்பாக முறையாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கானது நீதிபதி எம்.தண்டபாணி அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தேர்வு எந்த மொழியில் நடத்தப்படும் என்பது குறித்து அறிவிப்பாணையில் எதுவும் குறிப்பிடாத நிலையில், தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட நுழைவுச் சீட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்வை தமிழ் வழியில் நடத்த வாய்ப்புகள் இருந்தும் கூட ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழில் தேர்வை நடத்தாமல் புறக்கணித்துள்ளது. இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வாதிடப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி, கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் வெள்ளிக் கிழமைக்குள் (செப்டம்பர் 6) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Why did not conduct a computer teacher exam in Tamil? Chennai high court
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+