அரசு ஆசிரியர் பணியில் சேர உதவும் டெட் தேர்வு தொடர்பான விரைவில் வருமா என்று என்று பி.எட். பட்டத்தைப் பெற்ற இளைஞர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள், இளைஞிகள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிடும் என நம்பிக்கையில் அவர்கள் வழிமீது விழிவைத்துக் காத்திருக்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (Teacher Eligibility Test) என்பது இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 1 முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் அந்தச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2011-ல் இந்திய அரசால் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னாதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்தத் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டது.
ஆக, அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இதற்காக கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அளவில் நாடு முழுவதும் (காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education# NCTE) வழிக்காட்டுகிறது.

பிப்ரவரி 4-ல் டெட் தேர்வு இறுதிக் கட்டத் தயாரிப்பில் ஆசிரியர்கள்...!!!
அந்த வழிகாட்டுதலை அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து மத்திய ஆட்சிப் பகுதிகளும் பின்பற்ற வேண்டும். ஆண்டுக்கொருமுறை அனைத்து மாநிலங்களின் கல்வி செயலர்களும் தகுதித் தேர்வு பற்றி விரிவான ஆலோசனை மற்றும் ஆண்டறிக்கையை என்.சி.டி.இ. கூட்டத்தில் அளிக்க வேண்டும்.
இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கீழ் நடத்தப்படும் இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamil Nadu Teachers Recruitment Board) என்பது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள், பல்தொழிநுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் தன்னாட்சி அமைப்பாக உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்திலுள்ள ஈவிகே சம்பத் மாளிகையின் மூன்று மற்றும் நான்காவது தளத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைக் களைவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் இந்தத் தேர்வாணையம் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி அமைக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கமானது, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை மற்றும் ஆசிரியர்களை சரியான நேரத்தில் பணியமர்த்துதல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களை ஆள் சேர்ப்பு செய்வதற்காக, 1987-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டது. இந்த பெருமைமிகு வாரியம், தற்போது ஆசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய மூன்று துறைகளுக்குப் பணியமர்த்தும் பொறுப்பைக் கொண்டு சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் சட்டப் படிப்பு. ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான நோடல் ஏஜென்சியாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு வகை பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகளுக்கும் இந்த வாரியம் பணியாற்றி வருகிறது. அதுதவிர, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்திடம் பின்வரும் வகைப் பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளிக் கல்வி: இடைநிலை வகுப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்,
ஓவிய ஆசிரியர்கள், ,பி.டி. உதவியாளர்கள், தையல் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள். முதுகலை உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தரம் - I
கணினி பயிற்றுனர்கள், தரம் - I, தொகுதி கல்வி அலுவலர்கள், ,வேளாண் பயிற்றுனர்கள், SCERT - விரிவுரையாளர்கள், SCERT - மூத்த விரிவுரையாளர்கள்
SCERT - இளநிலை விரிவுரையாளர்கள், உயர் கல்வி அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், சட்ட ஆய்வுகள் இயக்குநரகம்-அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் ஆகியோரையும் தேர்வு வாரியம் நியமிக்கிறது.
டெட் தேர்வை மிகச் சிறப்பான முறையில் நடத்தி ஆசிரியர்களை பணியில் அமர்த்தி வருவதால் ஆசிரியர் தேர்வு வாரியம் பிரபலம் அடைந்துள்ளது.
டெட் தேர்வு முறை
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டிஆர்பி (TRB-Teachers Recruitment Board) செவ்வனே நடத்தி வருகிறது.
* தாள்-I: முதல் தாளானது 1- 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் களுக்கானது. டீ.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுத தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களைக் கொண்டதாக இருக்கும்.
* தாள்-II: இரண்டாம் தாளானது 6 - 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வாக இருக்கும். கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுத தகுதியானவர்கள். இந்தத் தேர்வில் அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களுடன், கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டதாக வினாத்தாள் கேட்கப்படும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே வினாத்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலிலில் இருந்து 60 வினாக்கள் எழுப்பப்படும்
* முதல் தாளினை 1 முதல் 5 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள் எழுதவேண்டும். இரண்டாம் தாளினை 6 முதல் 8 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது இளங்கலைப் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் எழுத வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் தகுதிப் பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம். இறுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களும் இத்தேர்வில் கலந்து கொண்டு எழுதலாம். தேர்ச்சிப் பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும் வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.
இதனிடையே, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எப்போதும் வெளியிடும் என ஆவல் பி.எட். பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ), ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' என்று அழைக்கப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.
மேலும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறைகளின்படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வை நடத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் மிகச்சிறப்பான முறையில் நடத்தி வருகிறது. கடைசியாக 'டெட்' தேர்வு கடந்த ஆண்டின் (2023) பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை இந்தத் தேர்வை நடத்தவில்லை. இந்நிலையில் 2024-ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர உதவும் 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வானது வரும் ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்டவணையில் அறிவித்திருந்தது.
இதனால் தேர்வுக்காகக் காத்திருந்த பிஎட் பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளும் ஆவலாக இருந்தனர். இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெறும்போது ஆசிரியர் பணியில் சேர்ந்து தங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள அழர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ஏப்ரல் மாதம் நிறைவுறும் நிலையில் உள்ளது. ஆனால் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்த மாணவச் செல்வங்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சி-டெட் தேர்வு 2 முறை
சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் ஆசிரியர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் எனப்படும் என்சிடிஇ விதிமுறையைப் பின்பற்றி ஆண்டுக்கு 2 முறை மிகச்சரியான முறையில் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்கள் சரியான முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோலேவே, தமிழகத்திலுள்ள ஆசிரியர் தேர்வு வாரியமும் ஆண்டுக்கு 2 முறை 'டெட்' தேர்வை நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்வர வேண்டும். தற்போது தனியாருக்குச் சொந்தமான சுயநிதி பள்ளிகளில்கூட (செல்ப் பைனான்ஸ்) 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைத்தான் பணிக்கு தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான போட்டித்தேர்வுகளை எழுதுவதற்கு 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு விரைந்து தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பிஎட் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களும் என்று கோரிக்கை விடுத்துக் காத்திருக்கின்றனர்.
அவர்களது கோரிக்கையை டிஆர்பி எனப்படும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications












