வீணாகும் காகிதங்களை கலைப்பொருளாக மாற்றும் மாணவச் செல்வங்கள்!!

Posted By:

சென்னை: வீணாகும் காகிதக் குப்பைகளை கலைப்பொருளாகவும், பரிசுப் பொருளாகவும், அழகான காகித அலங்காரப் பொருளாகவும் மாணவச் செல்வங்கள் மாற்றி அசத்தினர்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு குருபரஹள்ளியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த அரிய செயலை நிகழ்த்தியது.

கலைப் பொருட்கள்

வீணாகும் பொருளைக் கொண்டு காகித அலங்காரப்பொருட்கள், குப்பைக் கூடைகள் உள்ளிட்ட பொருட்களைச் செய்யும் கலையை ஆர்ட் ஆஃப் கிவிங் என்ற மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வருகிறது.

பிரஸ் கிளப்

இந்தக் கலையைக் கற்ற மாணவர்கள் பெங்களூரு பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் முன்பு இந்த கலைப்பொருட்களை அண்மையில் செய்து காட்டினர்.

பூக்கள்,

பிளாஸ்டிக் பைகளை, அழகான பூக்களாகவும், பந்துகளாகவும், மாலைகளாகவும் மாற்றுகின்றனர்.

தேங்காய் மூடியும் மாறுகிறது

இதுபோன்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதங்கள், தேங்காய் மூடி, பரிசை சுற்றும் அலங்கார காகிதங்கள், காகித பிளேட்டுங்கள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் அழகான பொருட்களாக மாற்றுகின்றனர்.

தூய்மை நகரம்

பெங்களூரு நகரைத் தூய்மையான நகரமாக மாற்றும்பொருட்டு சாலையில் கிடக்கும் காகிதங்களை எடுத்துச் சென்று அழகான கலைப் பொருளாக மாற்றுகின்றனர்.

ஐஸ்கிரீம் குச்சிகள்

பஞ்சு, கூழாங்கற்கள், ஐஸ்கிரீம் குச்சிகள் போன்றவற்றையும் அவர்கள் மாற்றித் தருகின்றனர்.

உருவாகும் வண்ணங்கள்

அவர்களின் கைவண்ணத்தில் மிதக்கும் விளக்கு, காரில் தொங்க விடும் அலங்காரப் பொருள், சுவரில் தொங்கும் அலங்காரம், தொங்கும் பானை, பறவைக் கூடு, பூந்தொட்டி, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், காகித மாலை, செயற்கை மலர்கள் போன்றவற்றையும் அவர்கள் உருவாக்கித் தருகின்றனர்.

பாராட்டு

மாணவர்களின் நம்பிக்கையை பத்திரிகையாளர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

English summary
A boy carrying a gunny bag entered Press Club. As he dumped the bag on the ground, one could see only thrash items. Everyone was wondering as to why he was doing so. In minutes, he was joined by his school mates, who quickly picked up the thrash and in a few minutes, the entire WASTE was converted into WEALTH. If you are wondering what was unfolding? This was the way, the students of Government higher primary School, Kurubarahalli, Bengaluru demonstrated as to how the thrash could be reduced in Bengaluru and instead it be converted into Art.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia