பரீட்சை வருது.. வாட்ஸ்ஆப்பை கட் பண்ணுங்க.. ஆசிரியர்களுக்கு அதிரடி தடை!

Posted By:

சென்னை : பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி தொங்கி மார்ச் 30ம் தேதி முடியும் எனவும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 31ல் முடியும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அறித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 23/02/2017 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதியினை அறிவித்துள்ளார்.

முதன் முறையாக தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். பொதுத் தேர்வு அருகில் வந்து விட்டதால் பொதுத் தேர்வினைப் பற்றிய தகவல்கள் அதிகமாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

பரீட்சை வருது.. வாட்ஸ்ஆப்பை கட் பண்ணுங்க.. ஆசிரியர்களுக்கு அதிரடி தடை!

மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 12ம் வகுப்பிற்கான தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் வாட்ஸ்ஆப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை உபயோகப்படுத்தக் கூடாது என மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வினை சுமார் 9,30 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மூலம் மாவட்ட வாரியாக கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்தக் கூட்டத்தில் ஆசிரியர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்ற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வினை எந்த வித முறைகேட்டிற்கும் இடமின்றி நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி வாரியம் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுக் கூடங்களில் வாட்ஆப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களைக் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மண்டல பொறுப்பு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களை நாம் உபயோகிக்கும் போது அது நம்மையும் அறியாமல் அதிக நேரத்தை வீணாக்கி விடும். அது நம்மை அதிலேயே மூழ்கி விடச் செய்யும். எனவே ஆசாரியர்கள் தேர்வுக் கூடங்களில் மாணவர்கள் மீது முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வாட்ஸ்அப் தடை.
மாவணர்களுக்கு இருக்கின்ற அதே பரபரப்பு சற்றும் குறையாமல் ஆசிரியர்களுக்கும் இருக்கும். ஏனென்றால் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு பயிற்றுவித்தவர்கள் அவர்கள். அவர்களுக்குத் தான் மாணவர்கள் நன்றாகத் தேர்வு எழுத வேண்டும் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். கேள்வித் தாள் வந்த உடனே கேள்விகள் எளிதாக உள்ளனவா என ஆவலோடு பார்ப்பது மாணவர்களோடு ஆசிரியர்களும் தான்.

English summary
District education officers and Regional officers announced whatsapp to be banned in examination halls for teachers.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia